லேவியராகமம் 12

Leviticus 12
அத்தியாயம் 12

குழந்தைப் பிறப்பிற்குப்பின் கைக்கொள்ளவேண்டியவை

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஒரு பெண் கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் மாதவிடாய் உள்ள பெண் விலக்கமாக இருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாட்கள் தீட்டாயிருப்பாள். லூக் 2:22லேவி 15:19யோபு 14:4யோபு 15:14யோபு 25:4லேவி 18:19ரோம 5:12-19ஆதி 1:28 எட்டாம் நாளிலே அந்த குழந்தையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படக்கடவது. லூக் 2:21லூக் 1:59யோவா 7:22-23ஆதி 17:11-12பிலி 3:5கொலோ 2:11கலா 3:17கலா 5:3 பின்பு அவள் முப்பத்துமூன்று நாட்கள் தன் இரத்தச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் முடியும்வரை பரிசுத்தமான யாதொரு பொருளைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரவும் கூடாது. ஆகா 2:13லேவி 15:25-28லூக் 2:22-23 பெண்குழந்தையைப் பெறுவாளென்றால், அவள், இரண்டு வாரங்கள் மாதவிடாய் உள்ள பெண்ணைப்போலத் தீட்டாயிருந்து, பின்பு அறுபத்தாறு நாட்கள் இரத்தச் சுத்திகரிப்பு நிலையிலே இருப்பாளாக. 1 தீமோ 2:14-15ஆதி 3:13லேவி 12:2லேவி 12:4 “அவள் ஆண்குழந்தையையாவது பெண்குழந்தையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் முடிந்தபின்பு, அவள் ஒருவயதுடைய ஆட்டுக்குட்டியை சர்வாங்கதகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரணபலியாகவும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள். லூக் 2:221 பேது 1:18-192 கொரி 5:21யோவா 1:29லேவி 15:29எபி 7:26லேவி 1:10-13லேவி 12:2 அதை அவன் யெகோவாவுடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் இரத்தப்போக்கின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்குழந்தையையாவது பெண்குழந்தையையாவது பெற்றவளைக்குறித்த விதிமுறைகள். 1 கொரி 7:14கலா 3:28எபி 9:12-14யோபு 1:5யோபு 14:4லேவி 1:4லேவி 15:28-30லேவி 4:20 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்கு சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஏதாவது ஒன்றை சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல்” என்றார். லேவி 5:7லேவி 4:26லேவி 1:14லேவி 14:22லூக் 2:22-242 கொரி 8:9லேவி 15:14லேவி 15:29