எஸ்றா 1

Ezra 1
அத்தியாயம் 1

சிறையிருப்பிலுள்ள மக்கள் திரும்பிச் செல்ல ராஜாவாகிய கோரேஸ் உதவுதல்

எரேமியாவின் வாயினால் யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறுவதற்காக, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருடத்திலே, யெகோவா பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியைத் தூண்டியதாலே அவன்: எரே 29:102 நாளாக 36:22-23எரே 25:12-14எஸ்றா 6:22எஸ்றா 7:27எரே 33:7-13நீதி 21:1எஸ்றா 5:13-15 பரலோகத்தின் தேவனாகிய யெகோவா பூமியின் தேசங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்ட எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ஏசா 45:12-13ஏசா 44:26தானி 5:19-21தானி 5:231 இராஜா 8:272 நாளாக 2:12தானி 2:21தானி 2:28 அவருடைய மக்கள் எல்லோரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனுடன் அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவானாக; எருசலேமில் வாசம்செய்கிற தேவனே தேவன். தானி 6:26எரே 10:10ஏசா 45:5அப் 10:36யோசு 1:9மத் 28:201 நாளாக 28:20தானி 2:47 அந்த மக்களில் மீதியாயிருக்கிறவன் எந்த இடத்தில் தங்கியிருக்கிறானோ, அந்த இடத்தின் மக்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாகக் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமல்லாமல், அவனுக்குப் பொன், வெள்ளி முதலிய பொருட்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து உதவி செய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி அறிவிப்பு செய்தான். 1 நாளாக 29:31 நாளாக 29:171 நாளாக 29:93 யோவா 1:6-8அப் 24:17பிரச 4:9-10எஸ்றா 2:68-70எஸ்றா 7:16-18 அப்பொழுது எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குப் போக யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவர்களும் ஆசாரியர்களும் லேவியர்களும் அல்லாமல், எவர்களுடைய ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லோரும் எழும்பினார்கள். எஸ்றா 1:12 நாளாக 36:22பிலி 2:132 கொரி 8:16யாக் 1:16-17நெகே 2:123 யோவா 1:11நீதி 16:1 அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற அனைவரும் மனஉற்சாகமாகக் காணிக்கை கொடுத்ததுமல்லாமல், வெள்ளிப் பொருட்களையும், பொன்னையும் மற்ற பொருட்களையும் மிருகஜீவன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் கொடுத்து, அவர்களுடைய கைகளைத் திடப்படுத்தினார்கள். 2 கொரி 9:7எஸ்றா 1:4எஸ்றா 7:15-16எஸ்றா 8:25-28எஸ்றா 8:33சங் 110:3 நேபுகாத்நேச்சார் 1 எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த யெகோவாவுடைய ஆலயத்து பொருட்களையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான். 2 நாளாக 36:72இராஜா 24:13எஸ்றா 5:14எஸ்றா 6:52 நாளாக 36:102 நாளாக 36:182இராஜா 25:13-16தானி 1:2 அவைகளைப் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையினால் எடுக்கச்செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுத்தான். எஸ்றா 5:14எஸ்றா 1:11எஸ்றா 5:16ஆகா 1:1ஆகா 1:14ஆகா 2:2-4சகரி 4:6-10 அவைகளின் தொகையாவது: பொன் பாத்திரங்கள் 30, வெள்ளிப்பாத்திரங்கள் 1,000, கத்திகள் 29 1 இராஜா 7:502 நாளாக 24:142 நாளாக 4:112 நாளாக 4:21-222 நாளாக 4:8எஸ்றா 8:27மத் 10:29-31மத் 14:8 பொற்கிண்ணங்கள் 30 வெள்ளிக் கிண்ணங்கள் 410, மற்றப் பொருட்கள் 1,000 பொன் வெள்ளிப் பொருட்களெல்லாம் 5,400, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகும்போது எடுத்துக் கொண்டுபோனான். 2 தீமோ 2:19-21மத் 1:11-12ரோம 9:23