பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
“இறைவன் இல்லை” என்று சங் 10:4சங் 53:1ரோம 3:10-12ரோம 1:21-32சங் 92:6எபே 2:1-3ஆதி 6:5மத் 12:34
மூடன் தன் இருதயத்தில் சொல்கிறான்.
அவர்கள் சீர்கெட்டவர்கள், அவர்களுடைய செயல்கள் இழிவானவை;
நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
யெகோவா பரலோகத்திலிருந்து ரோம 3:11எபி 11:6சங் 33:13-14சங் 102:19-20ஆதி 6:12மத் 13:152 நாளாக 19:3தானி 12:10
மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார்,
அவர்களில் விவேகமுள்ளவனாவது
இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.
எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; ரோம 3:10-12ஏசா 53:6ஏசா 64:6ரோம 3:23சங் 14:1ஏசா 59:13-15ஏசா 59:7-8யோபு 14:4
நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை,
ஒருவனாகிலும் இல்லை.
தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? சங் 79:6எரே 10:25சங் 82:5ஏசா 64:7ரோம 1:28ஆமோ 8:4எபே 4:17-18சங் 27:2
மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்;
அவர்கள் யெகோவாவை வழிபடுவதுமில்லை.
அவர்கள் அங்கே பயத்தில் நடுங்குகிறார்கள்; சங் 112:2சங் 73:15சங் 24:6ஏசா 43:1-21 பேது 2:9எஸ்த 8:7யாத் 15:16ஏசா 41:10
ஏனெனில் இறைவன் நீதிமான்களின் கூட்டத்தில் இருக்கிறார்.
தீமை செய்கிறவர்களே, நீங்கள் ஏழைகளின் திட்டங்களைக் குழப்புகிறீர்கள்; சங் 9:9சங் 4:2சங் 42:10தானி 3:15எசேக் 35:10ஏசா 37:10-11மத் 27:40-43நெகே 4:2-4
ஆனால் யெகோவாவோ ஏழைகளின் தஞ்சம்.
சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! சங் 53:6சங் 85:1
யெகோவா தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது
யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!