சங்கீதங்கள் 40

Psalms 40
சங்கீதம் 40

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

நான் யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; சங் 27:13-14சங் 37:7யாக் 5:7-11சங் 116:2சங் 34:15தானி 9:18சங் 130:2

அவர் என் பக்கமாய்த் திரும்பி என் கதறுதலைக் கேட்டார்.

அழிவின் குழியிலிருந்தும் சங் 37:23சங் 119:133சங் 27:5மத் 7:24-25சங் 61:2சங் 71:20யோனா 2:5-6சங் 69:2

மண் சகதியிலிருந்தும் அவர் என்னை வெளியே தூக்கியெடுத்தார்,

அவர் கற்பாறைமேல் என் கால்களை நிறுத்தி,

நிற்பதற்கு ஒரு உறுதியான இடத்தையும் எனக்குக் கொடுத்தார்.

எங்கள் இறைவனைத் துதிக்கும் ஒரு துதியின் கீதமான சங் 33:3சங் 103:1-5சங் 34:1-6சங் 52:6ஏசா 12:1-4சங் 144:9சங் 35:27வெளி 14:3

புதுப்பாட்டை அவர் என் வாயிலிருந்து வரச்செய்தார்.

அநேகர் அதைக்கண்டு பயந்து,

யெகோவாவிடம் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள்.

பொய்யான கடவுள்களைப் பற்றிக்கொள்ளாமலும், எரே 17:7-8சங் 84:11-12சங் 125:5சங் 34:8சங் 118:8-9சங் 2:12ரோம 15:12-132 தெச 2:9-11

அகந்தை உள்ளவர்களைச் சாராமலும்,

யெகோவாவைத் தனது நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

என் இறைவனாகிய யெகோவாவே, எரே 29:11யாத் 15:11சங் 139:17-18சங் 71:15சங் 92:5சங் 136:4ஏசா 55:8-9யோபு 9:10

நீர் எங்களுக்காக செய்துள்ள அதிசயங்களும்

உம்முடைய திட்டங்களும் அநேகம்.

உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை;

அவைகளைக் குறித்து நான் விவரிக்கப்போனால்,

அவை எடுத்துரைக்க முடியாதளவு ஏராளமானவைகள்.

பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எபி 10:5-12ஏசா 1:111 சாமு 15:22சங் 51:16ஓசி 6:6மத் 9:13மத் 12:7ஆமோ 5:22

தகன காணிக்கைகளும் பாவநிவாரண காணிக்கைகளும் உமக்குத் தேவையில்லை;

ஆனால் நான் கேட்டுக் கீழ்ப்படிவதற்கு என் செவிகளைத் திறந்துவிட்டீர்.

அப்பொழுது நான், “இதோ, நான் வருகிறேன்; எபி 10:7-9லூக் 24:44யோவா 5:39லூக் 24:271 கொரி 15:3-41 பேது 1:10-11அப் 10:43வெளி 19:10

புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறதே.

என் இறைவனே, நான் உமது விருப்பத்தைச் செய்ய விரும்புகிறேன்; ரோம 7:22யோவா 4:34எரே 15:16சங் 119:16சங் 119:24சங் 119:47சங் 37:30-31எரே 31:33

உமது சட்டம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று சொன்னேன்.

மகா சபையில் உமது நீதியை பிரசித்தப்படுத்துகிறேன்; சங் 22:25மாற் 16:15-16சங் 22:22சங் 71:15-18எபி 2:12சங் 119:13சங் 35:18லூக் 4:16-22

யெகோவாவே, நீர் அறிந்திருக்கிறபடி

நான் என் உதடுகளை மூடுவதில்லை.

நான் உமது நீதியை என் உள்ளத்தில் மறைப்பதில்லை; ரோம 1:16-17அப் 20:20-211 தீமோ 1:15ரோம 10:9-101 தெச 1:8லூக் 2:30-32அப் 13:32-33அப் 20:26-27

உமது உண்மையையும்,

இரட்சிப்பையும் குறித்து நான் பேசுகிறேன்.

உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் மகா சபைக்கு நான் மறைக்கவுமில்லை.

யெகோவாவே, எனக்கு இரக்கத்தைக் காட்டாமல் விடாதேயும்; சங் 23:6சங் 43:3சங் 57:3நீதி 20:28சங் 69:16சங் 61:7சங் 69:13சங் 85:10

உமது உடன்படிக்கையின் அன்பும் உமது உண்மையும் எப்போதும் என்னைப் பாதுகாப்பதாக.

ஏனெனில் எண்ணற்ற இன்னல்கள் என்னைச் சூழ்கின்றன; சங் 38:4சங் 73:26சங் 69:4ஏசா 53:6லூக் 18:13-14சங் 116:3சங் 19:121 பேது 3:18

என் பாவங்கள் என்னை மூடிக்கொண்டதால், நான் பார்க்க முடியாதிருக்கிறேன்.

என் தலையிலுள்ள முடியைப் பார்க்கிலும், அவைகள் அதிகமானவை;

அதினால் என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.

யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றும்; சங் 25:17-18சங் 38:22சங் 70:1-5மத் 26:36-44சங் 22:19சங் 71:12

யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.

என் உயிரை அழிக்கத் தேடுகிற யாவரும் சங் 35:26சங் 35:4ஏசா 45:24யோவா 18:6சங் 71:13சங் 31:17-18சங் 9:3அப் 12:23-24

வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக;

எனது அழிவை விரும்புகிற யாவரும்

அவமானமடைந்து திரும்புவார்களாக.

என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள் சங் 35:21சங் 35:25சங் 69:24-25லூக் 19:43-44லூக் 21:23-24சங் 109:6-20சங் 70:3-4சங் 73:19

அவர்களுடைய வெட்கத்தினால் நிலைகுலைந்து போவார்களாக.

ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் சங் 35:27சங் 68:3அப் 19:17சங் 119:123ஏசா 65:13-14லூக் 1:46-47பிலி 3:7-9சங் 105:3

உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக;

உமது இரட்சிப்பை விரும்புவோர், “யெகோவா பெரியவர்!”

என்று எப்போதும் சொல்வார்களாக.

நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; சங் 70:5எபி 13:6ஏசா 41:171 பேது 5:7சங் 34:6சங் 54:4சங் 86:11 பேது 2:23

யெகோவா என்னை நினைப்பாராக.

நீரே என் துணை, நீரே என் மீட்பர்;

என் இறைவனே, தாமதியாதேயும்.