யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்; சங் 31:1-3சங் 25:2-31 பேது 2:6சங் 22:5எரே 17:18ஏசா 45:17சங் 125:11 நாளாக 5:20
என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்.
உமது நீதியின் நிமித்தம் என்னை விடுவித்து, என்னை மீட்டுக்கொள்ளும்; சங் 31:1சங் 17:6சங் 116:1-2சங் 143:111 கொரி 10:13சங் 10:17-18சங் 143:1சங் 17:2
உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னைக் காப்பாற்றும்.
நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க சங் 18:2நீதி 18:10உபா 33:27சங் 31:2-3சங் 91:11-12சங் 91:9சங் 42:8ஏசா 33:16
என் புகலிடமான கன்மலையாய் இரும்;
நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால்,
என்னைக் காப்பாற்றக் கட்டளையிடும்.
என் இறைவனே, என்னைக் கொடியவன் கையிலிருந்து விடுவியும்; சங் 140:1-4சங் 59:1-22 சாமு 17:1-2சங் 17:13சங் 17:8-92 சாமு 16:21-222 சாமு 17:12-142 சாமு 17:21
தீமையும் கொடூரமும் நிறைந்த மனிதரின் பிடியிலிருந்தும் விடுவியும்.
ஆண்டவராகிய யெகோவாவே, நீரே என் எதிர்பார்ப்பு; எரே 17:7சங் 39:7சங் 119:81சங் 71:171 சாமு 17:45-47எரே 17:17சங் 119:166சங் 22:9-10
என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை.
நான் பிறந்ததுமுதல் உம்மைச் சார்ந்திருக்கிறேன்; எரே 1:5சங் 22:9-10சங் 139:15-16கலா 1:15ஏசா 49:1ஏசா 46:3-4ஏசா 49:5சங் 34:1
என் தாயின் கருப்பையிலிருந்து என்னைப் பராமரித்தவர் நீரே;
நான் என்றென்றும் உம்மைத் துதிப்பேன்.
நான் அநேகருக்கு வியப்புக்குரிய எடுத்துக்காட்டாய் இருக்கிறேன்; ஏசா 8:181 கொரி 4:9அப் 4:13சங் 62:72 கொரி 6:8-10எரே 16:19சங் 61:32 கொரி 4:8-12
நீரே என் பலமுள்ள புகலிடம்.
நாள்முழுவதும் உம்முடைய மகத்துவத்தை அறிவித்து, சங் 35:28சங் 146:2சங் 104:1சங் 71:15சங் 71:24சங் 145:1-2சங் 51:14-15சங் 63:5
என் வாய் உமது துதியினால் நிறைந்திருக்கிறது.
நான் முதியவனாகும்போது, என்னைத் தள்ளிவிடாதேயும்; ஏசா 46:42 தீமோ 1:12சங் 71:18சங் 90:10சங் 92:13-152 தீமோ 4:18பிரச 12:1-7சங் 73:26
என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாதேயும்.
ஏனெனில் என் பகைவர் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; சங் 31:13சங் 56:6சங் 83:3எரே 20:10மத் 26:3-4சங் 37:32-331 சாமு 19:112 சாமு 17:1-14
என்னைக் கொலைசெய்யக் காத்திருக்கிறவர்கள் ஒன்றுகூடி சதி செய்கிறார்கள்.
அவர்கள், “இறைவன் அவனைக் கைவிட்டுவிட்டார்; சங் 7:2மத் 27:46சங் 3:2சங் 50:222 நாளாக 32:13-14தானி 3:15மத் 27:42-43மத் 27:49
அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்;
அவனை விடுவிக்கிறவர் யாருமே இல்லை” என்கிறார்கள்.
இறைவனே, என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; சங் 35:22சங் 38:21-22சங் 22:11சங் 10:1சங் 69:18சங் 70:5சங் 143:7சங் 22:19
என் இறைவனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்;
என்மீது குற்றம் சுமத்துகிறவர்கள் வெட்கத்தால் அழிந்துபோவார்களாக; எரே 20:11சங் 71:24சங் 109:29சங் 35:26சங் 35:4ஏசா 41:111 பேது 5:5சங் 132:18
எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள்,
ஏளனத்தாலும் அவமானத்தாலும் மூடப்படுவார்களாக.
