நாம் இறைவனுடைய பிள்ளைகள் என அழைக்கப்பட பிதா எவ்வளவு பெரிதான அன்பை நம்மேல் நிறைவாய்ப் பொழிந்திருக்கிறார். உண்மையாய் நாம் அவரின் பிள்ளைகளே! உலகம் நாம் யார் என்று அறியாதிருப்பதற்கான காரணம், உலகம் இறைவனை அறியாதிருப்பதே. யோவா 1:12கலா 3:262 கொரி 6:18கலா 4:5-6யோவா 3:16யோவா 17:25சங் 36:7-91 யோவா 4:9-10 அன்பான நண்பரே, இப்பொழுது நாம் இறைவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். ஆனால் இனிமேல், நாம் எப்படிப்பட்டவர்களாய் இருப்போம் என்பது, இன்னும் தெளிவாக்கப்படவில்லை. ஆனால் கிறிஸ்து மீண்டும் வரும்போது நாம் அவரைப்போலவே இருப்போம் என்பதை அறிந்திருக்கிறோம். ஏனெனில், அவர் உண்மையாய் இருக்கின்றபடியே, நாம் அவரைக் காணப்போகிறோம். பிலி 3:21கொலோ 3:41 கொரி 13:122 கொரி 3:18சங் 17:15ரோம 8:291 கொரி 15:49வெளி 22:4 அவரில் இவ்விதமான நம்பிக்கையுடைய ஒவ்வொருவனும், கிறிஸ்து தூய்மையாய் இருக்கிறது போலவே, தன்னையும் தூய்மையாக வைத்துக்கொள்கிறான். 2 கொரி 7:11 யோவா 2:62 பேது 3:14மத் 5:48எபி 12:14எபி 7:26அப் 15:9கொலோ 1:5
பாவம் செய்கிற எவரும் மோசேயின் சட்டத்தை மீறுகிறார்கள்; ஏனெனில், மோசேயின் சட்டத்தை மீறுதலே பாவம். 1 யோவா 5:17ரோம 3:20ரோம 4:15எண் 15:311 யோவா 3:8-92 கொரி 12:21தானி 9:11யாக் 2:9-11 ஆனால், நம்முடைய பாவங்களை நீக்கும்படியே கிறிஸ்து வந்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவரிலோ, ஒரு பாவமும் இல்லை. 2 கொரி 5:21எபி 9:281 பேது 2:241 பேது 3:18எபி 9:26யோவா 1:291 யோவா 1:71 யோவா 4:9-14 ஆகவே கிறிஸ்துவில் வாழ்பவன் தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருப்பதில்லை. தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருப்பவனோ, கிறிஸ்துவைக் காணவும் இல்லை, அவரை அறியவும் இல்லை. 3 யோவா 1:111 யோவா 2:41 யோவா 3:91 யோவா 4:8யோவா 15:4-71 யோவா 5:181 யோவா 3:21 யோவா 2:28
அன்பான பிள்ளைகளே, ஒருவனும் உங்களை வழிவிலகப்பண்ணுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். நீதியானதைச் செய்கிறவன், கிறிஸ்து நீதியுள்ளவராய் இருக்கிறதுபோல, நீதியுள்ளவனாய் இருக்கிறான். 1 யோவா 2:291 பேது 1:15-16ரோம 2:131 யோவா 3:31 யோவா 2:11 யோவா 2:26அப் 10:35சங் 45:7 ஆனால் பாவம் செய்கிறவனோ, பிசாசுக்குரியவனாகவே இருக்கிறான். ஏனெனில், பிசாசு ஆரம்பத்திலிருந்தே பாவம் செய்துகொண்டே இருக்கிறான். ஆனால் பிசாசின் செய்கைகளை அழிப்பதற்காகவே இறைவனின் மகன் தோன்றினார். எபி 2:14யோவா 8:44கொலோ 2:15யோவா 12:31யோவா 16:11ரோம 16:202 பேது 2:4எபே 2:2 இறைவனால் பிறந்த எவரும், தொடர்ந்து பாவம் செய்யமாட்டான். ஏனெனில் இறைவனுடைய வித்து, அவனுள் குடிகொண்டிருக்கிறது. அவன் இறைவனால் பிறந்திருப்பதினால், தொடர்ந்து பாவம் செய்து கொண்டிருக்க முடியாது. 1 யோவா 5:181 பேது 1:23யோவா 1:131 யோவா 5:11 யோவா 2:29மத் 7:18யோவா 3:31 யோவா 5:4 இறைவனுடைய பிள்ளைகள் யார் என்றும், பிசாசின் பிள்ளைகள் யார் என்றும்: இவ்விதமாகவே நாம் அறிந்துகொள்கிறோம். நீதியைச் செய்யாத யாரும் இறைவனுக்குப் பிள்ளைகள் அல்ல; தனது சகோதரனில் அன்பு செலுத்தாத யாரும் இறைவனுடைய பிள்ளைகள் அல்ல. 1 யோவா 4:83 யோவா 1:111 யோவா 4:21யோவா 8:44லூக் 6:35மத் 13:381 யோவா 3:7-8யோவா 8:47
