யூதத்தலைவர்கள் அடையாளம் கேட்டல்
பரிசேயரும் சதுசேயரும் இயேசுவிடம் வந்து, 1 வானத்திலிருந்து தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்படிக் கேட்டு, அவரைச் சோதித்தார்கள். லூக் 11:16அப் 4:1மத் 16:61 கொரி 1:22யோவா 8:6மாற் 8:11-21அப் 23:6-8அப் 5:17
இயேசு அதற்கு பதிலாக, “மாலை நேரம் ஆகும்போது ஆகாயம் சிவப்பாயிருந்தால், ‘நல்ல காலநிலை வரப்போகிறது’ என்று சொல்கிறீர்கள். லூக் 12:54-56 காலை நேரத்தில் ஆகாயம் சிவப்பாயும் மந்தாரமாயும் இருந்தால், ‘இன்று புயல்காற்று வீசும்’ என்று சொல்கிறீர்கள். ஆகாயத்தின் தோற்றத்தை விளக்கம் அளிக்க அறிந்திருக்கிறீர்களே! ஆனால் காலங்களின் அடையாளங்களை பகுத்தறிய உங்களால் முடியவில்லையே. லூக் 12:561 நாளாக 12:32லூக் 13:15மத் 11:5லூக் 11:44மத் 15:7மத் 22:18மத் 23:13 இந்தப் பொல்லாதவரும் விபசாரக்காரருமான இந்தத் தலைமுறையினர் அற்புத அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை” என்றார். இதற்குப் பின்பு இயேசு அவர்களைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். லூக் 11:29-30மத் 12:39-40யோனா 1:17மாற் 8:12மாற் 8:38மத் 15:14ஆதி 6:3மாற் 5:17-18
பரிசேயர் சதுசேயரின் புளிப்புச்சத்து
அவர்கள் கடலைக் கடந்து மறுகரைக்குப் போனபோது, சீடர்கள் உணவு எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். மாற் 8:13-14மத் 15:39 இயேசு அவர்களிடம், “கவனமாயிருங்கள்; பரிசேயர், சதுசேயர் என்பவர்களின் புளிப்புச்சத்தைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று அவர்களிடம் சொன்னார். லூக் 12:1கலா 5:9மத் 16:121 கொரி 5:6-8லேவி 2:11மாற் 8:152 தீமோ 2:16-17யாத் 12:15-19
“இது நாம் அப்பம் கொண்டுவராததினால்” இப்படிச் சொல்லுகிறார் என்று சீடர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். மாற் 8:16-18அப் 10:14லூக் 9:46மத் 15:16-18மாற் 9:10
அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வதை அறிந்த இயேசு அவர்களிடம், “விசுவாசம் குறைந்தவர்களே, அப்பம் இல்லாததைக் குறித்து நீங்கள் ஏன் உங்களுக்குள்ளே பேசுகிறீர்கள். மத் 6:30மத் 14:31மத் 8:26மாற் 16:14எபி 4:13யோவா 2:24-25யோவா 16:30வெளி 2:23 நீங்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லையா? உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்து, மீதியானதை எத்தனை கூடைகள் நிறையச் சேர்த்தீர்கள்? மத் 14:17-21யோவா 6:9-13லூக் 9:13-17மத் 15:16-17மாற் 6:38-44லூக் 24:25-27மாற் 7:18வெளி 3:19 அல்லது ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குக் கொடுத்து, மீதியானதை எத்தனை கூடைகளில் சேர்த்தீர்கள்? மத் 15:34-38மாற் 8:17-21மாற் 8:5-9 இப்படியிருக்க நான் அப்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை என்று நீங்கள் விளங்கிக்கொள்ளாதது எப்படி? ஆனால், பரிசேயர் சதுசேயரின் புளிப்பூட்டும் பொருளைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்றார். மத் 16:6மாற் 4:40மாற் 8:21யோவா 8:43லூக் 12:56 அப்பத்தைப் புளிப்பூட்டும் பொருளைக் குறித்து அல்ல, பரிசேயர், சதுசேயரின் போதனையைக்குறித்து விழிப்பாயிருக்கும்படியே அதைச் சொன்னார் என்று அப்பொழுதுதான் சீடர்கள் விளங்கிக்கொண்டார்கள். மத் 5:20அப் 23:8மத் 15:4-9மத் 23:13-28
பேதுருவின் அறிக்கை
இயேசு செசரியா பிலிப்பு பகுதிக்கு வந்தபோது, அவர் தமது சீடர்களிடம், “மக்கள் மானிடமகனாகிய என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார். லூக் 9:18-20மாற் 8:27-29தானி 7:13யோவா 5:27மத் 9:6எபி 2:14-18மத் 12:8மத் 13:37
அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் எரேமியா, அல்லது இறைவாக்கினர்களில் ஒருவர் என்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். மாற் 6:15மத் 14:2மல்கி 4:5யோவா 9:17லூக் 9:18-19யோவா 7:12யோவா 7:40-41லூக் 9:8
அப்பொழுது இயேசு, “நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். லூக் 9:20மாற் 8:29மத் 13:11
