சங்கீதங்கள் 113

Psalms 113
சங்கீதம் 113

அல்லேலூயா, எபே 5:19-20சங் 135:1-3சங் 135:20சங் 103:20-21சங் 112:1சங் 134:1சங் 145:10சங் 33:1-2

யெகோவாவின் பணியாட்களே, துதியுங்கள்;

யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்.

யெகோவாவின் பெயர் இப்பொழுதும், தானி 2:201 நாளாக 16:36சங் 41:13வெளி 5:131 நாளாக 29:10-13எபே 3:21சங் 106:48

எப்பொழுதும் துதிக்கப்படட்டும்.

சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை மல்கி 1:11சங் 18:3ஏசா 59:19சங் 86:9ஏசா 49:13சங் 48:10சங் 72:11வெளி 11:15

யெகோவாவினுடைய பெயர் துதிக்கப்படட்டும்.

யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்; சங் 8:1சங் 99:2சங் 97:9ஏசா 40:17சங் 148:13ஏசா 40:15ஏசா 40:22ஏசா 66:1

அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாக இருக்கிறது.

நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு? ஏசா 40:25எரே 10:6சங் 89:6உபா 33:26யாத் 15:11சங் 89:8ஏசா 40:18சங் 103:19

உன்னதத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவரைப்போல் யார் உண்டு?

வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி ஏசா 57:15சங் 11:4சங் 138:6ஏசா 6:2ஏசா 66:2யோபு 15:15யோபு 4:18

தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு?

அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார், 1 சாமு 2:7-8லூக் 1:52-53சங் 107:41யோபு 5:112 சாமு 7:8-9எசேக் 17:24தானி 12:2-3சங் 75:6-7

எளியவர்களைச் சாம்பற் குவியலில் இருந்து தூக்கிவிடுகிறார்.

அவர் தமது மக்களைப் பிரபுக்களோடு அமரப்பண்ணுகிறார். யோபு 36:7பிலி 2:8-11ஆதி 41:41சங் 45:16சங் 68:13வெளி 5:9-10

அவர் பிள்ளைப்பேறற்ற பெண்ணை பிள்ளைகளைப் பெறும் மகிழ்ச்சியுள்ள தாயாக்கி, சங் 68:61 சாமு 2:5ஆதி 21:5-7ஆதி 30:22-23ஏசா 54:1லூக் 1:13-15கலா 4:27ஆதி 25:21

அவளுடைய வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார்.

அல்லேலூயா.