எப்பிராயீம் மற்றும் யூதாவின் தலைவர்களுக்கு எச்சரிக்கை
எப்பிராயீமிலுள்ள குடிவெறியரின் பெருமையான கிரீடத்திற்கு ஐயோ கேடு! ஓசி 7:5ஏசா 28:72இராஜா 14:25-27ஏசா 28:3-42 நாளாக 28:62 நாளாக 30:6-72இராஜா 15:292இராஜா 18:10-12
அதன் மகிமையின் அழகான வாடும் மலருக்கு ஐயோ கேடு!
செழிப்பான பள்ளத்தாக்கின் முகப்பில் இருக்கின்ற பட்டணத்திற்கு ஐயோ கேடு!
மதுவால் வெறியுண்டு வீழ்ச்சியடைந்தவர்களின்
பெருமையாகிய அந்த பட்டணத்திற்கும் ஐயோ கேடு!
பாருங்கள், யெகோவா பலமும் வல்லமையுமுள்ள ஒருவனை வைத்திருக்கிறார். எசேக் 13:11ஏசா 30:30நாகூ 1:8ஏசா 27:1ஏசா 29:6எசேக் 30:10-11ஏசா 25:4ஏசா 28:15-19
அவன் கல்மழை போலவும் அழிக்கும் புயலைப் போலவும்,
பெருமழைபோலவும், வெள்ளப்பெருக்கு போலவும்
அதைப் பலத்துடன் நிலத்தில் வீழ்த்துவான்.
எப்பிராயீமிலுள்ள குடிவெறியரின் பெருமையாகிய எபி 10:29ஏசா 26:62இராஜா 9:33தானி 8:13ஏசா 28:1வெளி 11:2ஏசா 25:10புலம் 1:15
அந்த மலர் மகுடம் காலின்கீழ் மிதிக்கப்படும்.
செழிப்பான பள்ளத்தாக்கின் மேலுள்ள, நாகூ 3:12மீகா 7:1ஓசி 6:4ஏசா 28:1ஓசி 13:1ஓசி 13:15ஓசி 9:10-11ஓசி 9:16
அவளது மகிமையின் அழகாகிய அந்த வாடும் மலர்,
அறுவடை காலத்திற்கு முன் பழுக்கும் அத்திப்பழத்தைப் போலாகும்.
அதைக் காண்பவன் தன் கையில் கிடைத்ததும்
விழுங்கி விடுகிறான்.
அந்த நாளிலே, சேனைகளின் யெகோவா 1 பேது 5:4ஏசா 60:19ஏசா 62:3ரோம 11:5-6ஏசா 41:16ஏசா 45:25எரே 9:23-24யோபு 29:14
தம் மக்களுள் மீதியாய் இருப்பவர்களுக்கு
ஒரு அழகிய மலர் மகுடமும்
மகிமையுள்ள ஒரு கிரீடமுமாய் இருப்பார்.
அவர் நியாயத்தீர்ப்பு வழங்க உட்காருபவனுக்கு சங் 18:32-34யோவா 5:30ஏசா 11:2-4யோசு 1:9எண் 11:16-17ஏசா 32:15-16யோவா 3:341 கொரி 12:8
நீதியின் ஆவியாய் இருப்பார்;
பகைவரை வாசலிலேயே திருப்பி அனுப்புகிறவர்களுக்கு
பலத்தின் ஆதாரமாய் இருப்பார்.
ஆனால் இப்பொழுதோ இஸ்ரயேலின் தலைவர்கள் ஏசா 56:10-12லூக் 21:34பிரச 10:17ஏசா 19:14மத் 24:29மீகா 2:11நீதி 20:1எசேக் 44:21
திராட்சை இரசத்தினால் தடுமாறி,
மதுபோதையினால் தள்ளாடுகிறார்கள்.
ஆசாரியரும் இறைவாக்கு உரைப்போரும் மதுவெறியால் தடுமாறுகிறார்கள்.
திராட்சை இரசத்தால் மயங்கி, மதுவெறியினால் தள்ளாடுகிறார்கள்.
அவர்கள் தரிசனம் காணும்போது தடுமாறி,
தீர்மானம் எடுக்கும்போது இடறுகிறார்கள்.
மேஜைகள் யாவும் வாந்தியால் நிறைந்திருக்கின்றன. எரே 48:26நீதி 26:11ஆப 2:15-16
அழுக்குப்படியாத இடமே அங்கு இல்லை.
“யாருக்கு அவர் போதிக்க முயற்சிக்கிறார்? சங் 131:2எரே 6:10யோவா 12:38மத் 11:25மத் 21:15-161 பேது 2:2ஏசா 53:1ஏசா 54:13
யாருக்கு அவர் செய்தியை விளங்கப்படுத்துகிறார்?
