கொடியவர்கள் தங்களை ஒருவரும் துரத்தாதிருந்தும் ஓடுகிறார்கள்; உபா 28:7சங் 53:5ஏசா 26:3-4சங் 27:1-2சங் 112:71 தெச 2:2அப் 4:13தானி 6:10-11
ஆனால் நீதிமான்கள் சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள்.
நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்யும்போது, ஆட்சியாளர்கள் அநேகர் இருப்பார்கள்; 1 இராஜா 16:8-29ஆதி 45:5-8யோபு 22:28-301 இராஜா 15:282இராஜா 15:8-311 இராஜா 15:252 நாளாக 32:20-262 நாளாக 36:1-12
ஆனால் விவேகமும் அறிவும் உள்ள ஆட்சியாளர் ஒழுங்கை நிலைநிறுத்துகிறார்.
ஏழைகளை ஒடுக்குகிற ஆளுநர், மத் 18:28-30
விளைச்சல் அனைத்தையும் அழிக்கும் பெருமழையைப் போலிருக்கிறான்.
சட்டங்களை புறக்கணிப்பவர்கள், கொடியவர்களைப் புகழ்கிறார்கள்; ரோம 1:32எபே 5:11மத் 14:4மத் 3:71 யோவா 4:51 இராஜா 18:18சங் 10:3சங் 49:18
ஆனால் அதைக் கைக்கொள்கிறவர்கள் அவர்களை எதிர்க்கிறார்கள்.
தீயவர்கள் நீதியை விளங்கிக்கொள்ளமாட்டார்கள்; யாக் 1:5சங் 92:61 யோவா 2:271 யோவா 2:20யோவா 7:17எரே 4:22மாற் 4:10-131 கொரி 2:14-15
ஆனால் யெகோவாவைத் தேடுகிறவர்கள் அதை முற்றுமாய் விளங்கிக்கொள்கிறார்கள்.
நேர்மையற்ற வழியில் நடக்கும் பணக்காரர்களைவிட, நீதி 19:1லூக் 16:19-23நீதி 28:18நீதி 19:22நீதி 16:8அப் 24:24-27
குற்றமற்ற வழியில் நடக்கும் ஏழைகளே சிறந்தவர்கள்.
விவேகமான மகன் சட்டங்களை கைக்கொள்கிறான்; நீதி 29:31 பேது 4:3-4நீதி 29:15லூக் 15:13நீதி 19:26நீதி 2:1-6நீதி 23:19-22நீதி 28:24
ஆனால் ஊதாரிகளுக்குக் கூட்டாளியாய் இருக்கும் மகனோ தன் பெற்றோரை அவமானப்படுத்துகிறான்.
வட்டியினாலும் அநியாய இலாபத்தினாலும் தன் செல்வத்தைப் பெருக்குகிறவர்கள், யோபு 27:16-17நீதி 13:22பிரச 2:26யாத் 22:25லேவி 25:36எசேக் 18:17எசேக் 18:13எசேக் 18:8
ஏழைகளுக்கு இரங்கும் மற்றவர்களுக்காக அதைச் சேர்க்கிறார்கள்.
சட்டத்திற்கு செவிசாய்க்காதவரின் ஜெபமும் சங் 66:182 தீமோ 4:3-4சகரி 7:11-13நீதி 15:8சங் 109:7ஏசா 1:15-16லூக் 13:25-27ஏசா 58:7-11
இறைவனுக்கு அருவருப்பாயிருக்கும்.
நீதிமான்களைத் தீயவழியில் நடத்துகிறவர்கள், நீதி 26:27சங் 37:25-26சங் 7:15-16மத் 6:33நீதி 10:3நீதி 15:6சங் 37:112 கொரி 11:13-15
தாங்கள் வைத்த கண்ணிக்குள் தாங்களே அகப்படுவார்கள்;
ஆனால் குற்றமற்றவர்கள் நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.
பணக்காரர்கள் தங்கள் பார்வைக்கு தாங்களே ஞானமுள்ளவர்களாய் காணப்படலாம்; நீதி 18:17பிரச 9:15-171 கொரி 3:18-19லூக் 16:13-14நீதி 19:1நீதி 26:16ரோம 12:16எசேக் 28:3-5
ஆனால் மெய்யறிவுள்ள ஏழைகளோ, அவர்கள் யார் என்பதை சரியாக அறிந்துகொள்கிறார்கள்.
நீதிமான்கள் வெற்றியடையும்போது பெருமகிழ்ச்சி உண்டாகிறது; நீதி 29:2நீதி 11:10நீதி 28:28எஸ்த 8:15-17யோபு 29:11-20எபி 11:37-381 நாளாக 15:25-281 நாளாக 16:7-36
ஆனால் கொடியவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்.
தங்கள் பாவங்களை மறைக்கிறவர்கள் செழிப்படைய மாட்டான், 1 யோவா 1:8-10சங் 32:3-5யோபு 31:33லூக் 15:18-24எரே 3:12-13சங் 51:1-5தானி 9:20-23சங் 51:10
ஆனால் அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவர்கள் எவர்களோ, அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
எப்பொழுதும் யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; நீதி 23:17சங் 2:11ஏசா 66:2எரே 32:40ரோம 11:201 பேது 1:17சங் 112:1எபி 4:1
ஆனால் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவர்களோ ஆபத்தில் விழுகிறார்கள்.
