லூக்கா 4

Luke 4
அத்தியாயம் 4

இயேசு சாத்தானால் சோதிக்கப்படுதல்

இயேசு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவராக யோர்தானைவிட்டுத் திரும்பி, பரிசுத்த ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, மத் 4:1-11அப் 10:38மாற் 1:12-13லூக் 4:18ஏசா 61:1யோவா 3:34யோவா 1:32மத் 3:16 நாற்பதுநாட்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசி உண்டானது. யாத் 34:28எபி 4:151 இராஜா 19:8உபா 9:9எபி 2:18உபா 9:18யோவா 4:6மத் 4:2 அப்பொழுது சாத்தான் அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கல் அப்பமாக மாறும்படிச் சொல்லும் என்றான். மத் 4:3லூக் 3:22 இயேசு மறுமொழியாக: மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். உபா 8:3மத் 4:4மத் 6:31எபே 6:17யாத் 23:25லூக் 4:10லூக் 4:8மத் 6:25-26 பின்பு சாத்தான் அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: 1 யோவா 2:15-161 கொரி 15:52எபே 6:12யோபு 20:5மத் 4:8சங் 73:191 கொரி 7:312 கொரி 4:17 இவைகள் எல்லாவற்றின்மேலும் உமக்கு அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் என்னுடைய பொறுப்பில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுப்பேன். யோவா 12:311 யோவா 5:19எபே 2:2யோவா 14:30வெளி 20:2-31 பேது 1:24வெளி 13:2வெளி 13:7 நீர் என்முன் பணிந்து தொழுதுகொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். லூக் 8:28சங் 72:11வெளி 22:8வெளி 5:8ஏசா 45:14ஏசா 46:6லூக் 17:16மத் 2:11 இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய யெகோவாவைமட்டும் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்குமட்டும் ஆராதனைசெய் என்று எழுதியிருக்கிறது என்றார். உபா 6:13உபா 10:20மத் 4:10சங் 83:18வெளி 19:101 சாமு 7:3யாக் 4:7வெளி 22:9 அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனென்றால், இங்கேயிருந்து கீழே குதியும். மத் 4:5-6லூக் 4:3மத் 8:29ரோம 1:42 நாளாக 3:4யோபு 2:6 ஏனென்றால், உம்மைப் பாதுகாக்க தேவன் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்றும், சங் 91:11-12எபி 1:142 கொரி 11:14லூக் 4:3லூக் 4:8 உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மை தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான். சங் 91:12 அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதிருப்பாயாக என்றும் சொல்லியிருக்கிறதே என்றார். உபா 6:161 கொரி 10:9எபி 3:8-9மல்கி 3:15மத் 4:7சங் 106:14சங் 95:9 சாத்தான், இயேசுவை பலவிதங்களில் சோதித்துமுடித்தபின்பு சிலகாலம் அவரைவிட்டு விலகிப்போனான். யாக் 4:7எபி 4:15யோவா 14:30மத் 4:11

இயேசுவின் ஊழிய ஆரம்பம்

பின்பு இயேசு பரிசுத்த ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார். அவரைப்பற்றிய செய்தி சுற்றிலும் இருக்கிற தேசங்களெல்லாம் பரவியது. அப் 10:37மத் 4:23-25மத் 4:12மாற் 1:28யோவா 4:43லூக் 4:37மாற் 1:14மத் 9:26 அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லோராலும் புகழப்பட்டார். மத் 4:23ஏசா 55:5மத் 9:8மாற் 1:39மாற் 1:45லூக் 13:10மத் 13:54மத் 9:35 ஒரு நாள் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குச் சென்று, வேதத்தை வாசிக்க எழுந்து நின்றார். மத் 2:23மத் 13:54-55மாற் 6:1-3அப் 13:14-16அப் 17:2லூக் 2:51யோவா 18:20லூக் 2:39 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புத்தகத்தை விரித்தபோது: ஏசா 61:1-3அப் 13:15அப் 7:42அப் 13:27லூக் 20:42

யெகோவாவுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; ஏசா 61:1மத் 11:5சங் 146:7-8அப் 10:38லூக் 7:22அப் 26:18ஏசா 42:7யோவா 12:46

எளியவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக

என்னை அபிஷேகம்பண்ணினார்;

இருதயம் காயப்பட்டவர்களைக் குணமாக்கவும்,

சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும்,

பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையையும்,

ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,

இந்த வருடம் யெகோவாவுடைய கிருபையின் வருடம் என்பதைச் சொல்லவும், ஏசா 61:2ஏசா 63:4லூக் 19:422 கொரி 6:1லேவி 25:50-54லேவி 25:8-13எண் 36:4

என்னை அனுப்பினார்,” என்று எழுதியிருக்கிறதை அவர் பார்த்து.

