எரேமியா 15

Jeremiah 15

அதன்பின் யெகோவா என்னிடம், “மோசேயும் சாமுயேலும் எனக்குமுன் நின்று மன்றாடினாலுங்கூட, இந்த மக்களுக்கு இரங்கமாட்டேன். எனக்கு முன்னின்று அவர்களை அனுப்பிவிடு; அவர்கள் போகட்டும். எசேக் 14:14எசேக் 14:20-21எரே 14:11எரே 11:14சங் 106:23எரே 7:15-16யாத் 32:11-14சங் 99:6 ‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று அவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: எரே 43:11சகரி 11:9எசேக் 5:2வெளி 13:10வெளி 6:3-8எசேக் 5:12ஏசா 24:18எரே 14:12

“ ‘மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள் மரணத்துக்கும்,

வாளுக்குக் குறிக்கப்பட்டவர்கள் வாளுக்கும்,

பஞ்சத்திற்குக் குறிக்கப்பட்டவர்கள் பஞ்சத்திற்கும்,

சிறையிருப்புக்குக் குறிக்கப்பட்டவர்கள் சிறையிருப்புக்கும் போவார்கள்.’

“நான் அவர்களுக்கு எதிராக நான்குவிதமான அழிக்கிறவர்களை அனுப்புவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களைக் கொல்வதற்கு வாளையும், இழுத்துக்கொண்டு போவதற்கு நாய்களையும், அவர்களைத் தின்று அழிப்பதற்கு ஆகாயத்துப் பறவைகளையும், பூமியிலுள்ள மிருகங்களையும் அனுப்புவேன். உபா 28:26லேவி 26:16லேவி 26:22எசேக் 14:21லேவி 26:25வெளி 6:81 இராஜா 21:23-24ஏசா 18:6 யூதாவின் அரசன் எசேக்கியாவின் மகன் மனாசே, எருசலேமில் செய்தவற்றிற்காக நான் அவர்களை உலகின் எல்லா அரசுகளுக்கும் அருவருப்பாக்குவேன். எரே 24:92இராஜா 21:11-132இராஜா 21:16-172இராஜா 23:26-272இராஜா 24:3-4உபா 28:25எசேக் 23:46எரே 29:18

“எருசலேமே! யார் உன்மேல் அனுதாபப்படுவார்கள்? ஏசா 51:19நாகூ 3:7எரே 21:7சங் 69:201 சாமு 17:221 சாமு 25:5யாத் 18:7எரே 13:14

யார் உனக்காக துக்கிப்பார்கள்?

நீ எப்படியிருக்கிறாய் என்று கேட்க யார் வருவார்கள்?

நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்” எரே 7:24செப்ப 1:4ஓசி 11:7ஏசா 1:4சகரி 7:11எசேக் 25:7ஓசி 13:14எரே 1:16

என்று யெகோவா அறிவிக்கிறார்.

“நீ தொடர்ந்து பின்வாங்கிக்கொண்டே இருக்கிறாய்.

ஆகையால் நான் உனக்கெதிராய் என் கையை நீட்டி, உன்னை அழிப்பேன்.

என்னால் இனிமேலும் இரக்கங்காட்ட முடியாது.

நாட்டில் பட்டணத்து வாசல்களில் அவர்களை தூற்றுக் கூடையினால் தூற்றுவேன். எரே 51:2மத் 3:12ஏசா 41:16ஏசா 9:13எரே 5:3எரே 18:21எரே 8:4-5சங் 1:4

அவர்கள் தங்கள் வழிகளைவிட்டு

மனந்திரும்பாதபடியினால் என் மக்களை தவிக்கச்செய்து,

அவர்கள்மேல் அழிவைக் கொண்டுவருவேன்.

அவர்களின் விதவைகளை ஏசா 3:25எரே 4:16எரே 5:6எரே 6:4-5லூக் 21:35

கடற்கரை மணலைப் பார்க்கிலும் எண்ணற்றவர்களாக்குவேன்.

நண்பகலில் அவர்களுடைய வாலிபரின் தாய்மாருக்கு

எதிராக அழிக்கிறவனைக் கொண்டுவருவேன்.

திடீரென அவர்கள்மீது கலகத்தையும்,

பயங்கரத்தையும் கொண்டுவருவேன்.

ஏழு பிள்ளைகளின் தாய் 1 சாமு 2:5ஏசா 47:9ஆமோ 8:9-10புலம் 1:1எசேக் 5:12எரே 15:2-3எரே 21:7எரே 44:27

மூச்சடைத்து செத்துப்போவாள்.

இன்னும் பகல் வேளையாயிருக்கும்போதே அவளுடைய சூரியன் அஸ்தமிக்கும்.

அவள் அவமானத்துக்குள்ளாகி தாழ்த்தப்பட்டுப் போவாள்.

அவர்களில் தப்பியிருப்பவர்களை

அவர்களுடைய பகைவருக்கு முன்பாக வாளுக்கு இரையாக்குவேன்”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

அப்பொழுது நான், “என் தாயே! நீ என்னைப் பெற்றெடுத்தாயே; லூக் 6:22அப் 16:20-22அப் 17:6-8எசேக் 3:7-9எரே 1:18-19எரே 15:20யோபு 3:1-26லூக் 2:34

முழு நாடுமே எதிர்த்து வாதாடும் மனிதனாகிய என்னைப் பெற்றாயே!

நான் யாரிடத்திலும் கடன் வாங்கவும் இல்லை, யாருக்கும் கடன் கொடுக்கவும் இல்லை.

அப்படியிருந்தும் ஒவ்வொருவரும் என்னைச் சபிக்கிறார்கள்.”

