நியாயாதிபதிகள் 4

Judges 4
அத்தியாயம் 4

பெண் நியாயாதிபதியும் தீர்க்கதரிசியுமாகிய தெபொராள்

ஏகூத் இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பக் யெகோவாவுடைய பார்வைக்குத் தீமையானதைச் செய்துவந்தார்கள். எரே 5:3லேவி 26:23-25நியாயாதி 10:6நியாயாதி 2:11நியாயாதி 2:19-20நியாயாதி 3:12நியாயாதி 3:7நியாயாதி 6:1 ஆகவே, யெகோவா அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியர்களுடைய ராஜாவின் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவனுடைய தளபதிக்கு சிசெரா என்று பெயர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே 1 குடியிருந்தான். நியாயாதி 4:13நியாயாதி 4:16யோசு 11:11 சாமு 12:9சங் 83:9நியாயாதி 10:7யோசு 11:10-11ஏசா 50:1 அவனுக்குத் 900 இரும்பு ரதங்கள் இருந்தன; அவன் இஸ்ரவேல் மக்களை இருபது வருடங்கள் கொடுமையாக ஒடுக்கினான்; இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டார்கள். நியாயாதி 1:19சங் 106:42நியாயாதி 3:91 சாமு 7:8உபா 28:29உபா 28:33உபா 28:47-48நியாயாதி 10:16 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள். யாத் 15:202இராஜா 22:14கலா 3:28லூக் 2:361 கொரி 11:5அப் 21:9யோவே 2:28-29மீகா 6:4 அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சை மரத்தின் கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் மக்கள் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள். யாத் 18:191 சாமு 1:1உபா 17:8-12யாத் 18:13ஆதி 35:8எரே 31:15யோசு 16:2யோசு 18:22 அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் மகன் பாராக்கை வரவழைத்து: நீ நப்தலி மனிதர்களிலும், செபுலோன் மனிதர்களிலும் 10,000 பேரை அழைத்துக்கொண்டு, தாபோர் மலைக்குப் போகவேண்டும் என்றும், அப் 13:47எபி 11:32நியாயாதி 8:18யோசு 19:32யோசு 19:37யோசு 21:32சங் 7:61 சாமு 10:3 நான் யாபீனின் தளபதியாகிய சிசெராவையும், அவனுடைய ரதங்களையும், அவனுடைய படைகளையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புகொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள். 1 இராஜா 18:40எசேக் 38:10-16நியாயாதி 5:21சங் 83:9-101 சாமு 24:101 சாமு 24:18யாத் 14:4யாத் 21:13 அதற்குப் பாராக்: நீ என்னோடு வந்தால் போவேன்; என்னோடு வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். யாத் 4:10-14மத் 14:30-31 அதற்கு அவள்: நான் உன்னோடு நிச்சயமாக வருவேன்; ஆனாலும் நீ போகிற பயணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; யெகோவா சிசெராவை ஒரு பெண்ணின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழுந்து, பாராக்கோடு கேதேசுக்குப் போனாள். 1 சாமு 2:302 சாமு 20:21-22நியாயாதி 2:14நியாயாதி 4:17-22நியாயாதி 5:24-27நியாயாதி 9:542 நாளாக 26:18 அப்பொழுது பாராக்: செபுலோன் மனிதர்களையும் நப்தலி மனிதர்களையும் கேதேசுக்கு வரவழைத்து, தனக்குப் பின்செல்லும் பத்தாயிரம்பேர்களோடு போனான்; தெபொராளும் அவனோடு போனாள். நியாயாதி 5:18நியாயாதி 5:151 சாமு 25:27யாத் 11:8நியாயாதி 4:141 இராஜா 20:11நியாயாதி 4:6 கேனியனான ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஓபாபின் சந்ததியாக இருக்கிற கேனியர்களை விட்டுப் பிரிந்து, கேதேசின் அருகில் இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலி மரங்களின் அருகே தன்னுடைய கூடாரத்தைப் போட்டிருந்தான். நியாயாதி 1:16யோசு 19:33எண் 10:29யோசு 19:37யாத் 3:1யாத் 18:1யாத் 