பிலிப்பியர் 4

Philippians 4
அத்தியாயம் 4

ஆகவே, எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரர்களே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இப்படியே கர்த்தருக்குள் நிலைத்து நில்லுங்கள். பிலி 1:271 கொரி 16:13சங் 27:14பிலி 2:161 கொரி 15:58எபி 10:23யோவா 15:3-4பிலி 1:8

உற்சாகப்படுத்துதல்

கர்த்தருக்குள் ஒரே சிந்தையாக இருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன். எபி 12:141 கொரி 1:10மாற் 9:501 பேது 3:8-11பிலி 2:2-3எபே 4:1-81 தெச 5:13ஆதி 45:24 அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாக இருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடும் நற்செய்தியை அறிவிப்பதில் என்னோடு அதிகமாக உழைத்தார்கள், அவர்களுடைய பெயர்கள் ஜீவபுத்தகத்தில் இருக்கிறது. வெளி 3:5லூக் 10:20வெளி 13:8பிலி 1:27வெளி 21:27அப் 16:14-18வெளி 17:8யாத் 32:32 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்; சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் சொல்லுகிறேன். 1 தெச 5:16-18ரோம 12:12யாக் 1:2-4பிலி 3:1மத் 5:12ரோம 5:2-31 பேது 4:13சங் 146:2 உங்களுடைய சாந்தகுணம் எல்லா மனிதர்களுக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் அருகில் இருக்கிறார். யாக் 5:8-9மத் 6:25தீத் 3:2எபி 10:371 பேது 4:7வெளி 22:71 கொரி 6:7எபி 10:25 நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும்குறித்து உங்களுடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். நீதி 3:5-61 பேது 5:7மத் 6:25-33சங் 55:221 தெச 5:17-18மத் 7:7-8சங் 34:5-7மத் 6:8 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களையும் உங்களுடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாகக் காத்துக்கொள்ளும். யோவா 14:27ஏசா 26:32 தெச 3:16கொலோ 3:15சங் 29:11யோவா 16:33ரோம 15:13கலா 5:22 கடைசியாக, சகோதரர்களே, உண்மையுள்ளவைகள் எவைகளோ, ஒழுக்கமுள்ளவைகள் எவைகளோ, நீதியுள்ளவைகள் எவைகளோ, கற்புள்ளவைகள் எவைகளோ, அன்புள்ளவைகள் எவைகளோ, நற்பெயர் உள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். யாக் 3:17தீத் 2:7ரோம 12:9-212 கொரி 8:21கலா 5:221 தெச 5:21-222 பேது 1:3-7எபே 5:9 நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவைகளும், பெற்றுக்கொண்டவைகளும், கேட்டவைகளும், பார்த்தவைகளும் எவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பார். யாக் 1:221 தெச 4:1-8பிலி 3:172 பேது 1:10யோவா 13:17ரோம 16:20பிலி 4:72 கொரி 13:11

உதவிகளுக்காக நன்றிகூருதல்

என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மீண்டும் அக்கறை கொண்டதினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; முன்னமே இப்படிச் செய்ய நினைத்தீர்கள், ஆனால் உதவிசெய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2 கொரி 11:92 கொரி 7:6-7கலா 6:10கலா 6:62 கொரி 6:7பிலி 1:3பிலி 2:30சங் 85:6 என் குறைகளினால் நான் இப்படிச் சொல்லவில்லை; ஏனென்றால், நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனதிருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டேன். 1 தீமோ 6:6-9எபி 13:5-6மத் 6:31-342 கொரி 9:8பிலி 3:82 கொரி 6:102 கொரி 8:91 கொரி 4:11-12 தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எந்த இடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாக இருக்கவும், பட்டினியாக இருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் கற்றுக்கொண்டேன். மத் 11:292 கொரி 12:7-102 கொரி 11:272 கொரி 11:92 கொரி 6:4-10உபா 32:101 கொரி 4:9-13ஏசா 8:11 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு. ஏசா 41:102 கொரி 12:9-10எபே 6:10கொலோ 1:11ஏசா 40:29-31எபே 3:16யோவா 15:72 கொரி 3:4-5 ஆனாலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடு பங்குகொண்டது நலமாக இருக்கிறது. எபி 13:16பிலி 1:7எபி 10:341 இராஜா 8:18கலா 6:6மத் 25:211 தீமோ 6:183 யோவா 1:5-8 மேலும், பிலிப்பியரே, நற்செய்தி ஊழியத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, உங்களைத்தவிர வேறு எந்த சபையும் எனக்குப் பணம் கொடுத்து உதவிசெய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியும். பிலி 1:52 கொரி 11:8-122 கொரி 12:11-15அப் 16:402இராஜா 5:162இராஜா 5:20 நான் தெசலோனிக்கேயில் இருந்தபோதும், என் குறைவுகளில் உதவிசெய்ய நீங்கள் பலமுறை பணம் அனுப்பி உதவி செய்தீர்கள். 1 தெச 2:9அப் 17:11 தெச 2:18 உங்களுடைய உதவிகளை நான் தேடாமல், உங்களுடைய உதவிகளால் உங்களுக்கு வரும் பலன் பெருகுவதையே பார்க்க விரும்புகிறேன். தீத் 3:14எபி 6:102 கொரி 9:9-13யோவா 15:81 பேது 5:22 கொரி 9:5யோவா 15:16லூக் 14:12-14 எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளை தேவனுக்குச் சுகந்த வாசனையாகவும், பிரியமான பலியாகவும் எப்பாப்பிரோதீத்துவின் கைகளினால் பெற்றுக்கொண்டதினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன். எபி 13:162 கொரி 9:12பிலி 4:12எபே 5:2பிலி 2:25-261 பேது 2:52 கொரி 2:14-162 தெச 1:3 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்களுடைய குறைகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவிற்குள் மகிமையிலே நிறைவாக்குவார். 2 கொரி 9:8-11சங் 84:111 பேது 5:10சங் 23:1-51 தீமோ 6:17மீகா 7:7நீதி 3:9-10உபா 8:3-4 நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். ரோம 11:36சங் 115:1வெளி 14:7வெளி 7:12எபே 3:21கலா 1:4-5யூதா 1:25பிலி 1:11

இறுதி வாழ்த்துதல்

கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் எல்லோருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னோடு இருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். கலா 1:21 கொரி 1:2கொலோ 4:10-14எபே 1:1பிலே 1:23-24பிலி 1:1ரோம 16:21-22ரோம 16:3-16 பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரண்மனையில் உள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். பிலி 1:132 கொரி 13:13ரோம 16:161 பேது 5:13அப் 9:13எபி 13:243 யோவா 1:14 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென். 2 கொரி 13:14ரோம 16:20ரோம 16:23