நானோ எப்பொழுதுமே எதிர்பார்ப்புடனே இருப்பேன்; 1 யோவா 3:3சங் 130:7புலம் 3:26சங் 43:5சங் 71:6எபி 10:351 பேது 1:13புலம் 3:21
நான் மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
எப்பொழுதும் என் வாய் உமது நீதியைப்பற்றிச் சொல்லும்; சங் 40:5சங் 35:28சங் 71:8சங் 139:17-18சங் 145:2சங் 145:5-14சங் 40:9-10சங் 71:24
உமது இரட்சிப்பின் செயல்களை நான் அறியாதிருந்த போதிலும்,
அதைப்பற்றி நாள்தோறும் என் வாய் சொல்லும்.
ஆண்டவராகிய யெகோவாவே, நான் உமது வல்லமையான செயல்களை எடுத்துச்சொல்வேன்; பிலி 4:13பிலி 3:9மத் 6:33சங் 29:11சங் 51:14சகரி 10:122 தெச 1:6எபே 3:16
நான் உம்முடைய நீதியை மட்டுமே பிரசித்தம் பண்ணுவேன்.
இறைவனே, என் இளமையிலிருந்தே நீர் எனக்குப் போதித்திருக்கிறீர்; சங் 119:9சங் 119:102சங் 71:5உபா 4:51 சாமு 17:36-372 சாமு 4:9சங் 26:7சங் 66:16
நான் உமது அற்புதமான செயல்களை இன்றுவரை அறிவித்து வருகிறேன்.
இறைவனே, வரப்போகும் எல்லோருக்கும் அடுத்த தலைமுறைக்கும் ஏசா 46:4சங் 71:9சங் 78:4சங் 145:4-5சங் 78:6யாத் 13:14-17சங் 22:311 சாமு 4:18
உமது ஆற்றலையும் உம்முடைய வல்லமையையும் அறிவிக்குமளவும்
நான் முதிர்வயதாகும்போதும் என் தலைமுடி நரைக்கும்போதும்,
என்னைக் கைவிடாதேயும்.
பெரிய காரியங்களைச் செய்த இறைவனே, சங் 35:10சங் 36:5-6ஏசா 55:9சங் 57:10யாத் 15:11ஏசா 40:18எரே 10:7சங் 126:2-3
உமது நீதி ஆகாயங்களை எட்டுகிறது;
இறைவனே, உம்மைப்போல் யாருண்டு?
நீர் என்னை அநேக கசப்பான சங் 138:7ஓசி 6:1-2சங் 60:3சங் 86:13எசேக் 37:12-13சங் 40:1-3சங் 80:18சங் 119:25
துன்பங்களையும் காணச் செய்திருந்தாலும்
என் வாழ்வை மீண்டும் புதுப்பிப்பீர்;
பூமியின் ஆழங்களில் இருந்து
நீர் என்னை மறுபடியும் மேலே கொண்டுவருவீர்.
நீர் என் மேன்மையைப் பெருகப்பண்ணி, 2 சாமு 3:1ஏசா 12:1சங் 18:35சங் 86:172 கொரி 1:4-5சங் 32:10ஏசா 49:13ஏசா 49:6
மீண்டும் என்னைத் தேற்றுவீர்.
என் இறைவனே, நான் உமது உண்மையைப் பற்றி சங் 92:1-32இராஜா 19:22சங் 33:2சங் 89:18ஆப 3:18-19ஏசா 12:6ஏசா 57:15ஏசா 5:24
வீணை இசைத்து உம்மைத் துதிப்பேன்;
இஸ்ரயேலின் பரிசுத்தரே,
யாழ் இசைத்து நான் உமக்குத் துதி பாடுவேன்.
உம்மால் மீட்கப்பட்ட நான் சங் 103:4சங் 104:33லூக் 1:46-47வெளி 5:9சங் 34:222 சாமு 4:9ஆதி 48:16சங் 63:5
உமக்குத் துதிபாடும்போது,
என் உதடுகளும் கம்பீரித்து மகிழும்.
என் நாவு நாள்முழுவதும் சங் 71:131 கொரி 15:25சங் 18:37-43சங் 35:28சங் 92:11உபா 11:19எபே 4:29மத் 12:35
உமது நீதியின் செயல்களைப் பற்றிச் சொல்லும்;
ஏனெனில் எனக்குத் தீங்குசெய்ய விரும்பியவர்கள்
வெட்கத்திற்கும் கலக்கத்திற்கும் உள்ளானார்கள்.