விசுவாசத்தின் பாடம்
பின்பு இயேசு தம்முடைய சீடர்களை நோக்கி: இடறல்கள் வராமல் இருக்கமுடியாது, ஆனாலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! மத் 18:7ரோம 14:131 கொரி 11:191 கொரி 8:13ரோம 16:17மத் 16:231 கொரி 10:32ரோம 14:20-21 அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறதைவிட, அவனுடைய கழுத்தில் எந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் கடலில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாக இருக்கும். மாற் 9:42மத் 18:14மத் 18:3-6மத் 18:101 கொரி 8:11-12மத் 26:241 கொரி 9:222 பேது 2:1-3 உங்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனம் வருந்தினால், அவனுக்கு மன்னிப்பாயாக. லேவி 19:17மத் 18:21மத் 18:15-17நீதி 9:82 நாளாக 19:6-7யாக் 5:19நீதி 27:5உபா 4:9 அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனம் வருந்துகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார். கொலோ 3:12-13மத் 18:21-22ரோம 12:20மத் 6:14-15மத் 6:121 கொரி 13:4-7எபே 4:31-32மத் 18:16 அப்பொழுது அப்போஸ்தலர்கள் கர்த்த்தரை நோக்கி: எங்களுடைய விசுவாசத்தை பெருகப்பண்ணவேண்டும் என்றார்கள். மாற் 9:24எபி 12:2பிலி 4:132 கொரி 12:8-102 தெச 1:3லூக் 7:13மாற் 6:301 பேது 1:22-23 அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடு பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும். மத் 17:20மத் 21:21மாற் 9:23மத் 13:31-321 கொரி 13:2லூக் 13:19மாற் 11:22-23லூக் 19:4 உங்களில் ஒருவனுடைய வேலைக்காரன் உழுது அல்லது மந்தையை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்புபோய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ? மத் 12:11லூக் 13:15லூக் 14:5 நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, பரிமாறும் உடை அணிந்துக்கொண்டு, ஆகாரம் உட்கொள்ளும்வரை எனக்கு வேலைச்செய், அதற்குப்பின் நீ புசித்துக் குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா? லூக் 12:37ஆதி 43:162 சாமு 12:20 தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு நன்றி சொல்லுவானோ? அப்படிச் செய்யமாட்டானே. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் பயனற்ற வேலைக்காரர்கள், செய்யவேண்டிய கடமையைமட்டும் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். 1 கொரி 9:16-171 பேது 5:5-6யோபு 22:2-31 கொரி 15:9-10யோபு 35:6-7ரோம 11:35நீதி 16:2-31 நாளாக 29:14-16
பத்து குஷ்டரோகிகள் சுகம்பெறுதல்
பின்பு அவர் எருசலேமுக்குப் பயணமாகபோகும்போது, அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின்வழியாக நடந்துபோனார். லூக் 9:51-52யோவா 4:3-4 அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, குஷ்டரோகமுள்ள மனிதர்கள் பத்துபேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: லேவி 13:45-46லூக் 5:122இராஜா 7:3லூக் 18:132 நாளாக 26:20-212இராஜா 5:27எண் 5:2-3எண் 12:14 இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். மத் 15:22மத் 9:27மத் 20:30-31லூக் 18:38-39மாற் 9:22லூக் 5:5 அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகும்போது சுகமானார்கள். லேவி 13:1-46லூக் 5:142இராஜா 5:14மத் 3:15யோவா 11:10மத் 8:3-4ஏசா 65:24யோவா 2:5 அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தமாக தேவனை மகிமைப்படுத்தி, சங் 30:11-12சங் 103:1-4ஏசா 38:19-22லூக் 17:17-18சங் 118:18-19யோவா 9:38சங் 107:20-222 நாளாக 32:24-26 அவருடைய பாதத்தருகே முகங்குப்புறவிழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான்; அவன் சமாரியனாக இருந்தான். அப் 8:5-25மத் 10:5வெளி 19:10லூக் 10:32-35லூக் 9:52-56வெளி 19:4-5அப் 1:8யோவா 4:39-42 அப்பொழுது இயேசு: சுகமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? ரோம 1:21சங் 106:13ஆதி 3:9யோவா 8:7-10 தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனைத்தவிர மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, சங் 50:23மத் 15:24-28சங் 106:13ஏசா 42:12மத் 8:12வெளி 14:7மத் 20:16மத் 8:10 அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். மாற் 5:34லூக் 7:50மத் 9:22மாற் 10:52லூக் 18:42லூக் 8:48