பால் மறந்த பிள்ளைகளுக்கோ?
அல்லது பால் குடிக்கையில் தாயின் மார்பின் அணைப்பிலிருந்து
எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கோ?
அவர் படிப்பிக்கும் விதமோ: ஏசா 28:132 தீமோ 3:7எரே 11:7எரே 25:3-7எபி 5:12நெகே 9:29-302 நாளாக 36:15-16உபா 6:1-6
இதைச் செய், அதைச் செய்;
கட்டளைக்குமேல் கட்டளை, கட்டளைக்குமேல் கட்டளை;
இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம்” என இருக்கும் என்கிறார்கள்.
அப்படியானால், அந்நிய உதடுகளாலும் விளங்காத மொழியினாலும் 1 கொரி 14:21உபா 28:49எரே 5:15ஏசா 33:19
இறைவன் இந்த மக்களுடன் பேசுவார்.
அவர் அவர்களிடம், மத் 11:28-29ஏசா 30:15எரே 6:16ஏசா 11:10எபி 12:25எரே 44:16சகரி 7:142 நாளாக 14:11
“இளைப்பாறும் இடம் இதுவே; களைப்புற்றோர் இளைப்பாறட்டும்.
ஓய்வு பெறுவதற்கான இடம் இதுவே” என்று சொல்லியிருந்தார்.
ஆனால் அவர்களோ அதைக் கேட்க மறுக்கிறார்கள்.
எனவே, அப்பொழுது யெகோவாவினுடைய வார்த்தை அவர்களுக்கு, மத் 13:14ஏசா 6:9-102 பேது 3:16ஏசா 28:10ஏசா 8:14-15எரே 23:36-38மத் 21:44சங் 69:22
“இதைச் செய், அதைச் செய்;
கட்டளைமேல் கட்டளை, கட்டளைமேல் கட்டளை;
இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம்” என்றாகிவிடும்.
ஆயினும் அவர்கள் போய் பின்புறமாய்த் தடுமாறி விழுந்து,
காயப்பட்டு, கண்ணியில் அகப்பட்டு கைதுசெய்யப்படுவார்கள்.
ஆதலால் எருசலேமில் இந்த மக்களை ஆளுகை செய்வோரே! இகழ்வோரே! ஏசா 28:22ஏசா 1:10ஏசா 29:20அப் 13:41ஓசி 7:5ஏசா 5:9நீதி 1:22நீதி 29:8
நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
“நாம் மரணத்துடன் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறோம்; ஏசா 8:7-8ஆமோ 2:4தானி 11:22பிரச 8:8எசேக் 13:22ஓசி 2:18ஏசா 28:18எரே 5:31
பாதாளத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
ஆகையால், நம்மை மேற்கொள்ளக்கூடிய துன்புறுத்தல் இங்கு வரும்போது
அது தாக்காது;
பொய் நமக்கு அடைக்கலமாயும்,
வஞ்சகம் நமக்கு மறைவிடமாயும் இருக்கும்” என்று சொல்லுகிறீர்கள்.
ஆதலால், ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: சங் 118:22அப் 4:11-121 பேது 2:6-8லூக் 20:17-18ரோம 9:33மாற் 12:10மத் 21:42ஏசா 8:14-15
“இதோ, நான் சீயோனில் ஒரு கல்லை வைக்கிறேன்;
அது சோதித்துப் பார்க்கப்பட்ட கல்,
அது உறுதியான அஸ்திபாரத்துக்கான விலையேறப்பெற்ற மூலைக்கல்;
அதில் நம்பிக்கை வைக்கும் எவரும் ஒருபோதும் பதறமாட்டார்கள்.
நான் நீதியை அளவு நூலாக்குவேன்; 2இராஜா 21:13ஆமோ 7:7-9வெளி 16:21ஏசா 28:2எரே 7:14வெளி 11:19ரோம 2:2ரோம 2:5
நியாயத்தைத் தூக்கு நூலாக்குவேன்.
உங்கள் பொய்யான அடைக்கலத்தை, கல்மழை அழிக்கும்;
வெள்ளம் உங்கள் மறைவிடத்திற்கு மேலாகப் பெருக்கெடுக்கும்.
மரணத்துடன் நீங்கள் செய்த உடன்படிக்கை ரத்துச் செய்யப்படும்; ஏசா 7:7ஏசா 8:10ஏசா 28:15தானி 11:40ஏசா 28:3மல்கி 4:1-3தானி 8:9-13தானி 9:26-27
பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிலைக்காது.
தண்டனை பெருவெள்ளம்போல் வாரிக்கொண்டு போகும்போது,
நீங்கள் அதனால் அடிபட்டு விழுவீர்கள்.
