யோனா 1

Jonah 1
அத்தியாயம் 1

யோனா யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி ஓடுதல்

அமித்தாயின் மகனாகிய யோனாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்: லூக் 11:32லூக் 11:29-302இராஜா 14:25மத் 16:4மத் 12:39-41 நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கம் செய்; அவர்களுடைய அக்கிரமம் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது என்றார். ஆதி 18:20-21ஆதி 10:11ஏசா 58:1நாகூ 1:1யோனா 3:2யோனா 4:11செப்ப 2:13-15எசேக் 3:5-9 அப்பொழுது யோனா யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போவதற்கா எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப்போகிற ஒரு கப்பலைக்கண்டு, கட்டணம் செலுத்தி, தான் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகும்படி, அவர்களோடு தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான். சங் 139:7-12யோசு 19:46ஆதி 4:162 தெச 1:9அப் 9:36அப் 9:431 இராஜா 19:3ஏசா 23:1 யெகோவா கடலின்மேல் பெருங்காற்றை அனுப்பினார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமளவிற்கு பெரிய கொந்தளிப்பு உண்டானது. சங் 107:23-31மத் 8:24-27ஆமோ 4:13யாத் 14:21சங் 135:7யாத் 10:19யாத் 15:10எண் 11:31 அப்பொழுது கப்பற்காரர்கள் பயந்து, அவனவன் தன்தன் தெய்வங்களை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தைக் குறைப்பதற்காக கப்பலில் இருந்த சரக்குகளைக் கடலில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோ கப்பலின் கீழ்த்தளத்தில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, ஆழ்ந்து தூங்கினான். அப் 27:18-19எரே 2:281 இராஜா 18:26ஏசா 45:20நியாயாதி 16:19யோனா 1:6லூக் 22:45-461 சாமு 24:3 அப்பொழுது மாலுமி அவனிடம் வந்து: நீ தூங்கிக் கொண்டிருக்கிறது என்ன? எழுந்திருந்து உன்னுடைய தெய்வத்தை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாமலிருக்க உன்னுடைய தெய்வம் ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான். யோனா 3:9சங் 107:28-292 சாமு 12:22எபே 5:14மாற் 4:37-41சங் 107:12-13அப் 21:13ஆமோ 5:15 அவர்கள் யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நாம் தெரிந்துகொள்ள சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பெயருக்குச் சீட்டு விழுந்தது. நீதி 16:33யோசு 7:13-18எண் 32:231 சாமு 10:20-211 சாமு 14:41-42அப் 13:19யோசு 7:10ஏசா 41:6-7 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழில் என்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள். ஆதி 47:31 சாமு 30:13யாக் 5:16யோசு 7:191 சாமு 14:43 அதற்கு அவன்: நான் எபிரெயன்; கடலையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரிடம் பயபக்தியுள்ளவன் என்றான். சங் 146:5-6நெகே 9:6சங் 136:26சங் 95:5-6நெகே 1:4ஆதி 14:132இராஜா 17:252இராஜா 17:28 அவன் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனிதர்கள் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள். யோனா 1:3யோபு 27:222 சாமு 24:3தானி 5:6-9யோவா 19:8யோசு 7:25 பின்னும் கடல் அதிகமாகக் கொந்தளித்துக்கொண்டிருந்ததால், அவர்கள் அவனை நோக்கி: கடல் நமக்காக அமைதியாகும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். 1 சாமு 6:2-32 சாமு 21:1-6மீகா 6:6-72 சாமு 24:11-13 அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்து கடலிலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது கடல் அமைதியாக இருக்கும்; என்னால்தான் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான். 2 சாமு 24:171 நாளாக 21:17யோசு 7:12யோவா 11:50அப் 27:24பிரச 9:18யோசு 7:20-21 அந்த மனிதர்கள் கரைசேருவதற்காக வேகமாகத் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் கடல் மிகவும் மும்முரமாகக் கொந்தளித்துக் கொண்டேயிருந்ததால் அவர்களால் முடியாமற்போனது. நீதி 21:30யோபு 34:29 அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: ஆ யெகோவாவே, இந்த மனிதனுடைய ஜீவனுக்காக எங்களை அழித்துப்போடாதிரும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதிரும்; தேவரீர் யெகோவா; உமக்குச் சித்தமாக இருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி, சங் 115:3சங் 135:6உபா 21:8எபே 1:11சங் 107:28தானி 4:34-35யோனா 1:16யோனா 1:5 யோனாவை எடுத்துக் கடலிலே போட்டுவிட்டார்கள்; கடல் தன்னுடைய மும்முரத்தைவிட்டு அமைதியானது. லூக் 8:24சங் 93:3-4சங் 107:29சங் 89:9மத் 8:26சங் 65:7யோசு 7:24-262 சாமு 21:8-9 அப்பொழுது அந்த மனிதர்கள் யெகோவாவுக்கு மிகவும் பயந்து, யெகோவாவுக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைச் செய்தார்கள். தானி 6:26சங் 116:14ஆதி 8:20சங் 107:22சங் 50:14அப் 5:11தானி 4:34-37ஏசா 26:9 யோனாவை விழுங்குவதற்காக ஒரு பெரிய மீனை யெகோவா ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீனின் வயிற்றிலே யோனா இரவுபகல் மூன்றுநாட்கள் இருந்தான். மத் 12:40லூக் 11:30மத் 16:4சங் 104:25-26ஆப 3:2யோனா 4:6ஆதி 1:21