முறியடிக்கப்பட்ட இராஜாக்கள்
யோர்தான் நதிக்கு அந்தப் புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவங்கி எர்மோன் மலைவரைக்கும், கிழக்கே சமபூமி எல்லைகளிலெல்லாம் உள்ள ராஜாக்களை இஸ்ரவேலர்கள் முறியடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள். உபா 3:8-9நியாயாதி 11:18யோசு 1:15எண் 21:13எண் 21:24உபா 2:24உபா 4:48ஏசா 16:2 அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேர் துவங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத் உட்பட அம்மோனியர்களின் எல்லையான யாப்போக்கு ஆறுவரையுள்ள தேசத்தையும், ஆதி 32:22உபா 2:24-37உபா 3:6-17நியாயாதி 11:13நியாயாதி 11:22நெகே 9:22எண் 21:23-30சங் 135:11 சமவெளி துவங்கிக் கிழக்கே இருக்கிற கின்னரேத் கடல்வரைக்கும் பெத்யெசிமோத் வழியாகக் கிழக்கே இருக்கிற சமவெளியின் கடலாகிய உப்புக்கடல்வரைக்கும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குக் கீழாக இருக்கிற தேசத்தையும் ஆட்சிசெய்தான். உபா 3:17யோசு 11:2யோசு 13:20உபா 4:49ஆதி 14:3ஆதி 19:25யோவா 6:1யோசு 15:2 இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்து, உபா 1:4உபா 3:10-11யோசு 13:12எண் 21:33-35உபா 3:1-7 எர்மோன் மலையையும் சல்காயிவையும், கெசூரியர்கள், மாகாத்தியர்கள் எல்லைவரைக்கும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாக இருந்த பாதிக் கீலேயாத்வரைக்கும் இருக்கும் பாசான் அனைத்தையும் ஆட்சிசெய்தான். உபா 3:141 சாமு 27:8யோசு 13:11உபா 3:8-102இராஜா 25:232 சாமு 13:372 சாமு 15:82 சாமு 23:34 அவர்களைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசேயும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தார்கள்; அந்த தேசத்தைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தான். எண் 32:33உபா 3:11-17லூக் 22:29-42எண் 21:24-35எண் 32:29யோசு 13:8-32 யோர்தானுக்கு இந்தப் புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத் துவங்கி சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைவரைக்கும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த பகுதிகளிலும் வனாந்திரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும், யோசு 11:17யோசு 11:23உபா 11:23-24உபா 2:1உபா 2:4ஆதி 14:6ஆதி 32:3ஆதி 36:20 யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தவர்களுமான ராஜாக்கள் யாரென்றால்: யோசு 11:16யோசு 10:40யோசு 9:1உபா 7:1உபா 9:1யாத் 23:23யாத் 3:8ஆதி 15:18-21 எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயீயின் ராஜா ஒன்று, யோசு 8:29-35யோசு 6:2-21யோசு 8:1யோசு 8:17 எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று, யோசு 10:23யோசு 10:3யோசு 10:36-37 யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று, யோசு 10:31-32யோசு 10:3-23 எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று, யோசு 10:33யோசு 10:23யோசு 10:3யோசு 15:39 தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று, யோசு 10:38யோசு 10:3யோசு 15:36 ஓர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று, எண் 21:1எண் 14:45எண் 21:3 லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று, யோசு 10:29-301 சாமு 22:1 மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று, யோசு 10:28நியாயாதி 1:22யோசு 8:17ஆதி 12:8ஆதி 28:19 தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று, 1 இராஜா 4:10யோசு 15:34யோசு 19:13 ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று, 1 சாமு 4:1ஏசா 33:9யோசு 13:4யோசு 19:30 மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று, யோசு 11:1நியாயாதி 4:2யோசு 11:10-11 சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று, யோசு 11:1யோசு 19:15யோசு 19:25 தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று, யோசு 17:111 இராஜா 4:122இராஜா 23:29-30நியாயாதி 5:19 கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலைச் சார்ந்த யொக்னியாமின் ராஜா ஒன்று, யோசு 19:37யோசு 21:321 சாமு 25:2ஏசா 35:2யோசு 15:23யோசு 15:55யோசு 19:11யோசு 20:7 தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலைச்சேர்ந்த கோயிமின் ராஜா ஒன்று, யோசு 11:2ஆதி 14:1-2ஏசா 9:1யோசு 17:11யோசு 4:19யோசு 5:9-10 திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லோரும் முப்பத்தொரு ராஜாக்கள். 1 இராஜா 16:232இராஜா 15:14உபா 7:24