அதை வாசித்து, பின்பு புத்தகத்தைச் சுருட்டி, பணிவிடை செய்பவனிடம் கொடுத்து உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லோரும் அவரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். லூக் 4:17யோவா 8:2அப் 16:13லூக் 19:48லூக் 5:3மத் 5:1-2அப் 13:14-16மத் 13:1-2 அப்பொழுது அவர் அவர்களோடு பேசத்தொடங்கி: “நீங்கள் கேட்ட இந்த வேதவாக்கியம் இன்று நிறைவேறியது” என்றார். யோவா 4:25-26அப் 3:18மத் 13:14லூக் 10:23-24அப் 2:16-18அப் 2:29-33யோவா 5:39 எல்லோரும் அவருக்கு நற்சாட்சிக் கொடுத்து, அவர் பேசின கிருபையுள்ள வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்: ஆனால், அவர்களில் சிலர்: “இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா” என்றார்கள். மத் 13:54-56சங் 45:2அப் 6:10யோவா 6:42மாற் 6:2-3பிரச 12:10-11யோவா 7:46ஏசா 50:4 அவர் அவர்களை நோக்கி: “நீங்கள் என்னிடம், வைத்தியனே, உன்னைநீயே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமில் நீ செய்த செயல்களையெல்லாம் உன் சொந்த ஊராகிய இங்கேயும் செய் என்று சொல்லுவீர்கள் என்பது நிச்சயம். மத் 11:23-24யோவா 4:46-53யோவா 2:3-4மாற் 2:1-12ரோம 2:21-22மத் 4:13மாற் 6:12 கொரி 5:16 ஆனாலும் ஒரு தீர்க்கதரிசியை அவனுடைய சொந்த ஊரிலே ஒருவனும் அங்கீகரிக்கமாட்டான் என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் . மத் 13:57யோவா 4:44மாற் 6:4-5அப் 22:3அப் 22:18-22யோவா 4:41 அன்றியும் எலியா தீர்க்கதரிசி வாழ்ந்த நாட்களிலே மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் வானம் அடைக்கப்பட்டு மழை இல்லாமல், தேசமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலில் அநேக விதவைகள் இருந்தார்கள். 1 இராஜா 17:1யாக் 5:171 இராஜா 18:1-2மத் 20:15மாற் 7:26-29ஏசா 55:8லூக் 10:21ரோம 9:15 இருந்தாலும், எலியா தீர்க்கதரிசி, இவர்களில் எந்தவொரு யூதவிதவையிடமும் அனுப்பப்படாமல், சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா என்னும் ஊரில் இருந்த ஒரு விதவையிடம் அனுப்பப்பட்டான். 1 இராஜா 17:9-24மத் 11:21ஒபதி 1:20 அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலில் அநேக குஷ்டரோகிகள் இருந்தார்கள்; இருந்தாலும் சீரியா தேசத்தைச் சேர்ந்த நாகமானைத்தவிர அவர்களில் வேறு ஒருவனையும் எலிசா சுத்தமாக்கவில்லை என்று சத்தியத்தின்படி உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். 2இராஜா 5:1-27யோவா 17:121 இராஜா 19:19-21மத் 12:4தானி 4:35யோபு 36:23யோபு 21:22யோபு 33:13 ஜெப ஆலயத்திலிருந்த எல்லோரும், இவைகளைக் கேட்டபொழுது, கடும்கோபமடைந்து, அப் 22:21-23அப் 7:54எரே 37:15-161 தெச 2:15-162 நாளாக 24:20-21அப் 5:33எரே 38:6லூக் 11:53-54 எழுந்திருந்து, அவரை ஊருக்கு வெளியே தள்ளி, தங்களுடைய ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் உச்சியிலிருந்து அவரைத் தலைகீழாகத் தள்ளிவிடுவதற்காக அந்த இடத்திற்குக் கொண்டுபோனார்கள். யோவா 8:59அப் 21:28-32எபி 13:12யோவா 15:24-25யோவா 8:37அப் 16:23-24அப் 7:57-58யோவா 8:40 ஆனால், அவர் அவர்கள் நடுவில் இருந்து கடந்துபோய்விட்டார். யோவா 10:39யோவா 8:59யோவா 18:6-7அப் 12:18

