நீதியானவர்கள் அழிகின்றார்கள், 2இராஜா 22:202 நாளாக 34:28சங் 12:1மீகா 7:2ஏசா 42:25ஏசா 47:71 இராஜா 14:132 நாளாக 35:24
இதைப்பற்றி ஒருவருமே தங்கள் இருதயத்தில் சிந்திப்பதில்லை;
பக்தியுள்ளவர்களும் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்;
தீமையிலிருந்து தப்பித்துக்கொள்ளும்படியாகவே,
நீதியுள்ளவர்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்
என்பதை ஒருவரும் விளங்கிக்கொள்வதில்லை.
நீதியாய் நடக்கிறவர்கள் சமாதானத்திற்குள் சென்றடைந்து, வெளி 14:132 கொரி 5:1யோபு 3:17லூக் 2:292 கொரி 5:8பிரச 12:72 நாளாக 16:14லூக் 7:50
தங்கள் மரணத்தில் படுத்திருக்கும்போது,
இளைப்பாறுதல் பெறுகிறார்கள்.
“ஆனால், மந்திரவாதிகளின் பிள்ளைகளே, 1 யோவா 3:10மத் 16:4ஓசி 1:2யாக் 4:4ஆதி 3:15ஏசா 1:21ஏசா 45:20யோவா 8:40-44
விபசாரிகளுக்கும் வேசிகளுக்கும் பிறந்த பிள்ளைகளே, நீங்கள் இங்கே வாருங்கள்.
யாரை நீங்கள் ஏளனம்பண்ணுகிறீர்கள்? 2 பேது 2:13யாத் 9:17ஏசா 1:4சங் 35:21அப் 9:4கொலோ 3:6எபே 2:2-3எபே 5:6
யாரைப் பழிக்க உங்கள் வாயைத்
உங்கள் நாவை நீட்டுகிறீர்கள்?
நீங்கள் கலகக்காரரின் பிள்ளைகள் அல்லவா?
பொய்யரின் சந்ததியல்லவா?
நீங்கள் தேவதாரு மரங்களுக்கிடையிலும், 2இராஜா 16:3-4எசேக் 16:20ஏசா 1:292இராஜா 23:10எரே 2:20எரே 3:13எரே 7:31லேவி 18:21
ஒவ்வொரு படர்ந்த மரத்தினடியிலும் காமவெறி கொள்கிறீர்கள்;
பாறைகளின் வெடிப்புகளிலும், தொங்கும் பாறைகளின் கீழும்
உங்கள் பிள்ளைகளைப் பலியிடுகிறீர்கள்.
வெடிப்புகளின் வழுவழுப்பான கற்களின் இடையில் இருக்கும் எரே 3:9எரே 7:18ஆப 2:19உபா 32:37-38எசேக் 20:39ஏசா 65:11ஏசா 66:3எரே 19:13
விக்கிரங்களே உங்கள் பங்கு;
அவை, அவைதான் உங்கள் பாகம்.
ஆம், அவைகளுக்கே நீங்கள் பானபலியை வார்த்து,
தானியபலியையும் செலுத்தியிருக்கிறீர்கள்.
இவை வெளிப்படையாயிருக்க நான் உங்களுக்குக் கருணைகாட்ட வேண்டுமோ?
நீ உயரமும், உன்னதமுமான குன்றின்மேல் உன் படுக்கையை விரித்தாய்; எசேக் 16:16எசேக் 23:41எரே 2:20எசேக் 16:25எசேக் 20:28-29எரே 3:6எரே 3:2எசேக் 23:17
பலிகளைச் செலுத்துவதற்காக நீ மேலே போனாய்.
உனது கதவுகளுக்கும், உனது கதவு நிலைகளுக்கும் பின்னால் எசேக் 16:25-28எசேக் 16:32எசேக் 23:2-20எசேக் 23:41எசேக் 8:8-12
நீ உனது தெய்வச் சின்னங்களை வைத்தாய்.
என்னைக் கைவிட்டு உன் படுக்கையை விரித்தாய்,
அதிலேறி அதை அகலமாக்கினாய்;
நீ எவர்களுடைய படுக்கையை விரும்பினாயோ அவர்களோடு ஒப்பந்தம் செய்தாய்,
நீ அவர்களுடைய நிர்வாணத்தைப் பார்த்தாய்.
நீ ஒலிவ எண்ணெயுடன் மோளேக் 1 தெய்வத்திடம் போனாய்; எசேக் 23:16கொலோ 2:18எசேக் 23:40ஏசா 30:1-6ஏசா 31:1-32இராஜா 16:7-11எசேக் 16:33ஓசி 12:1
நீ வாசனைத் தைலங்களை அதிகமாய்ப் பூசிக்கொண்டாய்.
நீ உனது தூதுவரை வெகுதூரத்திற்கு அனுப்பினாய்;
அவர்களைப் பாதாளத்துக்குள்ளுங்கூட இறங்கப்பண்ணினாய்!
உங்கள் எல்லா முயற்சிகளாலும் நீங்கள் களைத்துப்போனீர்கள், எரே 2:25எரே 18:12எரே 5:32 நாளாக 28:22-23எசேக் 24:12ஆப 2:13ஏசா 47:13எரே 2:36
ஆயினும் நீங்கள், ‘அது பயனற்றது’ என்று சொல்லவில்லை.
நீங்கள் கையில் புதிய பெலனை பெற்றபடியால்
சோர்ந்துபோகவில்லை.
“நீ யாருக்குப் பயந்து, நடுங்கி ஏசா 51:12-13நீதி 29:25சங் 50:21எரே 3:21பிரச 8:11ஏசா 26:10ஏசா 30:9ஏசா 59:3-4
எனக்குப் பொய்யாய் நடந்தாய்?
