அழிவின் நாள்
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரே 1:2எரே 1:4எரே 2:1 நீ பெண்ணைத் திருமணம் செய்யவேண்டாம்; இவ்விடத்தில் உனக்கு மகன்களும் மகள்களும் இருக்கவேண்டாம் என்றார். 1 கொரி 7:26-27ஆதி 19:14லூக் 21:23லூக் 23:29மத் 24:19 இவ்விடத்தில் பிறக்கிற மகன்களையும் மகள்களையும், இந்தத் தேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற தகப்பன்களையும் குறித்துக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், எரே 16:5எரே 16:9எரே 6:21 மகா கொடிய வியாதிகளால் இறப்பார்கள், அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்செய்வாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் இறந்து போவார்கள்; அவர்களுடைய உடல் வானத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும். எரே 25:33சங் 83:10எரே 9:22எரே 15:2-3எரே 22:18-19எரே 34:20செப்ப 1:172இராஜா 9:10 ஆகையால், நீ துக்கவீட்டில் நுழையாமலும், புலம்புவதற்க்குப்போகாமலும் அவர்களுக்கு பரிதாபப்படாமலும் இருப்பாயாக என்று யெகோவா சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த மக்களைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். எசேக் 24:16-23ஏசா 27:11உபா 31:17எரே 15:1-4எரே 16:6-7வெளி 6:42 நாளாக 15:5-6சகரி 8:10 இந்த தேசத்தில் பெரியோரும் சிறியோரும் இறப்பார்கள்; அவர்களை அடக்கம்செய்வாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்களுக்காக கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை. உபா 14:1எரே 41:5எரே 47:5லேவி 19:28ஏசா 22:12எரே 48:37எசேக் 9:5-6ஏசா 24:2 இறந்தவர்களுக்காக ஏற்படுகிற துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு ஆகாரம் பரிமாறப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவோ, ஒருவனுடைய தாய்க்காவோ துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை. எசேக் 24:17ஓசி 9:4உபா 26:14யோபு 42:11நீதி 31:6-7 நீ அவர்களுடன் அமர்ந்து சாப்பிட விருந்துவீட்டிலும் நுழையாதே. பிரச 7:2-4எரே 15:17ஆமோ 6:4-6ஏசா 22:12-141 கொரி 5:11எபே 5:11லூக் 17:27-29மத் 24:38 ஏனெனில், இதோ, இவ்விடத்தில் நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணமகனின் சத்தத்தையும், மணமகளின் சத்தத்தையும் ஓயச்செய்வேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். எசேக் 26:13ஓசி 2:11எரே 25:10எரே 7:34ஏசா 24:7-12வெளி 18:22-23 நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த மக்களுக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: யெகோவா எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கை ஏன் சொல்லவேண்டும் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகச் செய்த எங்கள் பாவம் என்ன என்றும் கேட்பார்களானால், எரே 5:191 இராஜா 9:8-9உபா 29:24-25எரே 13:22ஓசி 12:8எரே 2:35எரே 22:8-9 நீ அவர்களை நோக்கி: உங்கள் முற்பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதெய்வங்களைப் பின்பற்றி, அவர்களை வணங்கி, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே. சங் 106:35-411 இராஜா 9:91 பேது 4:3உபா 29:25-26எசேக் 11:21எரே 22:9எரே 5:7-9எரே 8:2 நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப் பார்க்கிலும் அதிகக் கேடாக நடந்தீர்களே; இதோ, உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக்கேளாமல், உங்கள் பொல்லாத இருதயக் கடினத்தின்படி நடக்கிறீர்கள். எரே 13:10எரே 7:26பிரச 9:3எரே 9:141 சாமு 15:23நியாயாதி 2:19எரே 7:24மாற் 7:21 ஆகவே, உங்களை இந்தத் தேசத்திலிருந்து நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நிய தெய்வங்களை வணங்குவீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை. உபா 28:36உபா 4:26-28எரே 15:14எரே 17:42 நாளாக 7:20உபா 30:17-18லேவி 18:27-28உபா 28:63-65 ஆகவே, இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம் செய்யாமல், எரே 23:7-8உபா 15:15யாத் 20:2ஓசி 3:4-5மீகா 6:4ஏசா 43:18-19 இஸ்ரவேல் மக்களை வடதேசத்திலும், தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரவழைத்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்செய்வார்கள்; நான் அவர்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 24:6எரே 3:18எரே 32:37ஆமோ 9:14எசேக் 36:24எசேக் 39:28ஏசா 11:11-16சங் 106:47 இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக் குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள். ஆப 1:14-15ஆமோ 4:2மீகா 7:2வெளி 6:15-171 சாமு 26:20ஆமோ 9:1-3ஆதி 10:9ஏசா 24:17-18 என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்திற்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை; அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை. நீதி 15:3எரே 23:24நீதி 5:21சங் 90:8யோபு 34:21-221 கொரி 4:52 நாளாக 16:9எபி 4:13 முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்திற்கும், அவர்களுடைய பாவத்திற்கும் இரட்டிப்பாக நீதி செய்வேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் பங்கைச் சீயென்று அருவருக்குமளவுக்கு தங்கள் காரியங்களின் அசுத்தமான விக்கிரகங்களினால் நிரப்பினார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 40:2எண் 35:33-34எசேக் 11:21எரே 17:18எரே 2:7வெளி 18:6எசேக் 11:18எசேக் 43:7-9 என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய யெகோவாவே, அந்நியமக்கள் பூமியின் கடைசிமுனைகளிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் முற்பிதாக்கள் பிரயோஜனமில்லாத வீணான விக்கிரங்களைக் கைப்பற்றினார்கள் என்பார்கள். ஏசா 25:4நாகூ 1:7ஏசா 2:2-3எரே 17:171 பேது 1:18ஆப 2:18-19ஏசா 44:10எரே 10:14-15 மனிதன் தனக்குத் தெய்வங்களை உண்டாக்கலாமோ? அவைகள் தெய்வங்கள் அல்லவே. ஏசா 37:19சங் 115:4-8கலா 4:8அப் 19:26ஓசி 8:4-6ஏசா 36:19எரே 2:11சங் 135:14-18 ஆதலால் இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியவைப்பேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரிவிப்பேன்; என் பெயர் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள். சங் 9:16எரே 33:2சங் 83:18ஆமோ 5:8யாத் 15:3ஏசா 43:3யாத் 14:4யாத் 9:14-18