தேவனுடைய ராஜ்யத்தின் வருகை
தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர்கள் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் மறுமொழியாக: தேவனுடைய ராஜ்யம் கண்களுக்குத் தெரியும்படியாக வராது. யோவா 18:36லூக் 16:16லூக் 19:11தானி 2:44அப் 1:6-7லூக் 10:11லூக் 17:23-24சகரி 4:6 இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவாக இருக்காது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார். மத் 12:28ரோம 14:17மாற் 13:21கொலோ 1:27லூக் 10:9-11மத் 24:23-28லூக் 17:23லூக் 21:8 பின்பு அவர் சீடர்களை நோக்கி: மனிதகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள். லூக் 5:35மத் 9:15யோவா 13:33யோவா 16:16-22யோவா 16:5-7யோவா 7:33-36யோவா 8:21-24மாற் 2:20 இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடம் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள். லூக் 21:8மத் 24:23-26லூக் 17:21மாற் 13:21-23 மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனிதகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். மத் 24:27மல்கி 4:1-2மத் 24:30சகரி 9:141 தெச 5:22 பேது 3:102 தெச 2:2யாக் 5:8 அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுகள்பட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாக இருக்கிறது. மத் 16:21லூக் 9:22மாற் 8:31யோவா 1:11லூக் 24:25-26மத் 20:18-19மத் 21:42ஏசா 53:3 நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனிதகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். மத் 24:37-39ஆதி 7:7-23லூக் 17:241 பேது 3:19-20லூக் 17:222 பேது 2:52 பேது 3:6ஆதி 6:5 நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரை மக்கள் புசித்துக் குடித்தார்கள், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் இருந்தார்கள்; பெருவெள்ளம் வந்து எல்லோரையும் அழித்துப்போட்டது. லூக் 12:19-201 தெச 5:1-3ஏசா 22:12-14லூக் 16:19-231 சாமு 25:36-38உபா 6:10-12உபா 8:12-14ஏசா 21:4 லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; மக்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். எசேக் 16:49-50ஆதி 18:20-21யாக் 5:1-5ஆதி 13:13ஆதி 19:1-28 லோத்து சோதோமைவிட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் பெய்து, எல்லோரையும் அழித்துப்போட்டது. வெளி 11:82 பேது 2:6எரே 50:40யூதா 1:7செப்ப 2:9உபா 29:23-25ஏசா 13:19மத் 11:23-24 மனிதகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். 2 தெச 1:71 கொரி 1:7வெளி 1:71 பேது 1:131 பேது 1:7லூக் 21:27லூக் 21:34-36மத் 16:27 அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பொருட்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கவேண்டும்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கவேண்டும். எரே 45:5லூக் 21:21மத் 16:26மாற் 13:14-16மத் 24:17-21பிலி 3:7-8யோபு 2:4மத் 6:25 லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள். ஆதி 19:26எபி 10:38-392 பேது 2:18-221 கொரி 10:6-12ஆதி 19:17 தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான். மத் 10:39மாற் 8:35-37யோவா 12:25லூக் 9:24-25மத் 16:25வெளி 2:10 அந்த இரவில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். மத் 24:40-412 பேது 2:9மல்கி 3:16-181 தெச 4:16-17மாற் 13:23சங் 28:3லூக் 13:24சங் 26:9 மாவரைக்கிற இரண்டு பெண்களில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள். மத் 24:41யாத் 11:5நியாயாதி 16:21 வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்கள் அவருக்கு மறுமொழியாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார். மத் 24:28யோபு 39:29-30சகரி 13:8-9வெளி 19:17-18ஆமோ 9:1-4சகரி 14:2தானி 9:26-271 தெச 2:16