சங்கீதங்கள் 104

Psalms 104
சங்கீதம் 104

என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. சங் 103:22சங் 145:3சங் 96:6தானி 9:4ஏசா 59:17சங் 103:1-2சங் 93:1எரே 32:17-19

என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எவ்வளவு பெரியவர்;

மேன்மையையும், மகத்துவத்தையும் நீர் அணிந்திருக்கிறீர்.

யெகோவா ஆடையைப்போல ஒளியை அணிந்துள்ளார்; ஏசா 40:22தானி 7:9ஏசா 45:121 யோவா 1:51 தீமோ 6:16எபி 1:10-12மத் 17:2சகரி 12:1

அவர் வானங்களை ஒரு கூடாரத்தைப்போல் விரித்துள்ளார்.

அவர் தமது மேலறைகளை மழைமேகங்களின் மேலாக அமைக்கிறார்; ஆமோ 9:62 சாமு 22:11ஏசா 19:1சங் 18:10-11நாகூ 1:3சங் 139:9மத் 26:64வெளி 1:7

அவர் மேகங்களைத் தமது தேராக்கி,

காற்றின் சிறகுகள்மேல் செல்கிறார்.

அவர் காற்றுகளைத் தமது இறைத்தூதுவர்களாவும், எபி 1:72இராஜா 2:112இராஜா 6:17எபி 1:14சங் 148:8எசேக் 1:13அப் 23:8

நெருப்பு ஜூவாலைகளைத் தம்முடைய ஊழியர்களாகவும் ஆக்குகிறார்.

அவர் பூமியை அதின் அடித்தளங்கள்மீது அமைத்தார்; யோபு 26:7சங் 24:2சங் 33:9சங் 96:10வெளி 20:112 பேது 3:10பிரச 1:4சங் 136:6

அது ஒருபோதும் அசைக்கப்படாது.

உடையினால் மூடுவது போல் நீர் அதை ஆழ்கடலினால் மூடினீர்; ஆதி 7:192 பேது 3:5ஆதி 1:2-10

வெள்ளம் மலைகளுக்கு மேலாய் நின்றது.

ஆனாலும் உமது கண்டிப்பின்முன் வெள்ளம் விலகி ஓடியது; சங் 18:15ஆதி 8:1மாற் 4:39நீதி 8:28சங் 106:9சங் 114:3-7சங் 77:18

உமது முழக்கத்தின் சத்தத்தைக் கேட்டு அது விரைந்து ஓடியது.

அவைகள் மலைகளுக்கு மேலாய் ஓடி, ஆதி 8:5சங் 33:7

பள்ளத்தாக்குகளில் இறங்கி,

நீர் அவைகளுக்கு ஏற்படுத்திய இடத்தில் நின்றன.

அவைகள் கடக்கமுடியாத ஓர் எல்லையை நீர் ஏற்படுத்தினீர்; யோபு 38:10-11ஆதி 9:11-15ஏசா 54:9எரே 5:22யோபு 26:10சங் 33:7

அவை இனி ஒருபோதும் பூமியை மூடிக்கொள்ளாது.

அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்; ஏசா 41:18சங் 107:35ஏசா 35:7உபா 8:7

அது மலைகளுக்கிடையே ஓடுகின்றது.

அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன; சங் 145:16யோபு 39:5-8சங் 104:13

காட்டுக் கழுதைகளும் அங்கே தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றன.

ஆகாயத்துப் பறவைகள் நீர்நிலைகளின் அருகே கூடு கட்டுகின்றன; சங் 50:11சங் 148:10மத் 6:26மத் 8:20சங் 104:16-17சங் 147:9சங் 84:3

கிளைகளின் மத்தியிலே அவை பாடுகின்றன.

அவர் தமது மேலறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்; சங் 147:8எரே 10:13எரே 14:22உபா 11:11யோபு 38:25-28யோபு 38:37சங் 65:9-13அப் 14:17

பூமி அவருடைய செய்கையின் பலனால் திருப்தியடைகிறது.

அவர் மந்தைகளுக்காகப் புல்லையும், சங் 136:25சங் 147:8-9யோபு 28:5சங் 145:15-161 கொரி 3:7ஆதி 9:3ஆதி 1:11-12ஆதி 3:18

மனிதன் பயிரிடும் தாவரங்களையும் வளரச்செய்கிறார்,

அவர் பூமியிலிருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கிறார்:

மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும், சங் 23:5பிரச 10:19பிரச 9:7நியாயாதி 9:13எபே 5:18எபி 1:9சங் 92:101 யோவா 2:20

அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும்,

அவர்களைப் பெலப்படுத்தும் உணவையும் விளைவிக்கிறார்.

யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்கு எண் 24:6சங் 29:5சங் 92:2எசேக் 17:23

நல்ல நீர்ப்பாய்ச்சலை கொடுக்கிறார்.

அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன; சங் 104:12லேவி 11:19தானி 4:21எசேக் 31:6எரே 22:23எரே 8:7மத் 13:32ஒபதி 1:4

கொக்குகள் தேவதாரு மரங்களில் குடியிருக்கின்றன.

உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும், நீதி 30:26யோபு 39:11 சாமு 24:2லேவி 11:5உபா 14:7

செங்குத்தான பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாயும் இருக்கின்றன.

