பகுதி iii
ஆசாபின் சங்கீதம்.
நிச்சயமாகவே, இருதயத்தில் சுத்தமுள்ள இஸ்ரயேலருக்கு, மத் 5:8சங் 51:10லூக் 12:32சங் 84:11யாக் 4:8யோவா 1:47ரோம 2:28-291 நாளாக 25:1-6
இறைவன் நல்லவராயிருக்கிறார்.
ஆனால் நானோ, என் கால்கள் சறுக்கி, சங் 94:181 சாமு 2:9சங் 116:8சங் 38:16சங் 17:5யோசு 24:15சங் 17:15சங் 5:7
என் காலடிகள் இடறி விழப்போனேன்.
பெருமையுள்ளவர்களைக் குறித்துப் பொறாமை கொண்டேன்; யோபு 21:7எரே 12:1நீதி 23:17சங் 37:7சங் 37:1நீதி 24:1யாக் 4:5நீதி 3:31
கொடியவர்களின் வளமான வாழ்வை நான் கண்டேன்.
அவர்களுக்கு சாகும்வரை வேதனைகளே இல்லை; யோபு 21:23-24பிரச 2:16லூக் 16:22சங் 17:14பிரச 7:15யோபு 24:20சங் 17:10
அவர்களுடைய உடல்கள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கின்றன.
அவர்கள் சாதாரண மனிதர்களைப்போல துன்பப்படுவதில்லை; யோபு 21:9சங் 73:12எரே 12:1-2வெளி 3:191 கொரி 11:32எபி 12:8யோபு 21:6நீதி 3:11-12
மனிதருக்கு வரும் நோய்களினாலும் அவர்கள் பீடிக்கப்படுவதில்லை.
ஆதலால் பெருமை அவர்களுடைய கழுத்துச் சங்கிலியாய் இருக்கிறது; சங் 109:181 பேது 5:5தானி 4:30நியாயாதி 8:26நீதி 1:9நீதி 3:31உபா 32:15உபா 8:13-14
அவர்கள் வன்முறையை உடையாகக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய இருதயம் கொழுப்பினால் புடைத்து அநியாயம் வெளியே வருகிறது; எரே 5:28யோபு 15:27சங் 17:10சங் 73:121 சாமு 25:21 சாமு 25:36எசேக் 16:49ஏசா 3:9
அவர்கள் மனதிலிருந்து எழும் தீமையான எண்ணங்களுக்கு அளவேயில்லை.
அவர்கள் ஏளனம் செய்து, தீமையானதைப் பேசுகிறார்கள்; யூதா 1:16சங் 17:10சங் 10:22 பேது 2:102 பேது 2:18எரே 7:9-11நீதி 30:13-14சங் 10:10-11
அகங்காரத்தில் ஒடுக்கப்போவதாகப் பயமுறுத்துகிறார்கள்.
அவர்களுடைய வாயின் வார்த்தைகள் வானமட்டும் எட்டுகிறது; வெளி 13:6யாத் 5:2யாக் 3:62 நாளாக 32:15தானி 3:15தானி 7:25லூக் 18:4யோபு 21:14
அவர்களுடைய நாவின் சொற்கள் பூமியெங்கும் சுற்றித்திரிகிறது.
ஆகையால் மக்களும் அவர்களிடமாய்த் திரும்பி, சங் 75:8
அவர்களின் சொற்களைத் தண்ணீரைப்போல் குடிக்கிறார்கள்.
அவர்கள், “இறைவன் எப்படி அறிவார்? ஓசி 7:2செப்ப 1:12எசேக் 8:12யோபு 22:13-14சங் 73:9சங் 94:7சங் 10:11சங் 139:1-6
மகா உன்னதமானவருக்கு இவற்றைப் பற்றிய அறிவு உண்டோ?” என்கிறார்கள்.
கொடியவர்கள் எப்பொழுதும் சிந்தனை அற்றவர்களாகவும், சங் 52:7ஓசி 12:7-8எரே 5:28யாக் 5:1-3எரே 12:1-2எரே 5:17லூக் 16:19சங் 17:14
செல்வத்தினால் பெருகுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
உண்மையில், நான் வீணாகவே என் இருதயத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டேன்; யோபு 21:15சங் 26:6யோபு 34:9யோபு 35:3எபி 10:19-22யாக் 4:8மல்கி 3:14சங் 51:10
வீணாகவே குற்றமற்றவனாய் என் கைகளைக் கழுவிக் கொண்டேன்.
நாளெல்லாம் நான் பாதிக்கப்பட்டேன்; எபி 12:5சங் 94:121 பேது 1:6ஆமோ 3:2எரே 15:18யோபு 7:3-4சங் 34:19யோபு 10:17
காலைதோறும் நான் கண்டிக்கப்பட்டேன்.
