ஏசாயா 30

Isaiah 30

எகிப்துடன் பயனற்ற ஒப்பந்தம்

“பிடிவாதமுள்ள என் பிள்ளைகளுக்கு ஐயோ கேடு!” ஏசா 65:2ஏசா 1:2ஓசி 7:13ஏசா 63:10ஓசி 4:10-12ஏசா 29:15ரோம 2:52 தீமோ 3:13

என்று யெகோவா அறிவிக்கிறார்.

“ஏனெனில் அவர்கள் என்னுடையதல்லாத திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள்.

என் ஆவியானவரினாலன்றி உடன்படிக்கை செய்து,

பாவத்திற்குமேல் பாவத்தைக் குவிக்கிறார்கள்.

என்னிடம் அறிவுரை கேளாமல் ஏசா 36:6எண் 27:21உபா 28:68எசேக் 29:6-7எரே 42:20எரே 43:7புலம் 4:201 இராஜா 22:7

எகிப்திற்குப் போகிறார்கள்.

அவர்கள் பார்வோனின் பாதுகாப்பின்கீழ் உதவிகோரி,

எகிப்தின் நிழலில் அடைக்கலம் தேடுகிறார்கள்.

ஆனால் பார்வோனின் பாதுகாவல் உங்களுக்கு வெட்கமாகும்; ஏசா 20:5எரே 17:5-6ரோம 10:11ரோம 5:5ஏசா 30:5-7ஏசா 36:6ஏசா 45:16-17எரே 37:5-10

எகிப்தின் நிழல் உங்களுக்கு அவமானத்தைக் கொண்டுவரும்.

சோவானில் அவர்களுக்கு தலைவர்கள் இருந்தாலும், ஏசா 19:11ஏசா 57:9எரே 43:72இராஜா 17:4எசேக் 30:14எசேக் 30:18ஓசி 7:11-12ஓசி 7:16

அவர்களுடைய பிரதிநிதிகள் ஆனேஸ்மட்டும் வந்து சேர்ந்தாலும்,

அவர்களுக்குப் பயனற்ற நாடான எகிப்தின் நிமித்தம் எரே 2:36ஏசா 30:7ஏசா 20:5-6ஏசா 30:16ஏசா 31:1-3

ஒவ்வொருவரும் வெட்கத்திற்குட்படுவார்கள்.

அவர்களால் யாதொரு உதவியோ, நன்மையோ கிடைப்பதில்லை;

வெட்கமும் அவமானமுமே கிடைக்கும்.”

நெகேவ் பாலைவனத்தின் மிருகங்களைப் பற்றிய இறைவாக்கு: 1 உபா 8:15ஏசா 46:1-2உபா 4:20எரே 11:41 இராஜா 10:2ஓசி 8:9-102 நாளாக 16:22 நாளாக 28:20-23

பெண் சிங்கங்களும், ஆண்சிங்கங்களும்,

விரியன் பாம்பும், பறக்கும் பாம்பும் இருக்கின்ற,

துன்பமும் வேதனையுமுள்ள நாட்டின் வழியாகத் தூதுவர் போகிறார்கள்.

அவர்கள் தமது செல்வங்களைக் கழுதைகள்மேலும்,

திரவியங்களை ஒட்டகங்கள்மேலும் ஏற்றிக்கொண்டு,

பயனற்ற நாட்டவரிடம் போகிறார்கள்.

எகிப்தியர் செய்யும் உதவி பயனற்றது. ஏசா 2:22ஓசி 5:13ஏசா 31:1-5ஏசா 7:4புலம் 3:26சங் 118:8-9யாத் 14:13ஏசா 28:12

ஆதலால் நான் எகிப்தை,

ஆற்றலிழந்த ராகாப் என்று அழைக்கிறேன்.

இப்பொழுது நீ போய், அவர்களுக்காக அதை ஒரு பலகையில் எழுதி, உபா 31:22ஆப 2:2ஏசா 8:1உபா 31:19எரே 36:2எரே 36:28-32எரே 51:60யோபு 19:23-25

ஒரு சுருளில் குறித்துவை;

எதிர்காலத்தில்

அது ஒரு நித்திய சாட்சியாய் இருக்கும்.

இவர்கள் கலகம் செய்யும் மக்கள், வஞ்சகம் நிறைந்த பிள்ளைகள்; ஏசா 30:1அப் 7:51ஏசா 1:4நீதி 28:9வெளி 21:8சகரி 1:4-6சகரி 7:11-12செப்ப 3:2

யெகோவாவின் வேதத்தைக் கேட்க விருப்பமற்ற பிள்ளைகள்.

