சங்கீதங்கள் 115

Psalms 115
சங்கீதம் 11 5

எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, சங் 79:9-10ஏசா 48:11சங் 96:8எசேக் 20:14எசேக் 36:32எபே 1:6எசேக் 36:22தானி 9:19

உமது அன்பின் நிமித்தமும்,

உமது சத்தியத்தின் நிமித்தமும் உமது பெயருக்கே மகிமை உண்டாகட்டும்.

பிற நாடுகளோ, “அவர்களுடைய இறைவன் எங்கே?” சங் 42:3சங் 79:10சங் 42:10யாத் 32:12யோவே 2:17உபா 32:26-27எண் 14:15-162இராஜா 19:10-19

என்று ஏன் கேட்கிறார்கள்.

நம்முடைய இறைவன் பரலோகத்தில் இருக்கிறார்; சங் 135:6தானி 4:35ஏசா 46:10எபே 1:11சங் 103:19ரோம 9:19சங் 2:4சங் 123:1

அவர் தமக்கு விருப்பமானதையே செய்கிறார்.

ஆனால் பிற மக்களின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும், உபா 4:28ஏசா 46:6-7எரே 10:3-5ஏசா 40:19-20ஆப 2:18-20ஏசா 44:10ஏசா 46:1-2அப் 19:26

மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது.

அவைகளுக்கு வாய்கள் உண்டு, ஆனாலும் அவைகளால் பேசமுடியாது; எரே 10:5

கண்கள் உண்டு, அவைகளால் பார்க்க முடியாது.

அவைகளுக்குக் காதுகள் உண்டு, ஆனால் அவைகளால் கேட்கமுடியாது;

மூக்கிருந்தும், அவைகளால் முகரமுடியாது.

அவைகளுக்குக் கைகளிருந்தும் தொட்டுப் பார்க்க முடியாது;

கால்கள் உண்டு, ஆனால் அவைகளால் நடக்க முடியாது;

தங்கள் தொண்டைகளால் சத்தமிடக்கூட அவைகளால் முடியாது.

அவைகளைச் செய்கிறவர்களும், சங் 135:18ஆப 2:18-19எரே 10:8யோனா 2:8ஏசா 44:9-20

அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்; சங் 62:8சங் 37:3நீதி 30:5சங் 118:2-4சங் 135:19-20உபா 33:29சங் 146:5-6சங் 33:20-21

அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.

ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்; சங் 118:3யாத் 28:1எண் 16:40எண் 16:5எண் 18:7

அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.

அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்; நீதி 14:26அப் 10:35நீதி 30:5சங் 103:11சங் 147:11வெளி 19:5சங் 22:23சங் 33:18

அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.

யெகோவா நம்மை நினைவில் வைத்திருக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்; எபே 1:3சங் 136:23ஏசா 44:21ஆதி 12:2-3ஏசா 49:14-16சங் 25:7சங் 67:7யாத் 2:24-25

அவர் இஸ்ரயேலின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்;

அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.

யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற சங் 112:1லூக் 1:50சங் 128:1சங் 128:4-5சங் 29:11வெளி 19:5மல்கி 4:2வெளி 11:18

பெரியோரையும், சிறியோரையும் அவர் ஆசீர்வதிப்பார்.

யெகோவா உங்களைப் பெருகப்பண்ணுவாராக, உபா 1:11அப் 2:39அப் 3:25எரே 33:22ஆதி 17:72 சாமு 24:3ஆதி 13:16எரே 30:19

உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பெருகப்பண்ணுவாராக.

வானத்தையும் பூமியையும் படைத்தவராகிய சங் 134:3வெளி 14:7ஆதி 1:1ஆதி 14:19சங் 121:2சங் 96:51 பேது 3:9அப் 14:15

யெகோவாவினால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக.

மிக உயர்ந்த வானங்கள் யெகோவாவினுடையவை; சங் 8:6சங் 89:11ஆதி 1:28-30எரே 27:5-6ஆதி 9:1-3உபா 32:8ஏசா 66:1சங் 144:5

பூமியையோ அவர் மனிதனுக்குக் கொடுத்திருக்கிறார்.

இறந்தவர்கள் யெகோவாவைத் துதிப்பதில்லை, சங் 6:5ஏசா 38:18-19சங் 88:10-12சங் 30:9சங் 31:171 சாமு 2:9

மரணத்தின் மவுனத்தில் இறங்குகிறவர்களும் துதியார்கள்.

இன்றுமுதல் என்றைக்கும் யெகோவாவைத் துதிப்போம். சங் 113:2தானி 2:20சங் 145:21வெளி 5:13சங் 145:2சங் 118:17-19

யெகோவாவுக்குத் துதி.

அல்லேலூயா.