தாவீதின் சங்கீதம். யூதாவின் வனாந்திரத்திலிருக்கும்போது பாடியது.
இறைவனே, நீரே என் இறைவன், சங் 143:6சங் 84:2சங் 42:1-2மத் 6:33சங் 91:2வெளி 7:16-17ஏசா 41:18யாத் 15:2
நான் ஆர்வத்துடன் உம்மைத் தேடுகிறேன்;
தண்ணீரில்லாமல் வறண்டதும்,
காய்ந்ததுமான நிலத்திலே
என் ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது,
என் உடலோ உமக்காக ஏங்குகிறது.
பரிசுத்த இடத்தில் நான் உம்மைக் கண்டேன்; சங் 27:4சங் 105:4சங் 84:2-11சங் 96:61 நாளாக 16:112 கொரி 4:4-61 சாமு 4:21-22யாத் 33:18-19
உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டறிந்தேன்.
உமது உடன்படிக்கையின் அன்பு உயிரைப் பார்க்கிலும் சிறந்தது; பிலி 1:23சங் 51:15சங் 69:16எபி 13:15சங் 30:51 கொரி 6:20ரோம 12:1சங் 30:12
ஆகையால் என் உதடுகள் உம்மை மகிமைப்படுத்தும்.
நான் உயிருடன் இருக்கும்வரை உம்மைத் துதிப்பேன்; சங் 104:33சங் 134:2சங் 28:21 இராஜா 8:22-66சங் 145:1-3ஆப 3:10சங் 146:1-2
ஜெபத்தில் உமது பெயரைச் சொல்லி என் கைகளை உயர்த்துவேன்.
அறுசுவை உணவுகளால் திருப்தியடைவது போல, என் ஆத்துமா திருப்தியடையும்; சங் 36:7-9ஏசா 25:6சங் 17:15சங் 43:4எஸ்றா 3:11-13சங் 118:14-15சங் 135:3சங் 65:4
என் வாய் களிப்புள்ள உதடுகளினால் பாடி, உம்மைத் துதிக்கும்.
என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்; சங் 42:8சங் 119:147-148சங் 149:5சங் 119:55புலம் 2:19சங் 139:17-18சங் 77:4-6உன்னத 5:2
இராக்காலங்களில் உம்மை தியானம் செய்கிறேன்.
நீரே என் உதவியாயிருப்பதால், 2 கொரி 1:10சங் 61:4சங் 27:9சங் 17:8சங் 54:3-4சங் 57:11 சாமு 17:37சங் 5:11
உமது சிறகுகளின் நிழலிலே நான் மகிழ்ச்சியுடன் பாடுவேன்.
நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்; ஏசா 41:10சங் 18:35சங் 73:23உன்னத 2:6சங் 37:24ஏசா 42:1சங் 73:25சங் 94:18
உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் சங் 55:15சங் 40:14சங் 9:171 சாமு 25:29ஏசா 14:19எண் 16:30-33சங் 86:13எசேக் 32:18-32
பூமியின் ஆழங்களில் இறங்குவார்கள்.
அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; எரே 18:21எசேக் 35:5எசேக் 39:41 சாமு 26:101 சாமு 31:1-6எசேக் 39:17-20வெளி 19:17-18உன்னத 2:15
நரிகளுக்கு இரையாவார்கள்.
ஆனால் அரசன் இறைவனில் மகிழ்வான்; உபா 6:13சங் 21:1ஏசா 45:23ஏசா 65:16ரோம 3:19எபி 6:131 சாமு 23:171 சாமு 24:20
இறைவனுடைய பெயரில் சத்தியம்பண்ணுகிற யாவரும் அவரில் மேன்மைபாராட்டுவார்கள்;
பொய்யர்களுடைய வாய்களோ மூடப்படும்.