யோபு 27

Job 27

யோபுவின் நண்பர்களுக்கு அவருடைய இறுதி வார்த்தை

யோபு மேலும் தன் பேச்சைத் தொடர்ந்து சொன்னதாவது: யோபு 29:1எண் 23:7எண் 24:15எண் 24:3நீதி 26:7சங் 78:2சங் 49:4

“எனக்கு நீதியை மறுத்து, யோபு 34:52இராஜா 4:27எண் 14:211 இராஜா 17:11 இராஜா 18:151 சாமு 14:391 சாமு 14:451 சாமு 20:21

வாழ்வைக் கசப்பாக்கின எல்லாம் வல்ல இறைவன் வாழ்வது நிச்சயம்போலவே,

எனக்குள் என் உயிரும், ஆதி 2:7யோபு 33:4ஏசா 2:22யோபு 32:8அப் 17:25

என் மூக்கில் இறைவனின் சுவாசமும் இருக்கும்வரை,

என் உதடுகள் கொடுமையானதைப் பேசாது, யோபு 13:72 கொரி 11:10யோவா 8:55யோபு 34:6யோபு 6:28

என் நாவு வஞ்சகமானவற்றைச் சொல்லாது.

நீங்கள் சொல்வது சரி என நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ளமாட்டேன்; யோபு 2:9யோபு 13:15யோபு 42:7நீதி 17:15உபா 25:1யோபு 29:14கலா 2:11யோபு 32:3

நான் சாகும்வரை என் உத்தமத்தை மறுக்கவுமாட்டேன்.

என் நேர்மையை நான் காத்துக்கொள்வேன், அதை நான் ஒருபோதும் விடமாட்டேன்; யோபு 2:31 யோவா 3:20-21அப் 24:162 கொரி 12:11நீதி 4:13சங் 18:20-23

நான் உயிரோடிருக்குமட்டும் என் மனசாட்சி என்னைக் கடிந்துகொள்ளாது.

“என் பகைவர் கொடியவர்களைப்போல் இருக்கட்டும், தானி 4:191 சாமு 25:262 சாமு 18:32

என் விரோதி அநீதியுள்ளவர்களைப்போல் இருக்கட்டும்.

இறைவனை மறுதலிக்கிறவன் வெட்டுண்டுபோய், மத் 16:26யோபு 8:13யோபு 11:20லூக் 12:20-211 தீமோ 6:9-10ஏசா 33:14-15யாக் 5:1-3யோபு 13:16

இறைவன் அவனுடைய உயிரை எடுத்துக்கொள்ளும்போது, அவனுடைய நம்பிக்கை என்ன?

அவனுக்குத் துன்பம் வரும்போது எரே 14:12ஏசா 1:15நீதி 1:28யோபு 35:12-13மீகா 3:4சங் 18:41எசேக் 8:18ஓசி 7:14

இறைவன் அவனுடைய கதறலைக் கேட்பாரோ?

எல்லாம் வல்லவரில் அவன் மகிழ்ச்சியடைவானோ? யோபு 22:26-27சங் 37:4ஆப 3:181 தெச 5:17அப் 10:2எபே 6:18லூக் 18:1மத் 13:21

எல்லா நேரங்களிலும் அவன் இறைவனைக் கூப்பிடுவானோ?

“இறைவனின் வல்லமையைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்; சங் 71:17ஏசா 8:11யோபு 4:3-4உபா 4:5யோபு 6:10அப் 20:20யோபு 32:8-10

எல்லாம் வல்லவரின் வழிகளை நான் மறைக்கமாட்டேன்.

இவற்றையெல்லாம் நீங்கள் பார்த்திருந்தும் யோபு 16:3யோபு 19:2-3யோபு 21:3பிரச 8:14பிரச 9:1-3யோபு 13:4-9யோபு 17:2யோபு 21:28-30

ஏன் இந்த வீண்பேச்சு?

