யோவான்ஸ்நானகன் வழியை ஆயத்தம்பண்ணுதல்
தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம். 1 யோவா 5:11-12மத் 3:17மத் 4:3யோவா 20:31யோவா 1:14லூக் 1:2-3மத் 14:33மத் 17:5
“இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், மல்கி 3:1லூக் 1:76மத் 11:10மத் 3:1-11லூக் 1:15-17லூக் 7:27-28லூக் 1:70மத் 26:31
அவன் உமக்கு முன்பேபோய்,
உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், ஏசா 40:3-5மத் 3:3லூக் 3:4-6யோவா 3:28-36யோவா 1:15யோவா 1:19-34
அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்”
என்று “வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி;
யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான். அப் 19:3-4மத் 3:6அப் 13:24-25யோவா 3:23அப் 22:16லூக் 1:77லூக் 3:2-3மத் 3:1-2 அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப் 19:18லேவி 26:40-42அப் 2:38மத் 3:5-61 யோவா 1:8-10யோவா 1:28யோவா 3:23யோசு 7:19 யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான். 2இராஜா 1:8லேவி 11:22மத் 3:4சகரி 13:4 அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை. அப் 13:25லூக் 3:16யோவா 1:27மத் 3:11யோவா 3:28-31லூக் 7:6-7மத் 3:14 நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான். அப் 1:51 கொரி 12:13அப் 19:4-6அப் 10:45அப் 11:15-16அப் 2:4யோவே 2:28எசேக் 36:25-27
இயேசுவின் ஞானஸ்நானமும் சோதனையும்
அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். மத் 2:23மத் 3:13-17லூக் 3:21-22 அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார். யோவா 1:31-34லூக் 3:22ஏசா 42:1ஏசா 64:1மத் 3:16 அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. ஏசா 42:1மாற் 9:7மத் 3:17சங் 2:7கொலோ 1:132 பேது 1:17-18யோவா 12:28-30யோவா 3:16 உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார். மத் 4:1-11லூக் 4:1-13 அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள். எபி 2:17-18எபி 4:15யாத் 34:28மத் 26:531 இராஜா 19:5-8உபா 9:11உபா 9:18உபா 9:25
சீடர்களை ஊழியத்திற்கு அழைத்தல்
யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து: மத் 4:23மத் 4:12லூக் 8:1மத் 9:35எபே 2:17ஏசா 61:1-3அப் 28:23லூக் 4:17-19 காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார். மத் 3:2மத் 4:17அப் 2:36-38அப் 20:21எபே 1:10கலா 4:4மத் 10:7தானி 2:44 அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார். மத் 4:18-22யோவா 1:40-42யோவா 6:8லூக் 6:14அப் 1:13யோவா 12:22லூக் 5:1-11மத் 10:2 இயேசு அவர்களைப் பார்த்து: என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். லூக் 5:10மத் 4:19-20அப் 2:38-41எசேக் 47:10 உடனே அவர்கள் தங்களுடைய வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். லூக் 14:33லூக் 18:28-30லூக் 5:11மத் 19:27-30மாற் 10:28-31பிலி 3:8 அவர் அந்த இடத்தைவிட்டுச் சற்றுதூரம் சென்றபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, அப் 1:13அப் 12:2மத் 4:21மாற் 10:35மாற் 14:33மாற் 3:17மாற் 5:37மாற் 9:2 உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். லூக் 14:26மத் 10:37மாற் 10:291 இராஜா 19:202 கொரி 5:16மத் 4:21-22மத் 8:21-22உபா 33:9
இயேசு அசுத்தஆவியைத் துரத்துதல்
பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, போதனை பண்ணினார். மாற் 6:2மாற் 1:39மத் 4:23அப் 13:14-52அப் 17:2அப் 18:4மத் 4:13லூக் 10:15 அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால் அவருடைய போதனையைக்குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். மத் 7:28-29மத் 13:54லூக் 4:32அப் 6:10எரே 23:29யோவா 7:46லூக் 21:152 கொரி 4:2 அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான். மாற் 9:25லூக் 4:33-37மத் 12:43மாற் 1:34மாற் 5:2மாற் 7:25 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா நீர் வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமாகக் கத்தினான். யாக் 2:19மத் 