யெகோவா ஆட்சி செய்கிறார், சங் 97:1யாத் 25:22சங் 80:1சங் 93:1சங் 97:4வெளி 20:11ஏசா 19:14ஏசா 24:19-20
நாடுகள் நடுங்கட்டும்;
அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்;
பூமி அதிரட்டும்.
சீயோனிலே யெகோவா பெரியவர்; சங் 97:9ஏசா 14:32ஏசா 12:6யாக் 4:6-7சங் 113:4சங் 48:1-3சங் 50:2சங் 66:7
அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்; ஏசா 6:3உபா 28:58சங் 111:9வெளி 15:3-4உபா 7:21யோவா 17:11நெகே 1:5நெகே 4:14
அவர் பரிசுத்தமானவர்.
அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்; சங் 11:7எரே 23:5யோபு 36:5-7சங் 45:6-7உபா 32:3-4ஏசா 11:3-5வெளி 19:162 சாமு 23:3-4
நீர் நியாயத்தை நிலைநாட்டியிருக்கிறீர்;
நீர் யாக்கோபில்
நீதியையும் நேர்மையானதையும் செய்திருக்கிறீர்.
நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி, சங் 132:7ஏசா 66:1யாத் 15:2சங் 108:5சங் 34:3ஏசா 12:4ஏசா 25:1சங் 99:3
அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்;
அவர் பரிசுத்தமானவர்.
அவருடைய ஆசாரியருள் மோசேயும் ஆரோனும் இருந்தார்கள்; எரே 15:1யாத் 15:25யாத் 24:6-81 சாமு 12:18-241 சாமு 7:9-12யாத் 14:15யாத் 29:11-37யாத் 32:11-14
அவருடைய பெயரைச் சொல்லி வழிபடுகிறவர்களில் சாமுயேலும் இருந்தான்;
அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;
அவர் அவர்களுக்குப் பதிலளித்தார்.
அவர் மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; யாத் 33:9எண் 12:5உபா 4:51 யோவா 3:21-22யாத் 19:9எபி 3:21 சாமு 12:3-5உபா 33:9
அவர் அவர்களுக்குக் கொடுத்த
அவருடைய நியமங்களையும் விதிமுறைகளையும் கைக்கொண்டார்கள்.
எங்கள் இறைவனாகிய யெகோவாவே, எண் 20:12சங் 89:33எரே 46:28பிரச 7:29உபா 9:19-20எண் 14:20-34எண் 20:24உபா 3:26
நீர் அவர்களுடைய வேண்டுதலுக்குப் பதிலளித்தீர்;
இஸ்ரயேலருடைய தீயசெயல்களுக்காக நீர் அவர்களைத் தண்டித்த போதிலும்,
நீர் அவர்களுக்கு மன்னிக்கிற இறைவனாகவே இருந்தீர்.
நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி லூக் 1:49ஏசா 57:151 பேது 1:15-16ஏசா 5:16வெளி 4:8ஏசா 6:3சங் 2:6சங் 99:5
அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்;
ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர்.