காலங்களைக் குறிக்க அவர் நிலவைப் படைத்தார்; ஆதி 1:14-18எரே 31:35சங் 136:7-9யோபு 38:12சங் 19:6சங் 8:3யோபு 31:26-28உபா 4:19

சூரியன் தான் எப்போது மறையவேண்டும் என்பதை அறியும்.

நீர் இருளைக் கொண்டுவருகிறீர், அப்பொழுது இரவாகின்றது; ஏசா 45:7சங் 74:16ஆமோ 1:13ஆதி 1:4-5ஆதி 8:22சங் 139:10-12சங் 50:10

காட்டு மிருகங்கள் எல்லாம் பதுங்கித் திரிகின்றன.

சிங்கங்கள் தங்கள் இரைக்காகக் கர்ஜிக்கின்றன; யோபு 38:39யோவே 1:20சங் 34:10எசேக் 19:2-14யோவே 2:22ஆமோ 3:4ஏசா 31:4யோபு 38:41

இறைவனிடமிருந்து அவை தங்களுடைய உணவைத் தேடுகின்றன.

சூரியன் உதித்ததும் அவை ஒளிந்து ஓடுகின்றன; யோபு 37:8யோவா 3:20யோபு 24:13-17நாகூ 3:17

அவை திரும்பிப்போய் தங்கள் குகைகளில் படுத்துக் கொள்கின்றன.

அப்பொழுது மனிதன் தன் வேலைக்குப் போகிறான்; ஆதி 3:19பிரச 5:12எபே 4:28நியாயாதி 19:162 தெச 3:8-12

மாலையாகும்வரை தன் தொழிலில் ஈடுபடுகின்றான்.

யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை! எரே 10:12சங் 40:5சங் 50:10-12எபே 3:10ரோம 11:33சங் 107:31ஆதி 1:24-25சங் 24:1

அவை அனைத்தையும் நீர் ஞானத்தில் படைத்திருக்கிறீர்;

பூமி நீர் படைத்த உயிரினங்களால் நிறைந்திருக்கின்றது.

அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு; சங் 69:34சங் 95:4-5அப் 28:5ஆதி 1:28உபா 33:14-16ஆதி 1:20-22ஆதி 3:1உபா 33:19

பெரிதும் சிறிதுமான எண்ணிலடங்கா

வாழும் உயிரினங்கள் அங்கே உண்டு.

அங்கே கப்பல்கள் இங்குமங்கும் போகின்றன; சங் 107:23ஏசா 27:1சங் 74:14எசேக் 27:9ஆதி 49:13யோபு 3:8யோபு 41:1-34

நீர் உருவாக்கிய லிவியாதானும் அங்கே துள்ளி விளையாடும்.

நீர் அவைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பீர் என்று சங் 136:25சங் 147:9யோபு 38:41லூக் 12:24-28சங் 145:15-16யோபு 36:31சங் 36:6

அவைகளெல்லாம் உம்மையே பார்த்திருக்கின்றன.

நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது, சங் 145:16

அவை சேகரித்துக்கொள்கின்றன;

நீர் உமது கரத்தைத் திறக்கும்போது,

அவை நன்மைகளால் திருப்தியடைகின்றன.

நீர் உமது முகத்தை மறைக்கும்போது, பிரச 12:7யோபு 34:14-15சங் 146:4அப் 17:25ஆதி 3:19சங் 30:7சங் 90:3யோபு 10:9

அவை திகைக்கின்றன;

நீர் அவைகளின் சுவாசத்தை எடுத்துவிட,

அவை இறந்து தூசிக்குத் திரும்புகின்றன.

நீர் உமது ஆவியை அனுப்புகையில், யோபு 33:4எசேக் 37:9வெளி 21:5ஏசா 65:17யோபு 26:13சங் 33:6தீத் 3:5எபே 2:1

அவை படைக்கப்படுகின்றன;

நீர் பூமியின் மேற்பரப்பைப் புதுப்பிக்கிறீர்.

யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருப்பதாக; 2 தீமோ 4:18ஆதி 1:31எபே 3:21எரே 32:41யாத் 31:17ஏசா 62:5ஏசா 65:18-19லூக் 15:22-24

யெகோவா தமது செயல்களில் மகிழ்வாராக.

அவர் பூமியைப் பார்க்கும்போது அது நடுங்குகின்றது; சங் 144:5யாத் 19:18சங் 97:4-5ஆப 3:10சங் 114:7ஆமோ 8:8ஆப 3:5-6ஏசா 64:1-2

மலைகளைத் தொடும்போது அவை புகைகின்றன.

நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்; சங் 63:4சங் 146:2சங் 145:1-2

நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.

நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது, ஆப 3:17-18பிலி 4:4சங் 1:2சங் 119:127-128சங் 119:15-16லூக் 1:47சங் 9:2சங் 119:111

என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக.

ஆனால் பாவிகள் பூமியிலிருந்து இல்லாமல் போவார்களாக; சங் 103:22நீதி 2:22சங் 106:48சங் 37:38சங் 68:1-2வெளி 19:1-2சங் 1:4சங் 101:8

கொடியவர்கள் இனி இல்லாமல் போவார்கள்.

என் ஆத்துமாவே யெகோவாவைத் துதி.

அல்லேலூயா.