சங்கீதங்கள் 135

Psalms 135
சங்கீதம் 135

யெகோவாவைத் துதியுங்கள். 1 சங் 96:1-4சங் 7:17சங் 111:1சங் 33:1-2சங் 106:1சங் 107:8சங் 112:1சங் 148:13

யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்;

யெகோவாவின் பணியாட்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்,

நமது இறைவனுடைய ஆலய முற்றங்களிலும், சங் 116:19சங் 92:13லூக் 2:37சங் 96:81 நாளாக 16:37-421 நாளாக 23:30நெகே 9:5

யெகோவாவினுடைய ஆலயத்திலும் ஊழியம் செய்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்.

யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்; சங் 147:1சங் 119:68சங் 106:1சங் 33:1மத் 19:17சங் 118:1சங் 145:7-8சங் 100:5

அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள், அது இனிமையானது.

ஏனெனில் யெகோவா யாக்கோபைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்; 1 பேது 2:9உபா 10:15உபா 7:6-7மல்கி 3:171 சாமு 12:22உபா 32:9ஏசா 41:8ஏசா 43:20-21

இஸ்ரயேலரைத் தமது அருமைச் சொத்தாய் இருக்கும்படி தெரிந்துகொண்டார்.

யெகோவா பெரியவர் என்றும், சங் 95:3உபா 10:17சங் 48:1சங் 97:9தானி 6:26-27சங் 86:8-10தானி 3:29ஏசா 40:22

நமது யெகோவா எல்லாத் தெய்வங்களைப் பார்க்கிலும்,

மேலானவர் என்பதையும் நான் அறிவேன்.

வானத்திலும் பூமியிலும், தானி 4:35சங் 115:3மத் 28:18ஏசா 46:10மத் 8:26-27சங் 33:9சங் 33:11ஆமோ 4:13

கடல்களிலும், அவைகளின் எல்லா ஆழங்களிலும்

யெகோவா தமக்கு விருப்பமான எதையும் செய்கிறார்.

அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார்; எரே 10:13எரே 51:16யோபு 28:25-26சகரி 10:1யோவா 3:8சங் 148:81 இராஜா 18:11 இராஜா 18:41-45

மழையுடன் மின்னலையும் அவர் அனுப்புகிறார்,

காற்றை தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து வெளியே புறப்படச்செய்கிறார்.

அவர் எகிப்தின் முதற்பேறுகளை அழித்தார், சங் 78:51யாத் 12:12சங் 105:36யாத் 13:15சங் 136:10யாத் 12:29-30

மனிதரின் முதற்பேறுகளையும் மிருகங்களின் தலையீற்றுகளையும் அழித்தார்.

எகிப்தே, பார்வோனுக்கும் அவனுடைய எல்லா பணியாட்களுக்கும் விரோதமாக சங் 136:15உபா 6:22அப் 7:36உபா 4:34யாத் 7:1-15ஏசா 51:9-10எரே 32:20-21நெகே 9:10

அவர் தம்முடைய அடையாளங்களையும் அதிசயங்களையும் உன் மத்தியில் அனுப்பினாரே.

அவர் அநேக நாடுகளைத் தாக்கினார், சங் 136:17-22எண் 21:24சங் 44:2-3

வலிமைமிக்க அரசர்களைக் கொன்றார்;

எமோரியரின் அரசன் சீகோனையும், யோசு 12:7-24உபா 29:7நெகே 9:22உபா 2:30யோசு 10:1-12எண் 21:21-35

பாசானின் அரசன் ஓகையும்,

கானானின் அரசர்கள் எல்லோரையும் அழித்தார்,

அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாக, சங் 78:55சங் 136:21-22உபா 29:8யோசு 11:23யோசு 12:7எண் 33:54சங் 44:1-3

தமது மக்களாகிய இஸ்ரயேலருக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்.

யெகோவாவே, உமது பெயர் என்றென்றைக்கும் நிலைக்கிறது; சங் 102:12யாத் 3:15சங் 72:17சங் 8:1சங் 8:9யாத் 34:5-7ஓசி 12:5மத் 6:9

யெகோவாவே, உமது புகழ் தலைமுறை தலைமுறையாக நிலைக்கும்.

யெகோவா தம் மக்களின் நியாயத்தை விசாரித்து, உபா 32:36யோனா 4:2சங் 50:4சங் 7:81 நாளாக 21:15ஆமோ 7:3ஆமோ 7:6ஓசி 11:8-9

தம் அடியார்கள்மேல் இரக்கங்காட்டுவார்.

பிறநாடுகளின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும், சங் 115:4-8அப் 17:29ஆப 2:18-19ஏசா 37:19எரே 10:3-11ஏசா 44:9-20ஏசா 46:6-7உபா 4:28

மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது.

அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; மத் 13:14-16ஏசா 6:10

அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது,

அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.

அவைகளைச் செய்கிறவர்களும், சங் 115:82 கொரி 4:4ஏசா 44:18-20எரே 10:8சங் 97:7

அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; சங் 115:9-11சங் 118:1-4சங் 145:10சங் 147:19-20சங் 148:14வெளி 19:5

ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்;

லேவி குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்;

அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவைத் துதியுங்கள்.

எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு, சங் 134:3சங் 132:13-142 நாளாக 6:6ஏசா 12:6சங் 128:5சங் 76:2சங் 48:1சங் 48:9

சீயோனிலிருந்து துதி உண்டாகட்டும்.

யெகோவாவைத் துதியுங்கள்.