இவர்கள் தரிசனம் காண்போரிடம், எசேக் 13:7-10ரோம 16:18ஆமோ 2:12ஆமோ 7:13எரே 11:21எரே 23:17எரே 23:26-29வெளி 11:7

“இனி தரிசனம் காணாதீர்கள்!” என்கிறார்கள்.

இறைவாக்கு உரைப்போரிடம்,

“எங்களுக்கு இனிமேல் யதார்த்தமாய் தரிசனங்களைச் சொல்லவேண்டாம்!

இன்பமானவற்றை எங்களுக்குக் கூறி,

போலியானவற்றை இறைவாக்காய் உரையுங்கள்.

எங்கள் வழியை விட்டுவிடுங்கள்; ரோம 8:7ஆமோ 7:13எபே 4:18ஏசா 29:21யோவா 15:23-24யோபு 21:14ரோம 1:28ரோம 1:30

எங்கள் பாதையைவிட்டு விலகுங்கள்;

இஸ்ரயேலின் பரிசுத்தரைப் பற்றி எங்கள் முன்பாக பேசுவதை நிறுத்துங்கள்!”

என்றும் சொல்கிறார்கள்.

ஆகையால் இஸ்ரயேலின் பரிசுத்தர் சொல்வது இதுவே: ஏசா 31:1-31 தெச 4:8ஆமோ 2:4ஏசா 5:24ஏசா 47:10லூக் 10:162 சாமு 12:9-10ஏசா 28:15

“நீங்கள் இந்தச் செய்தியை நிராகரித்தீர்கள்;

ஒடுக்குகிறதில் நம்பிக்கை வைத்து,

வஞ்சகத்தை சார்ந்திருக்கிறீர்கள்.

ஆனால் உயர்ந்த மதிலில் இருக்கும் வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, எசேக் 13:10-15ஏசா 29:51 இராஜா 20:30நீதி 29:1சங் 62:31 தெச 5:1-3யோபு 36:18லூக் 6:49

திடீரென ஒரு நொடியில் சரிந்து விழுவதுபோல,

இந்தப் பாவம் உங்களையும் வீழ்த்தும்.

நீங்கள் மண்பாத்திரம்போல் துண்டுகளாக உடைந்து போவீர்கள். சங் 2:9எரே 19:10-112 பேது 2:4-5வெளி 2:27எசேக் 24:14ரோம 11:21உபா 29:20எசேக் 15:3-8

அடுப்பிலிருந்து நெருப்புத்தணல் எடுக்கவோ,

அல்லது தொட்டியிலிருந்து தண்ணீர் எடுக்கவோ,

அந்தப் பாத்திரத்தின் ஒரு துண்டுகூட மீதியாய் இல்லாதிருப்பதுபோல,

நீங்களும் இரக்கமில்லாத முறையில் நொறுக்கப்பட்டுப் போவீர்கள்.”

இஸ்ரயேலின் பரிசுத்தரும் ஆண்டவருமாகிய யெகோவா சொல்வது இதுவே: ஏசா 26:3-4ஏசா 32:17எரே 3:22-23சங் 125:1-21 நாளாக 5:20யோவா 5:402 நாளாக 16:8லூக் 13:34

“மனந்திரும்பி, என்னில் அமர்ந்திருந்தால் உங்களுக்கு இரட்சிப்பு உண்டாகும்;

அமைதியிலும் நம்பிக்கையிலுமே உங்களுக்கு பெலன் உண்டாகும்,

ஆனால் நீங்கள் அதில் ஒன்றையுமே ஏற்க விரும்பவில்லை.

நீங்களோ, ‘இல்லை, நாங்கள் குதிரைகளில் தப்பி ஓடுவோம்’ என்றீர்கள். ஏசா 31:1ஆமோ 9:1உபா 28:25ஏசா 31:3எரே 4:13சங் 33:17ஆமோ 2:14-16உபா 28:49

ஆகையால் நீங்கள் தப்பி ஒடவே நேரிடும்.

‘வேகமான குதிரைகளில் ஏறிச்செல்வோம்’ என்றீர்கள்;

ஆகையால், உங்களைத் துரத்திப் பிடிப்பவர்களும் வேகமாகவே வருவார்கள்.

ஒருவனது பயமுறுத்தலுக்கு உபா 28:25உபா 32:30யோசு 23:10லேவி 26:36லேவி 26:8யோவா 15:2-6நீதி 28:1ரோம 11:17

ஆயிரம்பேர் பயந்து ஓடுவார்கள்;

ஐந்துபேர் பயமுறுத்த

நீங்கள் எல்லோரும் பயந்து ஓடுவீர்கள்.

