யெகோவாவின் நாள்
“நிச்சயமாகவே அந்த நாள் வருகிறது; அது சூளையைப்போல் எரியும். அப்பொழுது ஆணவம் கொண்ட எல்லோரும் தீமைசெய்கிற ஒவ்வொருவரும், பயிரின் அடித்தாழைப்போல் ஆவார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; வேரோ கிளையோ அவர்களுக்காக மிஞ்சுவதில்லை என சேனைகளின் யெகோவா சொல்கிறார். 2 தெச 1:82 பேது 3:7மல்கி 3:2ஏசா 47:14ஏசா 5:24ஒபதி 1:18மல்கி 3:15ஏசா 2:12-17 ஆனால் என் பெயரில் பயபக்தியுடன் வாழ்கிற உங்களுக்கு, நீதியின் சூரியன் உதிப்பார். அவரின் ஒளிக்கதிரில் சுகம் கொடுக்கும் தன்மை இருக்கும். நீங்களும் தொழுவத்திலிருந்து கட்டவிழ்க்கப்பட்டு வெளியே போகும் கன்றுகளைப்போல, துள்ளிக் குதிப்பீர்கள். எரே 33:6சங் 84:11ஏசா 30:26லூக் 1:78யோவா 8:12ஏசா 53:5வெளி 22:162 சாமு 23:4 நீங்கள் கொடியவர்களை மிதிப்பீர்கள்; நான் இவற்றைச் செய்யும் அந்த நாளில், அவர்கள் உங்கள் காலடிகளின் கீழே சாம்பலாவார்கள் என சேனைகளின் யெகோவா சொல்கிறார். யோபு 40:12ரோம 16:20மீகா 7:10சகரி 10:5யோசு 10:24-25மல்கி 3:17மீகா 5:8சங் 91:13
“என் அடியவன் மோசே, கொடுத்த சட்டத்தை நினைவுகூருங்கள். இஸ்ரயேலர் எல்லாருக்காகவும் நான் என் அடியவன் மோசேக்கு ஓரேப் மலையில் கொடுத்த விதிமுறைகளையும், சட்டங்களையும் நினைவிற்கொள்ளுங்கள். உபா 4:10யாக் 2:9-13கலா 5:13-14கலா 5:24-25லூக் 16:29-31ரோம 3:31உபா 4:5-6யாத் 20:3-21
“இதோ பாருங்கள், யெகோவாவின் பெரிதும் திகிலூட்டுகிறதுமான நாள் வருகிறது. அது வருவதற்கு முன்பாக நான் இறைவாக்கினன் எலியாவை அனுப்புவேன். லூக் 1:17மத் 17:10-13மாற் 9:11-13மத் 11:13-14மல்கி 3:1ஏசா 40:3யோவா 1:21யோவே 2:31 அவன் பெற்றோரின் இருதயங்களைப் பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் இருதயங்களை அவர்கள் பெற்றோரிடமும் திருப்புவான்; இல்லாவிடில் நான் வந்து நாட்டைச் சாபத்தால் தண்டிப்பேன்.” லூக் 1:16-17ஏசா 11:4எபி 10:26-31தானி 9:11மத் 23:35-38உபா 29:19-29ஏசா 65:15லூக் 1:76