இவ்வாறு பேசியிருந்தால், மல்கி 2:8மத் 18:6-7சங் 24:6ரோம 14:151 பேது 2:9சங் 14:5சங் 22:30ரோம 14:21
நான் உமது பிள்ளைகளுக்கு துரோகம் செய்திருப்பேன்.
இவற்றையெல்லாம் விளங்கிக்கொள்ள நான் முயன்றபோது, பிரச 8:17யோவா 16:18-19லூக் 18:32-34நீதி 30:2-3சங் 36:6சங் 39:6சங் 77:19சங் 97:2
அது எனக்குக் கடினமாய் இருந்தது.
ஆனால் நான் இறைவனின் பரிசுத்த இடத்திற்குள் நுழைந்த பின்புதான், லூக் 12:20சங் 77:13பிரச 8:12-13சங் 27:4சங் 119:24சங் 37:37-38சங் 63:2எரே 5:31
நான் அவர்களுடைய இறுதிமுடிவை அறிந்துகொண்டேன்.
நிச்சயமாகவே, நீர் அவர்களைச் சறுக்கலான நிலத்தில் நிறுத்துகிறீர்; எரே 23:12சங் 35:6உபா 32:352 தெச 1:9சங் 55:23சங் 94:23சங் 37:20சங் 37:35-38
நீர் அவர்களை சேதமடைந்து போகவிடுகிறீர்.
அவர்கள் சீக்கிரமாய் அழிந்துபோகிறார்கள்; ஏசா 47:11தானி 5:6நீதி 28:11 தெச 5:3ஏசா 30:13யோபு 15:21யோபு 20:5வெளி 18:10
திடீரென வரும் பயங்கரங்களால் முழுமையாக அழிந்துபோகிறார்கள்!
விழித்தெழுகிறவனின் கனவு கலைவதுபோல், யோபு 20:8சங் 78:65ஏசா 29:7-8சங் 39:6சங் 7:6சங் 90:5
யெகோவாவே, நீர் எழும்பும்போது,
அவர்களை கற்பனைக் காட்சியென்று இகழ்வீர்.
என் இருதயம் கசந்தது, சங் 37:7புலம் 3:13சங் 73:3யோபு 16:13சங் 37:1
என் உள்ளம் குத்தப்பட்டது.
நான் ஒன்றும் அறியாத மூடனானேன்; பிரச 3:18சங் 92:6ஏசா 1:3சங் 49:10நீதி 30:2சங் 32:9யோபு 18:3சங் 69:5
நான் உமக்கு முன்பாக விலங்கைப்போல நடந்துகொண்டேன்.
ஆனாலும், நான் எப்பொழுதும் உம்முடனே இருக்கிறேன்; ஏசா 41:13சங் 63:8மத் 28:20எபி 13:5சங் 16:8சங் 23:4மத் 1:23ஏசா 41:10
நீர் என் வலதுகையை பிடித்துக்கொள்கிறீர்.
நீர் உமது ஆலோசனையினால் எனக்கு வழிகாட்டுகிறீர்; சங் 32:8ஏசா 58:11நீதி 3:5-6ஏசா 48:17சங் 48:14சங் 25:9ஏசா 30:21யாக் 1:5
பின்பு நீர் என்னை உமது மகிமைக்குள் எடுத்துக்கொள்வீர்.
பரலோகத்தில் உம்மையன்றி எனக்கு யார் உண்டு? பிலி 3:8சங் 16:2சங் 63:3சங் 16:5ஏசா 26:8-9மத் 10:37சங் 104:34சங் 16:11
பூமியிலும் உம்மைத்தவிர எனக்கு வேறொரு விருப்பமில்லை.
என் உடலும் உள்ளமும் சோர்ந்துபோயிற்று; 2 கொரி 12:9-10ஏசா 40:29-31சங் 138:3சங் 18:22 கொரி 4:8-102 கொரி 4:16-18சங் 16:5-6சங் 84:2
ஆனால் இறைவனே என்றென்றைக்கும் நீரே என் இருதயத்தின் பெலனும்
எனக்குரியவருமாய் இருக்கிறார்.
உம்மைவிட்டுத் தூரமாகிறவர்கள் அழிவார்கள்; யாக் 4:4சங் 119:155யாத் 34:15எண் 15:39சங் 106:39வெளி 17:1-5ஏசா 29:13யோபு 21:14-15
உமக்கு உண்மையற்றவர்களை நீர் தண்டிப்பீர்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை, இறைவனுக்கு அருகில் இருப்பதே எனக்கு நலம்; யாக் 4:8சங் 40:5எபி 10:19-22புலம் 3:25-26சங் 65:41 பேது 3:18சங் 118:17சங் 71:24
ஆண்டவராகிய யெகோவாவை நான் என் புகலிடமாக்கிக் கொண்டேன்;
உமது செயல்களையெல்லாம் நான் விவரிப்பேன்.