மலை உச்சியில் தனித்து விடப்பட்டிருக்கும் கொடிக்கம்பம் போலவும்,

குன்றில் தனித்து விடப்பட்டிருக்கும் கொடிபோலவும்

சிலர் மட்டுமே மிஞ்சியிருப்பீர்கள்.”

அப்படியிருந்தும், யெகோவா உங்கள்மேல் கிருபை காட்ட ஆவலாய் இருக்கிறார்; 2 பேது 3:9புலம் 3:25-26நீதி 16:20ஏசா 25:9ஏசா 8:17சங் 34:82 பேது 3:15ஏசா 55:8

உங்களுக்கு இரக்கங்காட்டுவதற்கு எழும்புகிறார்.

ஏனெனில், யெகோவா நீதியுள்ள இறைவன்.

அவருக்காக காத்திருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

எருசலேமில் வாழும் சீயோன் மக்களே, இனிமேல் நீங்கள் அழமாட்டீர்கள்; நீங்கள் உதவிக்காகக் கூப்பிடும்போது, அவர் எவ்வளவு கிருபையுள்ளவராயிருப்பார்! அவர் அதைக் கேட்டவுடனேயே உங்களுக்குப் பதிலளிப்பார். ஏசா 60:20ஏசா 65:24சங் 50:15ஏசா 58:9மத் 7:7-111 யோவா 5:14-15வெளி 7:17ஏசா 25:8 யெகோவா உங்களுக்கு துன்பத்தின் அப்பத்தையும், இடுக்கணின் தண்ணீரையும் கொடுத்தாலும், உங்கள் போதகர்கள் இனி ஒருபோதும் மறைவாயிருக்கமாட்டார்கள். உங்கள் சொந்தக் கண்ணாலேயே நீங்கள் அவர்களைக் காண்பீர்கள். 1 இராஜா 22:27சங் 80:5ஆமோ 8:11-12அப் 14:22சங் 127:2சங் 74:9உபா 16:3சங் 102:9 நீங்கள் வழிதவறி இடதுபுறமோ, வலதுபுறமோ திரும்பினாலும், “இதுதான் வழி, இதிலே நடவுங்கள்” என்று உங்கள் பின்னால் சொல்லும் ஒரு குரலை உங்கள் காதுகள் கேட்கும். சங் 32:8நீதி 3:5-6ஏசா 58:11ஏசா 42:16உபா 5:32ஏசா 35:8-9சங் 143:8-10ஏசா 48:17 அப்போது நீங்கள் வெள்ளித் தகட்டால் மூடிய சிலைகளையும், தங்கத்தகட்டால் மூடிய உருவச்சிலைகளையும் புறக்கணித்து விடுவீர்கள். அவைகளை தீட்டுத் துணிபோல எறிந்துவிட்டு, “தொலைந்து போங்கள்!” என்பீர்கள். ஏசா 31:7நியாயாதி 17:3-4ஏசா 46:6சகரி 13:2யாத் 32:2-4எசேக் 36:31ஓசி 14:8ஏசா 17:7-8

யெகோவா, நீங்கள் நிலத்தில் விதைக்கும் விதைகளுக்காக உங்களுக்கு மழையையும் பெய்யப்பண்ணுவார். விளைச்சலில் வரும் உணவு, சிறந்ததாயும் அதிகமாயும் இருக்கும்; அந்த நாளிலே உங்கள் மந்தைகள் பரந்த புற்தரையில் மேயும். சகரி 8:11-12ஏசா 32:20சங் 65:9-13ஏசா 58:11சகரி 10:11 தீமோ 4:8ஆமோ 4:7-8ஆதி 41:18 நிலத்தை உழுகிற எருதும் கழுதையும் முறத்தினாலும், தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட சுவையுள்ள தீனியைத் தின்னும். ஆதி 45:6உபா 25:41 கொரி 9:9-101 சாமு 8:12உபா 21:4யாத் 34:21லூக் 3:17மத் 3:12 பெருங்கொலை நடக்கும் அந்த நாளிலே கோபுரங்கள் இடிந்துவிழும்; ஒவ்வொரு உயர்ந்த மலையிலும், ஒவ்வொரு உயரமான குன்றிலும் இருந்து நீரோடைகள் ஓடும். ஏசா 2:14-15ஏசா 35:6-7ஏசா 43:19-202 கொரி 10:4எசேக் 17:22எசேக் 34:13எசேக் 34:26எசேக் 39:17-20 யெகோவா தமது மக்களுக்கு தாம் ஏற்படுத்திய காயங்களைக் கட்டும்போதும், அவர்களைக் குணமாக்கும்போதும், சந்திரன் சூரியனைப்போல் பிரகாசிக்கும். சூரிய வெளிச்சம் ஏழு மடங்காகப் பிரகாசிக்கும். அது ஏழு முழு நாட்களின் வெளிச்சம் ஒன்றுதிரண்டாற்போல் இருக்கும். ஏசா 60:19-20உபா 32:39வெளி 22:5வெளி 21:23ஏசா 24:23யோபு 5:18சகரி 14:7எரே 33:5-6