8:29அப் 3:14லூக் 4:34வெளி 3:7அப் 2:27லூக் 8:28மாற் 5:7 அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார். மாற் 1:34அப் 16:17லூக் 4:41மாற் 3:11-12மாற் 9:25லூக் 4:35சங் 50:16 உடனே அந்த அசுத்தஆவி அவனை அலைக்கழித்து, அதிக சத்தம்போட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது. மாற் 9:26மாற் 9:20லூக் 11:22லூக் 9:39லூக் 9:42 எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடு அசுத்தஆவிகளுக்குக் கட்டளைக் கொடுக்கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். லூக் 9:1மத் 15:31மாற் 7:37லூக் 4:36மத் 9:33மத் 12:22-23மாற் 10:24மாற் 10:32 எனவே, அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது. லூக் 4:37மத் 9:31லூக் 4:17மத் 4:24மீகா 5:4மாற் 1:45
அநேக வியாதியஸ்தர்களை சுகப்படுத்துதல்
உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள். மத் 8:14-15லூக் 4:38-39மாற் 1:21லூக் 9:58மாற் 1:23 அங்கே சீமோனுடைய மாமியார் ஜூரத்தோடு படுத்திருந்தாள்; உடனே அவர்கள் அவளைப்பற்றி அவருக்குச் சொன்னார்கள். 1 கொரி 9:5யாக் 5:14-15யோவா 11:3மாற் 5:23 அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். அப் 9:41லூக் 8:2-3மாற் 5:41சங் 103:1-3சங் 116:12மாற் 15:41மத் 27:55 மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது, எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். மத் 8:16லூக் 4:40மத் 4:24மாற் 3:2மாற் 1:21 பட்டணத்து மக்கள் எல்லோரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள். அப் 13:44மாற் 1:5 பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை. லூக் 4:41மாற் 3:12அப் 16:16-18மத் 4:23மாற் 1:25
இயேசு தனிமையான இடத்தில் ஜெபித்தல்
அவர் அதிகாலையில், இருட்டோடு எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். லூக் 6:12லூக் 5:16லூக் 22:39-46எபே 6:18சங் 5:3யோவா 6:15எபி 5:7மத் 14:23 சீமோனும் அவனோடுகூட இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய், அவரைப் பார்த்தபோது: எல்லோரும் உம்மைத் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள். யோவா 12:19யோவா 11:48யோவா 3:26மாற் 1:5சகரி 11:11 அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி; லூக் 4:43ஏசா 61:1-3யோவா 17:8யோவா 16:28யோவா 17:4லூக் 2:49லூக் 4:18-21யோவா 9:4 கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார். மத் 4:23மாற் 1:21லூக் 4:41லூக் 4:43-44மாற் 7:30
குஷ்டரோகமுள்ள மனிதன்
அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடம் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்கு விருப்பமானால் என்னைச் சுகப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான். லூக் 5:12-14மத் 8:2-4லேவி 13:1-142 சாமு 3:29மத் 17:14மாற் 9:22-23உபா 24:8-9மாற் 10:17 இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார். மத் 9:36எபி 2:17எபி 4:15லூக் 7:12-13மாற் 5:41மாற் 6:34ஆதி 1:3எபி 1:3 இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது, அவன் சுகம் பெற்றுக்கொண்டான். யோவா 15:3யோவா 4:50-53மத் 15:28மாற் 1:31மாற் 5:29சங் 33:9 அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: நீ இதை யாருக்கும் சொல்லாமல் இருக்க எச்சரிக்கையாக இரு; மத் 9:30லூக் 8:56மாற் 3:12மாற் 5:43மாற் 7:36 ஆனாலும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி அவர்களுக்கு நீ சுகம் பெற்றதின் சாட்சியாக காணிக்கை செலுத்து என்று உறுதியாகச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். லேவி 14:1-32லூக் 17:14மத் 8:41 கொரி 10:11லூக் 5:14ரோம 15:4மத் 23:2-3 ஆனால், அவனோ புறப்பட்டுப்போய்; இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். எனவே, அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல், வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார்; எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள். மத் 9:31மாற் 2:13யோவா 6:2லூக் 5:15-17சங் 77:11மத் 28:15மாற் 2:1-2மாற் 3:7