ஏழைகளை ஆட்சிசெய்யும் கொடியவன் 1 பேது 5:8மத் 2:16யாத் 1:22நீதி 19:12நீதி 20:21 சாமு 22:17-192இராஜா 21:16யாத் 1:14-16
கெர்ச்சிக்கிற சிங்கம் போலவும் பாயும் கரடியைப்போலவும் இருக்கிறான்.
ஏழைகளை ஒடுக்குகிற கொடுமையான ஆளுநருக்கு ஞானம் இல்லை, யாத் 18:211 இராஜா 12:101 இராஜா 12:14பிரச 4:1ஏசா 3:12ஏசா 33:15-16எரே 22:15-17நெகே 5:15
ஆனால் அநியாய வழியில் சம்பாதிக்கும் ஆதாயத்தை வெறுக்கிறவர்கள் நீடிய வாழ்வை அனுபவிப்பார்கள்.
கொலைகாரனின் துன்புறுத்தப்பட்ட குற்றமனசாட்சி, ஆதி 9:61 இராஜா 21:19யாத் 21:141 இராஜா 21:232 நாளாக 24:21-252இராஜா 9:26அப் 28:4மத் 27:4-5
அவனை கல்லறைக்கு இழுக்கும்;
யாரும் அவனை ஆதரிக்கவேண்டாம்.
குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள் பாதுகாக்கப்படுவார்கள், நீதி 10:9நீதி 28:6நீதி 11:3-6சங் 84:11வெளி 3:3எண் 22:321 தெச 5:32 பேது 2:1-3
ஆனால் தவறான வழியில் நடப்பவர்கள் திடீரென விழுந்துபோவார்கள்.
தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும், நீதி 12:11நியாயாதி 9:4நீதி 13:20நீதி 27:23-27லூக் 15:12-17நீதி 14:4நீதி 23:20-21
ஆனால் பகற்கனவு காண்பதில் நேரத்தை வீணடிப்பவர்களோ, அதிக வறுமையில் வாடுவார்கள்.
உண்மையுள்ள மனிதர் நிறைவாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்; லூக் 16:10-12நீதி 13:11நெகே 7:2நீதி 10:6சங் 101:6சங் 112:4-9வெளி 2:101 கொரி 4:2-5
ஆனால் விரைவாகப் பணக்காரனாக வேண்டுமென்பவர்கள், தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்.
பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல, எசேக் 13:19நீதி 18:5நீதி 24:23யாத் 23:2யாத் 23:8மீகா 3:5மீகா 7:32 பேது 2:3
ஆனாலும் சிலர் ஒரு சிறு அப்பத்துண்டிற்காகவும் அநியாயம் செய்வார்கள்.
பேராசைக்காரர்கள் பணக்காரனாவதற்கு ஆவலாயிருக்கிறார்கள், 1 தீமோ 6:9நீதி 23:6நீதி 28:20யோபு 27:16-17மத் 20:15ஆதி 13:10-13ஆதி 19:17யோபு 20:18-22
ஏழ்மை தங்களுக்கு வருமென்று அறியாதிருக்கிறார்கள்.
தன் நாவினால் முகஸ்துதி செய்பவரைவிட, நீதி 27:5-6மத் 18:15சங் 141:51 இராஜா 1:231 இராஜா 1:32-402 பேது 3:15-162 சாமு 12:7கலா 2:11
மற்றவரைக் கண்டிக்கிறவர்கள் முடிவில் அதிக தயவைப் பெறுவார்கள்.
தன் தகப்பனிடத்திலிருந்தோ தாயினிடத்திலிருந்தோ திருடிவிட்டு, மத் 15:4-6நீதி 18:9நீதி 19:26நியாயாதி 17:2நீதி 28:7நீதி 13:20
“அதில் ஒரு பிழையும் இல்லை” எனச் சொல்பவர்கள்
அழிவு உண்டாக்குகிறவர்களுக்குக் கூட்டாளியாயிருக்கிறார்கள்.
பேராசைக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்; நீதி 11:251 தீமோ 6:6நீதி 10:12நீதி 13:10நீதி 13:4நீதி 29:25எரே 17:7-8நீதி 15:18
ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைப்பவர்கள் செழிப்படைவார்கள்.
தங்களில் நம்பிக்கை வைப்பவர்கள் மூடராயிருக்கிறார்கள்; நீதி 3:5எரே 17:9யோபு 28:28ரோம 8:7யாக் 1:52 தீமோ 3:15யாக் 3:13-18மாற் 7:21-23
ஆனால் ஞானமுள்ளவர்களாய் நடக்கிறவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
ஏழைகளுக்குக் கொடுப்பவர்களுக்கு குறைவில்லை, நீதி 19:17உபா 15:7நீதி 11:24சங் 41:1-32 கொரி 9:6-11உபா 15:10சங் 112:5-9நீதி 22:9
ஆனால் ஏழைகளின் தேவைகளை கவனிக்காதவர்கள் அநேக சாபங்களைப் பெறுவார்கள்.
கொடியவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, மக்கள் மறைந்துகொள்கிறார்கள்; நீதி 29:2அப் 12:23-24யோபு 24:4நீதி 28:12எஸ்த 8:17
ஆனால் கொடியவர்கள் அழியும்போது நீதிமான்கள் பெருகுவார்கள்.