பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு.
பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன் 1 நாளாக 16:23-24சங் 100:1சங் 98:4சங் 150:6சங் 81:11 நாளாக 15:28சங் 117:1-2சங் 95:1-2
இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்!
அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்; சங் 105:2-3ஏசா 49:13வெளி 5:13ஏசா 42:12ஏசா 12:4-6நெகே 9:5சங் 107:22வெளி 4:8-11
அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள்.
இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை! சங் 18:44சங் 65:5சங் 81:15சங் 47:2ஏசா 2:19எரே 10:10சங் 22:28-29சங் 78:35-36
உமது வல்லமை பெரிதானது;
அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.
பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்; சங் 22:27சங் 117:1சங் 96:1-2மல்கி 1:11வெளி 15:4தானி 7:14ஏசா 2:2-4ஏசா 42:10-12
அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள்,
அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்.”
இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்; சங் 126:1-3எண் 23:23சங் 111:2சங் 46:8சங் 66:16சங் 66:3சங் 106:22சங் 99:3
மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை.
அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்; யோசு 3:16யாத் 14:21-22யாத் 15:1-21யோசு 3:14சங் 78:13சங் 106:8-12சங் 136:13-14ஏசா 63:13-14
மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்;
வாருங்கள், அவரில் களிகூருவோம்.
அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; சங் 11:42 நாளாக 16:9மத் 28:18தானி 4:35தானி 5:20-28யோபு 9:4சங் 140:8சங் 33:13
அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன;
கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும்.
எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்; சங் 98:4எரே 33:11சங் 47:1சங் 66:2வெளி 19:1உபா 32:43வெளி 19:5-6வெளி 5:11-14
அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக.
அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்; சங் 121:3சங் 112:6சங் 94:181 சாமு 2:9சங் 37:23-241 சாமு 25:29அப் 17:28கொலோ 3:3-4
நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார்.
இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்; ஏசா 48:10சங் 17:31 பேது 1:6-7நீதி 17:3யோபு 23:10சகரி 13:9உபா 13:3உபா 8:16
வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர்.
எங்களைச் சிறைபிடித்து, புலம் 1:13எசேக் 12:13ஓசி 7:12யோபு 19:6உபா 33:11புலம் 3:2-66மத் 6:13
எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர்.
மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்; ஏசா 43:1-2ஏசா 51:23யாக் 5:11சங் 40:2-31 தெச 3:3-4அப் 14:22யோபு 36:16வெளி 7:14-17
நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம்,
ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர்.
நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்; பிரச 5:4சங் 100:4சங் 56:12சங் 116:17-19எபி 13:15சங் 116:14சங் 118:19யோனா 2:9
எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.
நான் துன்பத்திலிருந்தபோது 1 சாமு 1:11நியாயாதி 11:35-36சங் 18:62 சாமு 22:7எண் 30:2எண் 30:8ஆதி 28:20-22ஆதி 35:3
என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன்.
நான் கொழுத்த மிருகங்களையும் சங் 51:191 நாளாக 16:1-32 சாமு 6:132 சாமு 6:17-19எரே 41:5எண் 6:14
செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்;
நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன்.
இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்; சங் 34:11சங் 71:15மல்கி 3:16சங் 71:181 யோவா 1:3சங் 66:5சங் 71:20சங் 71:24
அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; சங் 34:6சங் 116:1-2சங் 116:12சங் 30:1சங் 145:1சங் 30:8சங் 34:3-4
அவருடைய துதி என் நாவில் இருந்தது.
என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால், யோவா 9:31நீதி 28:9நீதி 15:29நீதி 15:8ஏசா 1:15யாக் 4:3நீதி 21:13யோபு 27:8-9
யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்;
இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து, சங் 116:1-2எபி 5:7புலம் 3:55-56சங் 6:91 யோவா 3:20-22சங் 34:6
என் மன்றாட்டின் குரலைக் கேட்டார்.
என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், சங் 86:12-13சங் 68:35சங் 51:112 சாமு 7:14-15சங் 22:24
என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த
இறைவனுக்குத் துதி உண்டாகட்டும்.