என்னை நினையாமலும்
இதைப்பற்றி உன் இருதயத்தில் சிந்திக்காமலும் இருந்தாய்?
நான் நெடுங்காலமாக அமைதியாய் இருந்தபடியினாலன்றோ
நீ எனக்குப் பயப்படாது போனாய்?
நான் உனது நீதியையும் உனது வேலைகளையும் ஏசா 1:11-15எரே 7:4-11மத் 23:13மீகா 3:2-4ரோம 3:10-20ஏசா 29:15ஏசா 58:2-6ஏசா 59:6-8
உனது செயல்களையும் வெளிப்படுத்துவேன்;
அவை உனக்கு உதவாது.
நீ உதவிகேட்டு அழுகிறபோது, சங் 37:9சங் 37:3ஏசா 56:7ஏசா 65:25எசேக் 20:40ஏசா 11:9ஏசா 65:9ஏசா 66:20
நீ சேகரித்த விக்கிரகங்கள் உன்னைக் காப்பாற்றட்டும்!
காற்று அவைகளை அள்ளிக்கொண்டு போகுமே!
வெறும் மூச்சே அவைகளை அடித்துக்கொண்டும்.
ஆனால் என்னை நம்பியிருக்கிறவர்களோ,
நாட்டைத் தன் சொத்துரிமையாக்கி,
எனது பரிசுத்த மலையையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.”
மனமுடைந்தோருக்கு ஆறுதல்
அப்பொழுது: ஏசா 62:10லூக் 3:5-6ஏசா 35:8ஏசா 40:3எரே 18:151 கொரி 8:13ரோம 14:13எபி 12:13
“கட்டுங்கள், கட்டுங்கள், வீதியை ஆயத்தம் பண்ணுங்கள்!
எனது மக்களின் வழியிலுள்ள தடைகளை நீக்கிவிடுங்கள்” என்று சொல்லப்படும்.
உயர்ந்திருப்பவரும், உன்னதமானவரும், என்றென்றும் வாழ்பவருமான சங் 34:18ஏசா 66:1-2சங் 138:6சங் 147:3யாத் 15:11தானி 4:34சங் 51:17ஏசா 40:28
பரிசுத்தர் என்னும் பெயரையுடையவர் சொல்வதாவது:
“இறைவனாகிய நான் உயரமான பரிசுத்த இடத்தில் வாழ்கிறேன்.
ஆனாலும் மனமுடைந்தவர்களுடனும், தாழ்மையான ஆவியுடையவர்களுடனும் இருக்கிறேன்.
ஆவியில் தாழ்மையுடையவர்களுக்குப் புத்துயிர் கொடுக்கவும்,
மனமுடைந்தவர்களின் இருதயத்தைத் திடப்படுத்தவும் நான் அவர்களுடன் இருக்கிறேன்.
நான் என்றென்றும் குற்றஞ்சாட்டமாட்டேன், எப்பொழுதும் கோபமாயிருக்கமாட்டேன். மீகா 7:18எரே 10:24சங் 103:9-16சங் 85:5எபி 12:9சங் 78:38-39ஆதி 6:3யோபு 34:14-15
ஏனெனில் அப்பொழுது மனிதனின் ஆவி,
என்னால் படைக்கப்பட்ட மனித சுவாசம்,
எனக்குமுன் சோர்வடைந்துவிடும்.
அவனுடைய பாவ பேராசையின் காரணமாக நான் அவன்மீது கடுங்கோபம் கொண்டேன், ஏசா 56:11கொலோ 3:5எரே 6:132 பேது 2:14எபே 5:3-51 தீமோ 6:9பிரச 6:9எசேக் 33:31
அவனைத் தண்டித்து கோபத்தில் என் முகத்தை மறைத்தேன்,
ஆனாலும் அவன் தன் மனம்போன போக்கிலேயே தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான்.
அவனுடைய வழிகளை நான் கண்டிருக்கிறேன்; எரே 33:6வெளி 7:17எரே 3:22ஓசி 14:4-8எரே 31:3எசேக் 16:60-63ஏசா 61:1-3எரே 13:17
ஆயினும் நான் அவனைச் சுகப்படுத்துவேன்;
அவனை வழிநடத்தி, மீண்டும் அவனுக்கு ஆறுதல் அளிப்பேன்;
நான் துயரப்படுகிறவர்களின் உதடுகளில் துதியைக் கொண்டுவருவேன். அப் 2:39எபி 13:15அப் 10:36எபே 6:19லூக் 10:5-6லூக் 2:14லூக் 21:152 கொரி 5:20-21
தொலைவிலும் அருகிலும் உள்ளவர்களுக்குச் சமாதானம், சமாதானம் என்றும்,
அவர்களை நான் சுகப்படுத்துவேன்”
என்றும் யெகோவா சொல்கிறார்.
ஆனால் கொடியவர்களோ, கொந்தளிக்கும் கடலைப்போல் இருக்கிறார்கள்; ஏசா 3:11நீதி 4:16-17யோபு 18:5-14யோபு 15:20-24யோபு 20:11-29யூதா 1:12சங் 73:18-20
அதற்கு அமைதியாய் இருக்கமுடியாது,
அதன் அலைகள் சேற்றையும் சகதியையும் அள்ளிக்கொண்டுவரும்.
“கொடியவருக்கோ, மன அமைதி இல்லை” என்று என் இறைவன் சொல்கிறார். ஏசா 48:22ஏசா 3:112இராஜா 9:22ஏசா 59:8ரோம 3:16-17