இதோ, யெகோவாவின் பெயர் வெகுதூரத்திலிருந்து வருகிறது; 2 தெச 2:8செப்ப 3:8தானி 7:9உபா 32:22உபா 33:2எபி 12:29ஏசா 10:16-17ஏசா 10:5

அது எரியும் கோபத்துடனும், அடர்ந்த புகை மேகங்களுடனும் வருகிறது;

அவருடைய உதடுகள் கடுங்கோபத்தால் நிறைந்திருக்கின்றன,

அவருடைய நாவு எரிக்கும் நெருப்பு.

கழுத்துவரை உயர்ந்து, ஏசா 37:292 தெச 2:8ஏசா 11:4ஏசா 8:82இராஜா 19:28ஆமோ 9:9லூக் 22:31எபி 4:12

புரண்டோடும் வெள்ளம்போல அவருடைய மூச்சு இருக்கிறது.

அவர் நாடுகளை அழிவென்னும் சல்லடையில் சலித்தெடுக்கிறார்;

மக்கள் கூட்டங்களின் தாடைகளில் கடிவாளத்தை வைக்கிறார்.

அது அவர்களை வழிதவறப்பண்ணும்.

இரவில் ஒரு பரிசுத்த விழாவைக் கொண்டாடுவதுபோல, சங் 42:4யாத் 15:1-21சங் 95:1-2உபா 16:6உபா 32:4ஏசா 2:3ஏசா 26:4மத் 26:30

நீங்கள் பாடுவீர்கள்.

இஸ்ரயேலின் கற்பாறையாகிய

யெகோவாவின் மலைக்கு

மக்கள் புல்லாங்குழலுடன் போவதுபோல,

உங்கள் உள்ளமும் மகிழும்.

யெகோவா தமது மாட்சிமையான குரலை மனிதர் கேட்கும்படி செய்வார்; ஏசா 29:6சங் 18:13-14யோசு 10:11எசேக் 38:19-22ஏசா 28:2நாகூ 1:2-6வெளி 11:19வெளி 16:18-21

அத்துடன் அவர் தம்முடைய கரம் கீழ்நோக்கி வருவதை அவர்கள் காணும்படி செய்வார்.

அது கடுங்கோபத்துடனும், சுட்டெரிக்கும் நெருப்புடனும், திடீர் மழையுடனும்,

இடி முழக்கத்துடனும், கல்மழையுடனும் வரும்.

யெகோவாவின் குரல் அசீரியாவைச் சிதறப்பண்ணும்; ஏசா 10:5ஏசா 11:4ஏசா 9:4மீகா 5:5-6சங் 125:5சங் 17:13-14ஏசா 10:12ஏசா 10:15

அவர் தமது செங்கோலால் அவர்களை அடித்து வீழ்த்துவார்.

யெகோவா யுத்த களத்திலே, ஏசா 11:15எசேக் 32:10ஏசா 19:16ஏசா 2:19சங் 81:1-21 சாமு 10:5ஆதி 31:27எபி 12:26

தம் கரத்தால் அவர்களை அடித்து யுத்தம் செய்யும்போது,

அவர்கள்மேல் தனது தண்டனைக் கோலால் அடிக்கும் ஒவ்வொரு அடியும்,

தம்புராவினதும் யாழினதும் இசைக்கேற்ப இருக்கும்.

தோபேத் வெகுகாலமாகவே ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறது; 2இராஜா 23:10ஆதி 19:24எரே 19:61 பேது 1:8எபி 13:8எரே 19:11-14எரே 7:31-32மத் 4:22

அது அரசனுக்காகத் தயாராயிருக்கிறது.

அதன் நெருப்புக்குழி ஆழமாகவும்,

அகலமாகவும் செய்யப்பட்டு,

அதிலே ஏராளமான விறகும் நெருப்பும் இருக்கின்றன.

யெகோவாவின் மூச்சு கந்தகச் சுவாலைப்போல் வந்து

அதைப் பற்றியெரியச் செய்யும்.