2:18நியாயாதி 4:6 அபினோகாமின் மகன் பாராக் தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது, சங் 89:12எரே 46:18யோசு 19:12யோசு 19:34நியாயாதி 4:6 சிசெரா தொள்ளாயிரம் இரும்பு ரதங்களாகிய தன்னுடைய எல்லா ரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா மக்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிற்கு வரவழைத்தான். நியாயாதி 4:2-3நியாயாதி 4:7 அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; யெகோவா சிசெராவை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; யெகோவா உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னே 10,000 பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள். 2 சாமு 5:24உபா 9:3ஏசா 52:12சங் 68:7-81 சாமு 9:26ஆதி 44:4மீகா 2:13ஆதி 19:14 யெகோவா சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் படைகள் அனைத்தையும் பாராக்குக்கு முன்பாகக் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டு இறங்கி கால்நடையாக ஓடிப்போனான். யோசு 10:10சங் 83:9-102 நாளாக 13:15-172இராஜா 7:6எபி 11:32நியாயாதி 5:20-21 பாராக் ரதங்களையும் படையையும் யூதர் அல்லாதவர்களுடைய அரோசேத்வரை துரத்தினான்; சிசெராவின் படையெல்லாம் பட்டயக்கூர்மையினால் விழுந்தது; ஒருவனும் மீதியாக இருக்கவில்லை. யாக் 2:13ரோம 2:12ஏசா 43:17யோசு 10:19-20யோசு 11:8லேவி 26:7-8சங் 104:35சங் 83:9 சிசெரா கால்நடையாகக் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டிற்கும் சமாதானம் உண்டாயிருந்தது. ஏசா 57:21சங் 37:35-36சங் 69:22ஆமோ 5:19-20நியாயாதி 5:24நியாயாதி 5:6யோபு 12:19-21யோபு 18:7-12 யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என்னுடைய ஆண்டவனே, என்னிடத்தில் உள்ளே வாரும், பயப்பட வேண்டாம் என்று அவனிடம் சொன்னாள்; அப்படியே அவள் கூடாரத்தின் உள்ளே வந்தபோது, அவனை ஒரு போர்வையினாலே மூடினாள். 2இராஜா 6:19 அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு, தாகமாக இருக்கிறேன் என்றான்; அவள் பால் இருக்கும் தோல்பையை திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள். நியாயாதி 5:25-26யோவா 4:71 இராஜா 17:10ஆதி 24:43ஏசா 41:17 அப்பொழுது அவன்: நீ கூடாரவாசலிலே நின்று, எவராகிலும் ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடம் கேட்டால், இல்லை என்று சொல் என்றான். யோசு 2:3-52 சாமு 17:20 பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து தன்னுடைய கையிலே சுத்தியைப் பிடித்துக்கொண்டு, மெதுவாக அவனுடைய அருகில் வந்து, அவனுடைய தலையின் பக்கவாட்டில் அந்த ஆணியை அடித்தாள்; அது ஊடுருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அவன் இறந்துபோனான். 1 கொரி 1:27நியாயாதி 5:26-27சங் 3:7நியாயாதி 3:211 கொரி 1:191 சாமு 17:431 சாமு 17:49-50நியாயாதி 15:15 பின்பு சிசெராவை பின்தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்: வாரும், நீ தேடுகிற மனிதனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவனுடைய தலையில் அடித்திருந்தது. 2 சாமு 17:10-152 சாமு 17:3 இப்படி தேவன் அந்த நாளிலே கானானியர்களின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தினார். நெகே 9:24சங் 18:47சங் 18:391 நாளாக 22:181 கொரி 15:28எபி 11:33சங் 47:3சங் 81:14 இஸ்ரவேல் மக்களின் கை கானானியர்களின் ராஜாவாகிய யாபீனை அழிக்கும்வரைக்கும் அவன்மேல் பெலத்துக்கொண்டேயிருந்தது. 1 சாமு 3:12