அதற்கு சீமோன் பேதுரு, “நீர் கிறிஸ்து, வாழும் இறைவனின் மகன்” என்றான். யோவா 11:27மத் 14:331 யோவா 4:15மத் 27:541 தீமோ 4:10அப் 9:201 தெச 1:9மத் 26:63
அதற்கு இயேசு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில், இது உனக்கு மனிதனால் 2 வெளிப்படுத்தப்படவில்லை. பரலோகத்திலிருக்கிற எனது பிதாவினாலேயே வெளிப்படுத்தப்பட்டது. யோவா 6:45எபே 1:17-18மத் 11:25-27கலா 1:161 யோவா 5:201 கொரி 15:50மத் 13:16-17கலா 1:11-12 எனவே நான் உனக்குச் சொல்கிறேன்: நீ பேதுரு 3, இந்தப் பாறையின்மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. எபே 2:19-221 கொரி 3:9-11ஏசா 28:16கொலோ 1:18சங் 125:1-2யோவா 1:42எபி 12:28அப் 2:47 நான் உனக்கு பரலோக அரசின் திறவுகோல்களைத் தருவேன்; நீ பூமியில் எதைக் கட்டுகிறாயோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீ பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறாயோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்” என்றார். மத் 18:18ஏசா 22:22வெளி 1:18யோவா 20:23வெளி 3:72 கொரி 2:10வெளி 11:61 கொரி 5:4-5 அதற்குப் பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், தாம் கிறிஸ்து என்பதை யாருக்கும் சொல்லவேண்டாம் என எச்சரித்தார். மாற் 8:30லூக் 9:21யோவா 1:41மத் 17:9லூக் 9:36மத் 8:41 யோவா 2:221 யோவா 5:1
இயேசு தமது மரணத்தை முன்னறிவித்தல்
அந்த வேளையிலிருந்து, இயேசு தம்முடைய சீடர்களுக்கு தாம் எருசலேமுக்குப் போகவேண்டும் என்றும், மக்கள் யூதரின் தலைவராலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் அநேக துன்பங்களை அனுபவிக்கவேண்டும் என்றும், அத்துடன் தாம் கொல்லப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும் என்றும் சொல்லத் தொடங்கினார். லூக் 24:6-7மத் 17:22-23மத் 20:17-191 கொரி 15:3-4மத் 17:12மத் 27:63மத் 20:28அப் 2:23-32
அப்பொழுது பேதுரு, இயேசுவை தனியே அழைத்துக் கொண்டுபோய், “ஆண்டவரே, இது ஒருபோதும் நடக்கக்கூடாது! இது ஒருபோதும் உமக்கு நேரிடாது” என்று அவரைக் கண்டிக்கத் தொடங்கினான். மாற் 8:32அப் 21:11-13யோவா 13:6-8மத் 16:16-17மத் 26:51-531 இராஜா 22:13
ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப்பார்த்து, “சாத்தானே, எனக்குப் பின்னாகப் போ. நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; நீ இறைவனின் காரியங்களை சிந்திக்காமல் மனிதனுக்கு ஏற்றக் காரியங்களையே சிந்திக்கிறாய்” என்றார். ரோம 8:5-8கொலோ 3:2பிலி 3:19மாற் 8:331 கொரி 2:14-15மத் 4:10யோவா 6:702 கொரி 11:14-15
இதற்குப் பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், “யாராவது என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், அவர்கள் தம்மையே வெறுத்து, தமது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும். மத் 10:38லூக் 14:271 பேது 4:1-2லூக் 9:23-27மாற் 10:21மாற் 8:342 தீமோ 3:12எபி 11:24-26 தம் உயிரைக் காத்துக்கொள்கிறவர்கள் அதை இழந்துபோவார்கள். ஆனால் தமது உயிரை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள். மத் 10:39வெளி 12:11மாற் 8:35யோவா 12:25லூக் 17:33அப் 20:23-24எஸ்த 4:16எஸ்த 4:14 ஒருவர் உலகம் முழுவதையும் சொந்தமாக்கினாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனால், அதனால் அவருக்குப் பலன் என்ன? அல்லது ஒருவர் தம் ஆத்துமாவுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? யோபு 27:8மாற் 8:36-37லூக் 9:25லூக் 12:20சங் 49:7-8லூக் 16:25யோபு 2:4மத் 5:29 மானிடமகனாகிய நான் எனது தூதர்களுடன் தம்முடைய பிதாவின் மகிமையில் வரப்போகிறேன். அப்பொழுது நான் ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்ததற்கு ஏற்ற வெகுமதியைக் கொடுப்பேன். சங் 62:122 கொரி 5:10ரோம 2:6ரோம 14:12எரே 17:10வெளி 22:12-15ஏசா 3:10-11எபே 6:8
“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர் மானிடமகனாகிய நான் என்னுடைய அரசில் வருவதைக் காண்பதற்கு முன்னே மரணமடைய மாட்டார்கள்” என்றார். லூக் 9:27மாற் 9:1யோவா 8:52மத் 26:64மத் 10:23லூக் 21:27-28லூக் 2:26மாற் 13:26