எத்தியோப்பியா தேசத்து பெண்ணை மோசே திருமணம்செய்திருந்தபடியால், மிரியாமும் ஆரோனும் அவன் திருமணம்செய்த எத்தியோப்பியா தேசத்து பெண்ணினால் அவனுக்கு விரோதமாகப் பேசி: யாத் 2:21ஆதி 26:34-35ஆதி 24:37ஆதி 27:46கலா 4:16ஆதி 24:3ஆதி 28:6-9ஆதி 34:14-15 “யெகோவா மோசேயைக்கொண்டுமட்டும் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். யெகோவா அதைக் கேட்டார். எசேக் 35:12-13எண் 16:3ஏசா 37:4மீகா 6:4பிலி 2:14பிலி 2:32இராஜா 19:4எண் 11:1 மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதர்களிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாக இருந்தான். மத் 11:29யாக் 3:132 கொரி 11:52 கொரி 12:11மத் 5:51 பேது 3:41 தெச 2:7யாக் 3:2-3 உடனே யெகோவா மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: “நீங்கள் மூன்று பேரும் ஆசரிப்புக்கூடாரத்திற்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள். சங் 76:9எண் 16:16-21 யெகோவா மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள். எண் 11:25யாத் 34:5யாத் 40:38சங் 99:7 அப்பொழுது அவர்: “என்னுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாக இருந்தால், யெகோவாவாகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடு பேசுவேன். 1 இராஜா 3:5ஆதி 31:10-11ஆதி 46:2அப் 22:17-18லூக் 1:22தானி 10:8லூக் 1:11எசேக் 1:1 என்னுடைய தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என்னுடைய வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். எபி 3:2-6யோசு 1:1சங் 105:261 கொரி 4:2மத் 11:111 பேது 2:4-51 தீமோ 3:15அப் 3:22-23 நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாக பேசுகிறேன்; அவன் யெகோவாவின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என்னுடைய தாசனாகிய மோசேக்கு விரோதமாகப் பேச, உங்களுக்குப் பயமில்லாமல் போனது என்ன என்றார். உபா 34:101 கொரி 13:12யாத் 24:10-11யாத் 33:11யாத் 33:23லூக் 10:162 கொரி 4:4-6யோவா 14:7-10 யெகோவாவுடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார். ஆதி 17:22ஓசி 5:15எண் 11:1 மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற தொழுநோயாளியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் தொழுநோயாளியாக இருக்கக் கண்டான். உபா 24:92இராஜா 5:272 நாளாக 26:19-212இராஜா 15:5யாத் 4:6யாத் 33:7-10எசேக் 10:18-19எசேக் 10:4-5 அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: “ஆ, என்னுடைய ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாகச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாமலிரும். 2 சாமு 24:102 சாமு 19:19நீதி 30:321 இராஜா 13:61 சாமு 12:191 சாமு 15:24-251 சாமு 2:302 நாளாக 16:9 தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாமலிருப்பாளாக” என்றான். சங் 88:4-51 கொரி 15:81 தீமோ 5:6எபே 2:1-5யோபு 3:16சங் 58:8கொலோ 2:13 அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “என்னுடைய தேவனே. அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான். யாக் 5:15லூக் 6:28ரோம 12:211 சாமு 12:231 சாமு 15:11யாத் 32:10-14ஏசா 30:26எரே 17:14 யெகோவா மோசேயை நோக்கி: “அவளுடைய தகப்பன் அவளுடைய முகத்திலே காறித் துப்பினால், அவள் ஏழுநாட்கள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் முகாமிற்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்றார். உபா 25:9யோபு 30:10ஏசா 50:6எண் 5:2-3லேவி 13:45-462 நாளாக 26:20-21எபி 12:9யோபு 17:6 அப்படியே மிரியாம் ஏழு நாட்கள் முகாமிற்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படும்வரை மக்கள் பயணம் செய்யாமலிருந்தார்கள். உபா 24:8-9ஆப 3:2புலம் 3:32மீகா 6:4மீகா 7:8-9யாத் 20:12ஆதி 9:21-23 பின்பு, மக்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள். எண் 11:35எண் 33:18எண் 10:121 சாமு 25:1ஆதி 21:21ஆப 3:3எண் 13:26எண் 13:3
எண்ணாகமம் 12
Numbers 12அத்தியாயம் 12