இயேசு அசுத்தஆவியைத் துரத்துதல்

பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் என்னும் பட்டணத்திற்கு வந்து, ஓய்வுநாட்களில் மக்களுக்குப் போதனை பண்ணினார். மத் 4:13மாற் 1:21-28அப் 17:1-3அப் 13:50அப் 14:19-21அப் 14:6-7அப் 17:10-11மத் 10:23 அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாக இருந்தபடியால் அவருடைய போதனையைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். லூக் 4:36மத் 7:28-292 கொரி 10:4-5எபி 4:12-131 தெச 1:5யோவா 6:63தீத் 2:151 கொரி 14:24-25 ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான். மாற் 1:23 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். மாற் 1:24யாக் 2:19மத் 8:29அப் 3:14லூக் 1:35வெளி 3:7ஆதி 3:15லூக் 4:41 அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை மக்களின் நடுவே கீழேத் தள்ளி, அவனுக்கு ஒரு தீங்கும் செய்யாமல், அவனைவிட்டுப் போய்விட்டது. லூக் 4:39லூக் 4:41மத் 8:26அப் 16:17-18மாற் 3:11-12மாற் 9:26வெளி 12:12லூக் 11:22 எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்தஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். லூக் 4:32மாற் 16:17-20மாற் 7:371 பேது 3:22அப் 19:12-16லூக் 10:17-20மத் 12:22-23மாற் 1:27 அவரைப்பற்றின புகழ் சுற்றிலுமிருந்த இடங்களிலெல்லாம் பரவியது. மாற் 1:45ஏசா 52:13லூக் 4:14மத் 4:23-25மத் 9:26மாற் 6:14மாற் 1:28

இயேசு அநேகரை சுகமாக்குதல்

பின்பு அவர் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டிற்குப் போனார். அங்கு சீமோனுடைய மாமியார் கடும் ஜூரத்தோடு படுத்திருந்தாள். அவளை குணமாக்கவேண்டுமென்று அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள். மத் 8:14-15மாற் 1:29-31யாக் 5:14-15யோவா 11:22யோவா 11:3லூக் 7:3-41 கொரி 9:5மத் 15:23 அவர் அவளிடம் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது, அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். லூக் 4:41லூக் 4:35லூக் 8:24லூக் 8:2-32 கொரி 5:14-15சங் 116:12 சூரியன் அஸ்தமித்தபோது, மக்களெல்லோரும் பலவிதமான வியாதிகளால் கஷ்டப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கரங்களை வைத்து, அவர்களை சுகமாக்கினார். மத் 8:16-17மாற் 1:32-34மாற் 5:23அப் 19:12மாற் 3:10அப் 5:15லூக் 7:21-23மத் 11:5 பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு அநேகரைவிட்டுப் புறப்பட்டுப்போனது. அவர் கிறிஸ்து என்று பிசாசுகளுக்கு தெரிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவிடாமல் அதட்டினார். மாற் 1:34யாக் 2:19அப் 16:17-18யோவா 20:31லூக் 4:34-35மத் 26:63மத் 4:3மாற் 3:11 சூரியன் உதயமானபோது அவர் புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார். அநேக மக்கள் அவரைத் தேடி அவரிடம் வந்து, அவர்களைவிட்டுப் போகவேண்டாம் என்று அவரைத் தடுத்து நிறுத்தப்பார்த்தனர். லூக் 6:12மாற் 1:35-38யோவா 4:34யோவா 6:24லூக் 24:29லூக் 8:37-38மத் 14:13-14மாற் 1:45 அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம் பண்ணவேண்டும், இதற்காகத்தான் அனுப்பப்பட்டேன் என்றார். மாற் 1:38-392 தீமோ 4:2யோவா 6:38-40யோவா 20:21அப் 10:38ஏசா 61:1-3யோவா 9:4மாற் 1:14-15 அப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெப ஆலயங்களில் பிரசங்கம்பண்ணிக்கொண்டுவந்தார். மத் 4:23மாற் 1:39லூக் 4:15