அதற்கு யெகோவா சொன்னதாவது, நீதி 16:7எரே 29:11-14சங் 106:46சங் 37:3-11பிரச 8:12எரே 37:3எரே 21:2எரே 40:2-6

“நான் உன்னை நிச்சயமாக ஒரு நல்ல நோக்கத்திற்காக விடுவிப்பேன்;

பேராபத்திலும், பெருந்துன்ப காலத்திலும் நிச்சயமாக உன் பகைவர்கள்

உன்னிடத்தில் கெஞ்சி மன்றாடும்படி செய்வேன்.

“ஒரு மனிதனால் வடக்கிலிருந்து வரும் இரும்பையாவது, ஆப 1:5-10ஏசா 45:9எரே 1:18-19எரே 21:4-5எரே 28:14யோபு 40:9

வெண்கலத்தையாவது முறிக்க முடியுமோ?

“நாடு முழுவதிலும் எரே 17:3சங் 44:12ஏசா 52:3எரே 20:5ஏசா 52:5எரே 15:8

அவர்கள் செய்துள்ள பாவங்களுக்காக,

அவர்களுடைய செல்வத்தையும், பொக்கிஷங்களையும்

விலையின்றி கொள்ளையாகக் கொடுப்பேன்.

அவர்கள் அறியாத நாட்டில் அவர்களுடைய பகைவர்களுக்கு உபா 32:22எரே 16:13உபா 28:36எரே 17:4சங் 21:9உபா 28:64ஆமோ 5:27உபா 28:25

அவர்களை அடிமையாக்குவேன்.

என் கோபத்தினால் உண்டாகிற நெருப்பு

அவர்களுக்கெதிராய் எரியும்” என்றார்.

யெகோவாவே! நீர் என்னை அறிந்திருக்கிறீர். எரே 12:3சங் 69:7-9லூக் 21:17எரே 17:16எரே 20:12நெகே 13:221 பேது 4:14-16எரே 20:8

என்னை நினைவுகூர்ந்து என்னை ஆதரியும்.

என்னைத் துன்பப்படுத்தியவர்களை பழிவாங்கும்.

நீர் நீடிய பொறுமையுடையவர். நீர் என்னை எடுத்துப்போடாதேயும்.

உமக்காக நான் எவ்வளவு நிந்தையைச் சகித்தேன் என்பதையும் நினைத்துப் பாரும்.

உமது வார்த்தைகள் எனக்கு வந்தபோது, நான் அவைகளை உட்கொண்டேன். வெளி 10:9-10எசேக் 3:1-3சங் 119:101-103யோபு 23:12சங் 19:10சங் 119:111சங் 119:97சங் 119:72

சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே! உமது பெயரை நான் தரித்திருக்கிறபடியால்,

அவ்வார்த்தைகள் என் சந்தோஷமும்,

என் இருதயத்தின் களிப்புமாயிருந்தன.

நான் ஒருபோதும் பரியாசக்காரருடைய புலம் 3:28சங் 1:1எசேக் 3:24-25சங் 26:4-52 கொரி 6:17எரே 13:17எரே 6:11சங் 102:7

கூட்டத்தில் சேர்ந்து மகிழ்ந்ததில்லை.

உமது கரம் என்மேல் இருந்தபடியால், நான் தனிமையாய் இருந்தேன்.

நீர் என்னை கோபத்தினால் நிரப்பினீர்.

ஏன் என்னுடைய வேதனை முடிவடையாமல் இருக்கிறது. எரே 30:15யோபு 34:6மீகா 1:9எரே 1:18-19எரே 14:19எரே 14:3எரே 20:7எரே 30:12

ஏன் எனது காயம் கடுமையாயும், ஆறாமலும் இருக்கிறது?

நீர் எனக்கு ஒரு ஏமாற்றும் நீரோடையைப் போலவும்,

ஊற்றெடுக்காத ஓடையைப் போலவும் இருப்பீரோ? என்றேன்.

அதற்கு யெகோவா: சகரி 3:7லூக் 21:15லேவி 10:10எசேக் 44:23எசேக் 22:26யூதா 1:24கலா 1:10எபி 5:14

“நீ மனந்திரும்பினால், நீ எனக்குப் பணிசெய்யும்படி

நான் உன்னை முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவருவேன்.

நீ பயனற்ற வார்த்தைகளை விட்டு,

பயனுள்ள வார்த்தைகளைப் பேசுவாயானால்,

மீண்டும் என்னுடைய பேச்சாளனாய் இருப்பாய்,

இந்த மக்கள் உன் பக்கமாகத் திரும்பட்டும்;

ஆனால் நீயோ அவர்கள் பக்கமாய்த் திரும்பாதே.

நான் உன்னை இந்த மக்களுக்கு ஒரு மதில் ஆக்குவேன்; எரே 1:18-19எசேக் 3:9அப் 18:9-10சங் 124:1-3சங் 46:72 தீமோ 4:16-17ஏசா 41:10ஏசா 8:9-10

அரண்செய்யப்பட்ட ஒரு வெண்கல மதிலாக்குவேன்.

அவர்கள் உனக்கெதிராகப் போரிடுவார்கள்;

ஆனாலும் அவர்கள் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்.

ஏனெனில் நான் உன்னைத் தப்புவித்து காப்பாற்றும்படி,

நான் உன்னுடனே இருக்கிறேன்,”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

“கொடியவர்களின் கையிலிருந்து உன்னைப் பாதுகாத்து, 2 கொரி 1:10ஏசா 49:24-25எரே 50:34ஏசா 54:17ஆதி 48:16ஏசா 29:20சங் 37:40சங் 27:2

கொடூரமானவர்களின் பிடியிலிருந்து உன்னை மீட்டெடுப்பேன்.”