தாவீது அகிமெலேக்கின் வீட்டிற்கு சென்றான் என்று ஏதோமியனாகிய தோவேக்கு வந்து சவுலுக்கு சொன்னபோது பாடிய மஸ்கீல் என்னும் சங்கீதம்.
பலவானே, ஏன் தீமையைப்பற்றி பெருமை பாராட்டுகிறாய்? சங் 103:17சங் 107:1சங் 94:41 சாமு 21:7ஏசா 59:4நீதி 6:14ஆதி 10:8-9சங் 137:1-2
இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பு
எந்நாளும் உள்ளது.
வஞ்சகம் செய்கிறவனே, நீதி 18:21நீதி 6:16-19நீதி 12:18சங் 57:4எரே 9:3-4சங் 59:72 கொரி 11:132 கொரி 4:2
உன் நாவு அழிவை ஏற்படுத்த சதி செய்கிறது;
அது தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கிறது.
நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையையும் எரே 9:3-5யோவா 8:442 தீமோ 3:4மீகா 3:2வெளி 22:15எரே 4:22எரே 9:8ரோம 1:25
உண்மை பேசுவதைவிட பொய்யையும் விரும்புகிறாய்.
வஞ்சக நாவே, சங் 120:3யாக் 3:6-91 சாமு 22:18-19
நீ அனைத்துத் தீங்கான வார்த்தைகளை விரும்புகிறாய்!
இறைவன் உன்னை நிச்சயமாகவே நித்திய அழிவுக்குள்ளாக்குவார்: நீதி 2:22சங் 27:13வெளி 21:8ஏசா 38:11யோபு 18:14நீதி 12:19நீதி 19:9ஏசா 22:19
அவர் உன்னை உன் கூடாரத்திலிருந்து விலக்கி,
வாழ்வோரின் நாட்டிலிருந்து உன்னை வேரோடு எடுத்துப் போடுவார்.
இதைக்கண்டு நீதிமான்கள் பயப்படுவார்கள்; யோபு 22:19சங் 40:3சங் 37:34வெளி 15:4வெளி 18:20ஏசா 37:22சங் 119:120சங் 58:10-11
அவர்கள் அவனைப் பார்த்து சிரித்து,
“இதோ பாருங்கள், எரே 17:5பிரச 8:8சங் 49:6-20சங் 73:18-20யோவா 19:5யோபு 31:24-251 தீமோ 6:17ஓசி 12:7-8
இவன் இறைவனைத் தன் அரணாகக் கொள்ளாதவன்;
தன் மிகுந்த செல்வத்தில் நம்பிக்கை வைத்து,
தன்னுடைய அக்கிரமத்தில் பலத்துக்கொண்ட மனிதன்!” என்பார்கள்.
ஆனால் நானோ, செழித்து வளரும் ஒலிவமரத்தைப் போல் சங் 92:12-14ஓசி 14:6-8சங் 1:3சங் 13:5எரே 11:16சங் 147:11ரோம 11:24சங் 128:3
இறைவனின் ஆலயத்தில் இருக்கிறேன்;
நான் இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பில்
எப்பொழுதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
நீர் எனக்குச் செய்தவற்றிற்காக உமது பரிசுத்தவான்களுக்கு முன்பாக புலம் 3:25-26சங் 130:5-6சங் 73:28சங் 54:6நீதி 18:10சங் 62:5சங் 73:25-26எபே 3:20-21
நான் உம்மை என்றென்றும் துதிப்பேன்,
உம்முடைய பெயரில் நான் எதிர்பார்ப்பை வைப்பேன்;
இறைவனே உமது பெயர் நல்லது.