“கொடியவனுக்கு இறைவனிடத்திலிருந்து கிடைக்கும் பங்கும், யோபு 20:19-292 பேது 2:9ஏசா 3:11யோபு 15:20-35பிரச 8:13யாக் 5:4-6யோபு 31:3மல்கி 3:5

தீயவன் எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து பெறும் உரிமைச்சொத்தும் இதுவே:

அவனுக்கு பிள்ளைகள் அநேகர் இருப்பார்கள், உபா 28:41யோபு 20:10லூக் 23:291 சாமு 2:52இராஜா 10:6-102இராஜா 9:7-8உபா 28:32எஸ்த 5:11

ஆனால் அவர்கள் வாளுக்கு இரையாவார்கள்;

அவனுடைய சந்ததியினருக்கு ஒருபோதும் போதியளவு உணவு கிடைக்காது.

அவனுக்கு மீதியானவர்கள் கொள்ளைநோய்க்குப் பலியாகும்போது, சங் 78:641 இராஜா 14:10-111 இராஜா 16:3-41 இராஜா 21:21-24எரே 22:18

அவர்களுடைய விதவைகள் அழமாட்டார்கள்.

அவன் வெள்ளியைப் தூசியைப்போலவும், சகரி 9:3மத் 6:191 இராஜா 10:27ஆப 2:6யாக் 5:2யோபு 22:24

உடைகளைக் களிமண் குவியலைப் போலவும் குவித்து வைத்தாலும்,

அவன் குவித்து வைத்ததை நேர்மையானவர்கள் உடுத்துவார்கள், நீதி 13:22பிரச 2:26நீதி 28:8

குற்றமற்றவர்கள் அவனுடைய வெள்ளியைப் பகிர்ந்துகொள்வார்கள்.

அவன் தன்னுடைய வீட்டை சிலந்தி பூச்சியின் கூட்டைப்போலவும், ஏசா 1:8யோபு 8:14-15ஏசா 51:8ஏசா 38:12புலம் 2:6

காவற்காரன் கட்டிய சிறுகுடிசையைப்போலவும் கட்டுகிறான்.

அவன் செல்வந்தனாக படுக்கைக்குப் போகிறான், ஆனால் தொடர்ந்து அப்படியிரான்; யோபு 24:24சங் 58:9எரே 8:2சங் 73:19-20ஆதி 49:10யோபு 14:10யோபு 14:12-15யோபு 20:7-9

அவன் தன் கண்களைத் திறக்கும்போது எல்லாமே போய்விடுகின்றன.

பயங்கரங்கள் வெள்ளம்போல் அவனை மேற்கொள்கின்றன; யோபு 15:21யோபு 18:112இராஜா 19:35யாத் 12:29யோபு 20:23யோபு 21:18தானி 5:30யோபு 20:8

இரவில் பெரும்புயல் அவனை அள்ளிக்கொண்டுபோகிறது.

கொண்டல் காற்று அவனை அடித்து செல்கிறது, அவன் காணாமல் போகிறான்; சங் 11:6சங் 83:15யோபு 21:18யோபு 7:10சங் 58:9யாத் 9:23-25ஓசி 13:15எரே 18:17

அவன் இருப்பிடத்திலிருந்து அவனை வாரிக்கொண்டுபோகிறது.

அது இரக்கமின்றி அவனை விரட்டும்; 2 பேது 2:4-5எசேக் 24:14எசேக் 5:11யோபு 11:20ஆமோ 2:14ஆமோ 9:1-3உபா 32:23யாத் 14:25-28

இறைவனுடைய கைக்குத் தப்பியோட பார்ப்பார்கள்.

மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி ஏளனம் செய்து, புலம் 2:151 இராஜா 9:8எரே 19:8நீதி 11:10செப்ப 2:15எஸ்த 9:22-25யோபு 18:18மீகா 6:16

அவனை அவனுடைய இடத்தைவிட்டு விரட்டிவிடுவார்கள்.”