தாவீது சவுலிடமிருந்து தப்பிக் குகைக்குள் ஒளிந்துகொண்டிருந்தபோது, “அழிக்காதே” என்ற இசையில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம்.
என்மேல் இரக்கமாயிரும், இறைவனே, என்மேல் இரக்கமாயிரும், சங் 91:4சங் 17:7-8சங் 36:7சங் 63:7சங் 9:10சங் 61:4வெளி 21:4யாக் 5:10-11
என் ஆத்துமா உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறது.
பேரழிவு கடந்து செல்லுமளவும்,
நான் உமது சிறகுகளின் நிழலில் புகலிடம் கொள்வேன்.
எனக்காக யாவையும் செய்து முடிக்கும், சங் 138:8பிலி 1:6எபி 13:21ஏசா 26:12பிலி 2:12சங் 136:2-3ஏசா 57:15சங் 56:2
மகா உன்னதமானவரான இறைவனை நோக்கி நான் கூப்பிடுவேன்.
அவர் பரலோகத்திலிருந்து உதவி அனுப்பி என்னைக் காப்பாற்றுவார், சங் 40:11சங் 43:3அப் 12:11சங் 144:5-7சங் 56:1-2சங் 61:7மத் 28:2-6யோவா 1:17
என்னைத் தாக்குகிறவர்களைக் கடிந்துகொள்வார்;
இறைவன் தமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் அனுப்புவார்.
நான் சிங்கங்களின் நடுவில் இருக்கிறேன்; சங் 58:6நீதி 30:14சங் 35:17சங் 55:21நீதி 12:18சங் 64:3தானி 6:22-24யோவா 4:10-11
என்னை எதிர்க்கும் மனுமக்களின் மத்தியில் இருக்கிறேன்;
அவர்களுடைய பற்கள் ஈட்டிகளும் அம்புகளுமாய் இருக்கிறது;
அவர்களின் நாவுகளோ கூர்மையான வாள்கள்.
இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; ஆப 2:14ஏசா 6:3சங் 72:19எண் 14:21சங் 57:11சங் 108:4-5சங் 113:4-6ஆப 3:3
உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக.
என் கால்களுக்கு அவர்கள் வலையை விரித்தார்கள்; சங் 145:14நீதி 28:10சங் 7:15-16மீகா 7:2சங் 140:5சங் 35:7-8சங் 9:15-16நீதி 29:5
துயரத்தினால் நான் சோர்ந்து போனேன்.
அவர்கள் என் பாதையில் ஒரு குழியைத் தோண்டினார்கள்;
அதற்குள் அவர்களே விழுந்து போனார்கள்.
என் இருதயம் உறுதியாயிருக்கிறது, சங் 112:7எபே 5:20சங் 34:4ரோம 5:3ஏசா 24:15சங் 108:1-5
இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது;
நான் இசையமைத்துப் பாடுவேன்.
என் ஆத்துமாவே, விழித்தெழும்பு! சங் 16:9சங் 30:12நியாயாதி 5:12சங் 108:1-3ஏசா 52:1அப் 2:26ஏசா 52:9சங் 150:3
யாழே, வீணையே, விழித்தெழுங்கள்!
நான் அதிகாலையில் விழித்தெழுவேன்.
ஆண்டவரே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; சங் 22:22-23சங் 96:3சங் 18:49ரோம 15:9சங் 138:1சங் 138:4-5சங் 2:1சங் 145:10-12
மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன்.
ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களை எட்டுகிறது; சங் 108:4சங் 103:11சங் 36:5ஏசா 54:7-10சங் 71:19எபி 6:17-18சங் 85:10-11சங் 89:1-2
உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது.
இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; சங் 57:5சங் 8:1வெளி 15:3-4சங் 8:9
உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக.