சங்கீதங்கள் 53

Psalms 53
சங்கீதம் 53

மகலாத் என்னும் பாணியில் வாசிக்கப்படும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்.

மூடன் தன் இருதயத்தில், “இறைவன் இல்லை” என்று சொல்கிறான். சங் 10:4சங் 14:1-7லூக் 12:20ரோம 3:10-31ரோம 1:281 இராஜா 14:24யோபு 15:16சங் 10:11

அவர்கள் சீர்கெட்டவர்கள்;

அவர்களுடைய வழிகள் இழிவானவை;

அவர்களில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.

இறைவன் பரலோகத்திலிருந்து ஏசா 55:62 நாளாக 15:2எரே 16:17சங் 27:8எரே 23:24சங் 111:102 நாளாக 19:3சங் 33:13-14

மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார்,

அவர்களில் விவேகமுள்ளவனாவது

இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.

எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; ரோம 3:12ஏசா 64:6ஏசா 53:6சங் 14:3எரே 8:5-63 யோவா 1:111 யோவா 2:292 கொரி 7:1

நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை,

ஒருவனாகிலும் இல்லை.

தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? எரே 4:22எரே 10:25சங் 27:2ஏசா 27:11சங் 94:8மத் 23:17-39வெளி 17:16

மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்;

அவர்கள் இறைவனை வழிபடுவதுமில்லை.

பயப்படுவதற்கு எதுவுமில்லாத இடத்திலே, நீதி 28:1லேவி 26:36எசேக் 6:5எரே 6:30சங் 141:7லேவி 26:17சங் 83:16-171 சாமு 14:15

அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள்.

உன்னைத் தாக்கியவர்களின் எலும்புகளை இறைவன் சிதறடித்தார்;

இறைவன் அவர்களைப் புறக்கணித்தபடியால், நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.

சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! எரே 30:18சங் 14:7ஏசா 12:6ஏசா 12:1-3ஏசா 14:32நெகே 12:43சங் 106:46-48சங் 126:1-4

இறைவன் தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,

யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!