ஆசாரியர்களுக்கான நடைமுறைகள்
பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் மக்களில் இறந்துபோன ஒருவருக்காகத் தங்களைத் தீட்டுப்படுத்தக்கூடாதென்று அவர்களோடே சொல். எசேக் 44:25லேவி 10:6-7லேவி 19:28லேவி 21:11எண் 19:14எண் 19:16ஓசி 5:1மல்கி 2:1 தன் தாயும், தன் தகப்பனும், தன் மகனும், தன் மகளும், தன் சகோதரனும், 1 தெச 4:13லேவி 18:6 ஆணுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னிப்பெண்ணான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கிய உறவுமுறையான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம். தன் மக்களுக்குள்ளே பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தக்கூடாது. 1 எசேக் 24:16-17 அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், தங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக 2. உபா 14:1எசேக் 44:20லேவி 19:27-28ஆமோ 8:10ஏசா 15:2ஏசா 22:12எரே 16:6எரே 48:37 தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராக இருப்பார்களாக; அவர்கள் யெகோவாவின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராக இருக்கவேண்டும். லேவி 18:21லேவி 3:111 பேது 2:9யாத் 28:36யாத் 29:44எசேக் 44:7எஸ்றா 8:28ஏசா 52:11 அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும், கற்பை இழந்தவளையாகிலும் திருமணம் செய்யக்கூடாது; தன் கணவனாலே விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்யக்கூடாது. லேவி 21:13-14எசேக் 44:221 தீமோ 3:11லேவி 21:8உபா 24:1-4ஏசா 50:1 அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவாகிய நான் பரிசுத்தராக இருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாக இருப்பானாக. லேவி 20:7-8லேவி 11:44-45லேவி 19:2லேவி 21:6எபி 7:26யோவா 17:19யாத் 19:10யாத் 19:14 ஆசாரியனுடைய மகள், வேசித்தனம்செய்து, தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறாள்; அவள் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவள். ஆதி 38:24லேவி 19:291 சாமு 2:171 சாமு 2:341 சாமு 3:13-141 தீமோ 3:4-5எசேக் 9:6ஏசா 33:14 “தன் சகோதரர்களுக்குள்ளே பிரதான ஆசாரியனாக தன் தலையில் அபிஷேகத்தைலம் ஊற்றப்பட்டவனும், அவனுக்குரிய உடைகளை அணியும்படி பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறவன் எவனோ, அவன் தன் தலைப்பாகையை எடுக்காமலும், தன் உடைகளைக் கிழித்துக்கொள்ளாமலும், லேவி 10:6-7லேவி 16:32மத் 26:65யாத் 29:29-30லேவி 8:12எண் 35:252 சாமு 15:30எஸ்த 6:12 சடலம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும், தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும், எண் 19:14லேவி 19:28லேவி 21:1-2எண் 6:72 கொரி 5:16லூக் 14:26லூக் 9:59-60மத் 12:46-50 பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேக தைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் யெகோவா. லேவி 10:7யாத் 28:36யாத் 29:6-7லேவி 8:9-12அப் 10:38ஏசா 61:1லேவி 8:30 கன்னியாக இருக்கிற பெண்ணை அவன் திருமணம்செய்யவேண்டும். 2 கொரி 11:2எசேக் 44:22லேவி 21:7வெளி 14:4 விதவையையானாலும் விவாகரத்து செய்யப்பட்டவளையானாலும் கற்புக்குலைந்தவளையானாலும் வேசியையானாலும் திருமணம்செய்யாமல், தன் மக்களுக்குள்ளே ஒரு கன்னிகையைத் திருமணம்செய்யக்கடவன். லேவி 21:7எசேக் 44:22 அவன் தன் வித்தைத் தன் மக்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல் என்றார். 1 கொரி 7:14ரோம 11:16எஸ்றா 2:62எஸ்றா 9:2ஆதி 18:19லேவி 21:8மல்கி 2:11மல்கி 2:15 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே உடல் ஊனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரக்கூடாது. லேவி 10:3எண் 16:5சங் 65:41 தெச 2:101 தீமோ 3:2எபி 7:26லேவி 21:21லேவி 21:6 ஊனமுள்ள ஒருவனும் அணுகக்கூடாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட உறுப்புள்ளவனானாலும், 1 தீமோ 3:2-3லேவி 22:19-251 தீமோ 3:7ஏசா 56:10மத் 23:16-17மத் 23:19தீத் 1:10தீத் 1:7 கால் ஒடிந்தவனானாலும், கை ஒடிந்தவனானாலும், கூன் விழுந்தவனானாலும், குள்ளமானவனானாலும், கண் பார்வை இழந்தவனானாலும், சொறியனானாலும், அசடு உள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகக்கூடாது. உபா 23:1ஏசா 56:3 ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் உடல் ஊனமுள்ள ஒருவனும் யெகோவாவின் தகனபலிகளைச் செலுத்த வரக்கூடாது; அவன் உடல் ஊனமுள்ளவனாக இருப்பதால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்த வரக்கூடாது. லேவி 21:6லேவி 21:17லேவி 21:8 அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் சாப்பிடலாம். லேவி 2:31 கொரி 9:13லேவி 2:10லேவி 22:10-13லேவி 24:8-9லேவி 6:16-17லேவி 7:1எண் 18:19 ஆனாலும் அவன் உடல் ஊனமுள்ளவன், ஆகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தின் அருகில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல்” என்றார். லேவி 21:12யாத் 30:6-8யாத் 40:26-27எசேக் 44:9-14லேவி 15:31 மோசே இவைகளை ஆரோனோடும் அவன் மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொன்னான். 1 தீமோ 1:182 தீமோ 2:2கொலோ 4:17மல்கி 2:1-7