தாவீதின் வீடும் குடும்பமும்
தீருவின் அரசன் ஈராம் தாவீதுக்கு ஒரு அரண்மனையைக் கட்டுவதற்காக தச்சர்களோடும், மேசன்மார்களோடும் தூதுவர்களை அனுப்பினான்; கேதுரு மரங்களும் அனுப்பப்பட்டன. 2 நாளாக 2:32 சாமு 5:11-16எஸ்றா 3:71 நாளாக 17:11 நாளாக 22:21 இராஜா 5:11 இராஜா 5:181 இராஜா 5:6 யெகோவா தன்னை இஸ்ரயேலுக்கு அரசனாக உறுதிப்படுத்தியிருக்கிறார் என்பதையும், தனது மக்களான இஸ்ரயேலுக்காக தனது ஆட்சியை மிகவும் உயர்த்தி மேன்மைப்படுத்தியுள்ளார் என்பதையும் தாவீது அறிந்துகொண்டான். சங் 89:20-37எண் 24:71 இராஜா 10:92 நாளாக 2:112 சாமு 7:16தானி 2:30எஸ்த 4:141 நாளாக 17:17
எருசலேமிலே தாவீது இன்னும் பல பெண்களைத் திருமணம் செய்து, பல மகன்களுக்கும் மகள்களுக்கும் தகப்பனானான். 1 நாளாக 3:1-41 இராஜா 11:32 சாமு 5:13உபா 17:17பிரச 7:26-29பிரச 9:9மல்கி 2:14மத் 19:4-5 எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்: சம்மூவா, ஷோபாப், நாத்தான், சாலொமோன், 1 நாளாக 3:5-91 நாளாக 22:9-121 நாளாக 28:5-61 இராஜா 1:131 இராஜா 1:171 இராஜா 2:151 இராஜா 3:31 இராஜா 3:5-11 இப்கார், எலிசூவா, எல்பெலேத், 1 நாளாக 3:62 சாமு 5:15 நோகா, நெப்பேக், யப்பியா, எலிஷாமா, பெலியாதா, எலிப்பேலேத். 1 நாளாக 3:82 சாமு 5:16
தாவீது பெலிஸ்தியரை முறியடித்தல்
தாவீது இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டதை பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, அவர்கள் அனைவரும் தங்கள் எல்லா படைப்பலத்தோடும் அவனைத் தேடிச்சென்றார்கள். அதைக் கேள்விப்பட்ட தாவீதோ அவர்களை எதிர்கொள்ள அங்கே போனான். 1 சாமு 21:11வெளி 11:15-181 நாளாக 11:32 சாமு 5:3சங் 2:1-62 சாமு 5:17-25 அந்நேரத்தில் பெலிஸ்தியர் ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே திடீர் தாக்குதல் செய்ய வந்தார்கள். 1 நாளாக 11:151 நாளாக 14:132 சாமு 5:182 சாமு 23:13ஏசா 17:5 எனவே தாவீது இறைவனிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்க்கப் போகலாமா? அவர்களை எனது கையில் ஒப்புக்கொடுப்பீரா?” எனக் கேட்டான். நீதி 3:61 நாளாக 14:141 நாளாக 13:32 சாமு 2:12 சாமு 5:191 இராஜா 22:15-171 இராஜா 22:61 சாமு 23:9-12
அதற்கு யெகோவா, “போ, அவர்களை நான் உன் கையில் ஒப்படைப்பேன்” எனப் பதிலளித்தார்.
எனவே தாவீதும் அவனுடைய மனிதர்களும் பாகால் பிராசீமுக்குப் போனார்கள். அங்கே தாவீது அவர்களை முறியடித்து, “தண்ணீர் மடை திறந்தோடுவதுபோல, என் கைகளினால் இறைவன் என் பகைவரை முறிந்தோடப்பண்ணினார்” எனச் சொன்னான். எனவே அந்த இடம், பாகால் பிராசீம் என அழைக்கப்பட்டது. ஏசா 28:212 சாமு 5:20யாத் 14:28மத் 7:27சங் 144:10யோபு 30:14சங் 144:1சங் 18:13-15 பெலிஸ்தியர் தங்கள் தெய்வங்களை அங்கே கைவிட்டு ஓடிப்போனார்கள். தாவீது அவற்றை சுட்டெரிக்கக் கட்டளையிட்டான். யாத் 32:202இராஜா 19:181 சாமு 5:2-6உபா 7:25உபா 7:5யாத் 12:12
பெலிஸ்தியர் மீண்டும் வந்து அப்பள்ளத்தாக்கிலே திடீர் தாக்குதல் செய்தார்கள். 1 நாளாக 14:92 சாமு 5:22-251 இராஜா 20:22 எனவே திரும்பவும் தாவீது இறைவனிடம் விசாரித்து கேட்டபோது இறைவன், “நீ நேரடியாகப் போகாமல் சுற்றிவளைத்து குங்கிலிய மரங்களின் முன்னால் சென்று அவர்களைத் தாக்கு. சங் 27:41 நாளாக 14:10யோவா 9:6-7யோசு 8:2-7 குங்கிலிய மரங்களின் உச்சியில் சலசலக்கும் இரைச்சலைக் கேட்டதும் நீ யுத்தத்திற்கு புறப்படு. ஏனெனில் இறைவன் உனக்கு முன்பாக பெலிஸ்திய படையைத் தாக்குவதற்காக போயிருக்கிறார் என்பதே அந்தச் சத்தத்தின் விளக்கம்” என்றார். ஏசா 13:4அப் 2:22இராஜா 19:7ஏசா 45:1-2மீகா 2:12-13பிலி 2:12-131 சாமு 14:9-222இராஜா 7:6 இறைவன் கட்டளையிட்டபடியே தாவீது செய்தான். அவர்கள் பெலிஸ்திய இராணுவத்தை கிபியோன் தொடங்கி கேசேர்வரை வெட்டி வீழ்த்தினார்கள். யோவா 13:17யோவா 15:14ஆதி 6:221 நாளாக 6:672 சாமு 5:25யாத் 39:42-43யோவா 2:5யோசு 16:10
அவ்வாறு தாவீதின் புகழ் எல்லா நாடுகளுக்கும் பரவிற்று. யெகோவா எல்லா மக்களையும் தாவீதுக்குப் பயப்படும்படி செய்தார். உபா 2:25யோசு 6:27யாத் 15:14-162 நாளாக 26:8உபா 11:25சங் 18:44யோசு 2:9-11யோசு 9:24