சங்கீதங்கள் 70

Psalms 70
சங்கீதம் 70

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

இறைவனே, என்னைக் காப்பாற்ற விரைவாய் வாரும்; சங் 40:13-17சங் 143:7சங் 71:12சங் 69:18சங் 38:12 சாமு 17:1-21

யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.

என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் சங் 35:4சங் 35:26ஏசா 41:11யோவா 18:6சங் 109:29சங் 71:13சங் 6:10ஏசா 28:13

வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக;

எனது அழிவை விரும்புகிற யாவரும்

அவமானமடைந்து திரும்புவார்களாக.

என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள், சங் 40:15நீதி 24:17-18அப் 1:18எசேக் 25:3எசேக் 26:2சங் 35:21சங் 35:25எசேக் 36:2

அவர்களுடைய வெட்கத்தினால் திரும்புவார்களாக.

ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் சங் 40:16புலம் 3:25ஏசா 61:10ஏசா 65:13-14சங் 35:27சங் 97:12யோவா 16:20சங் 5:11

உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக;

உமது இரட்சிப்பை விரும்புவோர்,

“இறைவன் பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக.

நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; சங் 40:17சங் 141:1வெளி 22:20சங் 69:29எபி 10:37சங் 13:1-2சங் 109:22

இறைவனே, என்னிடம் விரைந்து வாரும்.

நீரே என் துணை, நீரே என் மீட்பர்;

யெகோவாவே, தாமதியாதேயும்.