அது வரும்போதெல்லாம் உங்களை அடித்துச்செல்லும்; ஆப 3:162இராஜா 24:2தானி 7:28தானி 8:27ஏசா 10:5-6ஏசா 33:7ஏசா 36:22ஏசா 37:3
அது காலைதோறும், இரவும் பகலும்
தண்டிப்பதற்காக வந்து வாரிக்கொண்டு போகும்.”
இச்செய்தியை நீங்கள் விளங்கிக்கொள்வது
உங்களுக்குப் பேரச்சத்தை விளைவிக்கும்.
கால் நீட்டிப் படுக்கக் கட்டிலின் நீளம் போதாது; 1 கொரி 1:18-31ஏசா 64:6ரோம 9:30-32ஏசா 57:12-13ஏசா 59:5-6ஏசா 66:3-6எரே 7:8-10
மூடிக்கொள்ள போர்வையின் அகலமும் போதாது.
யெகோவா பேராசீம் மலையில் எழுந்ததுபோல் எழும்புவார், 1 நாளாக 14:112 சாமு 5:20யோசு 10:12யோசு 10:101 நாளாக 14:162 சாமு 5:25புலம் 2:15உபா 29:21-24
கிபியோன் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல் எழும்புவார்.
அவர் தமது வேலையை, எதிர்பாராத வேலையைச் செய்வதற்கும்,
தமது கடமையை, தாம் விரும்பாத கடமையை நிறைவேற்றுவதற்கும் எழும்புவார்.
உங்கள் ஏளனத்தை இப்பொழுது நிறுத்துங்கள், ஏசா 10:22-23ஏசா 24:1-232 நாளாக 30:102 நாளாக 36:16அப் 13:40-41அப் 17:32தானி 9:26-27ஏசா 28:14-15
இல்லையெனில் உங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகள் இன்னும் பாரமாகும்.
யெகோவா, சேனைகளின் யெகோவா முழு நாட்டுக்கும்
விரோதமாகத் திட்டமிட்டிருக்கும் அழிவை எனக்குச் சொல்லியிருக்கிறார்.
கேளுங்கள், என் குரலுக்குச் செவிகொடுங்கள்; ஏசா 1:2எரே 22:29உபா 32:1வெளி 2:11வெளி 2:14வெளி 2:29வெளி 2:7
நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
ஒரு விவசாயி பயிரிடுவதற்காக உழும்போது தொடர்ந்து உழுதுகொண்டே இருப்பானோ? ஓசி 10:11-12எரே 4:3
நிலத்தைத் தொடர்ந்து கொத்தி மண்ணைப் புரட்டிக் கொண்டேயிருப்பானோ?
நிலத்தை மட்டமாக்கியபின் வெந்தயத்தை விதைத்து, எசேக் 4:9மத் 23:23யாத் 9:31-32
சீரகத்தையும் தூவமாட்டானோ?
கோதுமையை அதற்குரிய இடத்திலும்,
வாற்கோதுமையை அதற்குரிய பாத்தியிலும்,
கம்பை அதற்குரிய வயலிலும் விதைக்கமாட்டானோ?
அவனுடைய இறைவன் அவனுக்கு போதித்து, யாத் 31:3-6யாத் 36:2தானி 1:17யாத் 28:3யாக் 1:17யோபு 35:11யோபு 39:17சங் 144:1
சரியான வழியை அவனுக்குக் கற்ப்பிக்கிறார் அல்லவோ?
வெந்தயம் சம்மட்டியால் அடிக்கப்படுவதுமில்லை, ஏசா 41:152இராஜா 13:7ஆமோ 1:3ஏசா 27:7-8எரே 10:24எரே 46:28
சீரகம் வண்டிச் சில்லால் மிதிக்கப்படுவதுமில்லை.
வெந்தயம் கோலினாலும்,
சீரகம் தடியினாலுமே அடித்தெடுக்கப்படுகின்றன.
அப்பம் செய்வதற்குத் தானியம் அரைக்கப்படவேண்டும்; 1 கொரி 3:91 கொரி 9:9-10ஆமோ 9:9ஏசா 21:10யோவா 12:24மத் 13:37-43மத் 3:12லூக் 22:31-32
அதற்காகத் தொடர்ந்து ஒருவன் அதை அரைத்துக்கொண்டே இருப்பதில்லை.
அவன் தனது சூடடிக்கும் வண்டிச் சில்லுகளை அதற்குமேல் செலுத்தியபோதிலும்,
அவனுடைய குதிரைகள் அதை அரைப்பதில்லை.
இந்த எல்லா அறிவும் சேனைகளின் இறைவனாகிய யெகோவாவிடமிருந்தே வருகின்றன; ரோம 11:33எரே 32:19யோபு 5:9ஏசா 9:6சங் 40:5சங் 92:5தானி 4:2-3யோபு 37:23
அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர்,
ஞானத்தில் சிறந்தவர்.