ஒருவரில் ஒருவர் அன்பாயிருத்தல்
நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதே ஆரம்பத்திலிருந்து நீங்கள் கேட்ட செய்தியாய் இருக்கிறது. யோவா 15:122 யோவா 1:51 யோவா 4:71 யோவா 4:211 பேது 3:8யோவா 13:34-35எபே 5:21 பேது 4:8 காயீனைப்போல் இருக்கவேண்டாம். அவன் தீயவனுக்குரியவனாயிருந்து, தன் சகோதரனைக் கொலைசெய்தான். அவன் ஏன் தன் சகோதரனைக் கொலைசெய்தான்? ஏனெனில் தனது செயல்கள் தீமையாய் இருந்தபடியினாலும், தனது சகோதரனுடைய செயல்கள் நீதியாய் இருந்தபடியினாலும் அவன் அப்படிச் செய்தான். எபி 11:4ஆதி 4:4-15நீதி 29:27ஆதி 4:25யூதா 1:11லூக் 11:51நீதி 29:10சங் 37:12 எனக்கு பிரியமானவர்களே, உலகம் உங்களை வெறுத்தால், அதைக்குறித்து நீங்கள் வியப்படையாதீர்கள். யோவா 15:18-19யோவா 17:14லூக் 21:172 தீமோ 3:12யாக் 4:4லூக் 6:22மாற் 13:13பிரச 5:8 நாம் சகோதரரில் அன்பாயிருக்கிறபடியால், மரணத்தைக் கடந்து, வாழ்வுக்கு உட்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்கிறோம். அன்பாயிராத எவரும் மரணத்திலேயே இன்னும் இருக்கிறான். 1 யோவா 5:2யோவா 13:35யோவா 5:241 யோவா 4:20-211 தெச 4:91 யோவா 4:7-81 பேது 1:22எபி 13:1 தனது சகோதர சகோதரியை வெறுக்கிற எவரும் கொலைகாரனாயிருக்கிறான். கொலைகாரன் எவனுக்குள்ளும் நித்தியவாழ்வு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். மத் 5:21-22நீதி 26:24-26வெளி 21:8யோவா 8:44லேவி 19:16-18அப் 23:14யாக் 4:1-2அப் 23:12
இவ்விதமாகவே, அன்பு என்ன என்பதை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம்: இயேசுகிறிஸ்து தமது உயிரை நமக்காகக் கொடுத்ததின் மூலமாக நாமும் நமது சகோதரருக்காக அல்லது சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். 1 யோவா 4:9-11எபே 5:2யோவா 13:34யோவா 3:16ரோம 5:8யோவா 15:12-13வெளி 1:51 பேது 3:18 யாராவது உலகப்பொருட்கள் உடையவனாயிருக்கையில், தனது சகோதரன் அல்லது சகோதரி கஷ்டத்தில் இருப்பதைக் கண்டும், அனுதாபம் கொள்ளாதிருந்தால், அவனில் இறைவனுடைய அன்பு இருப்பது எப்படி? எபி 13:16ஏசா 58:7-101 யோவா 4:20உபா 15:7-11நீதி 19:17லூக் 3:112 கொரி 9:5-9யாக் 2:15 அன்பான பிள்ளைகளே, நாம் வார்த்தையிலும் பேச்சிலும் மட்டும் அன்பாய் இருக்கிறவர்களாயிராமல், செயல்களிலும் சத்தியத்திலும் அன்பை காட்டுவோமாக. யாக் 2:15-16ரோம 12:91 பேது 1:22கலா 5:131 கொரி 13:4-7கலா 6:1-2எபே 4:1-3மத் 25:41-45 நாம் சத்தியத்திற்கு உரியவர்கள் என்று அறிவதும், இறைவனுடைய முன்னிலையில் நம்முடைய இருதயங்களை ஆறுதல்படுத்திக்கொள்வதும் இவ்விதமே: எபி 10:221 யோவா 3:21ஏசா 32:17எபி 6:10-11யோவா 18:371 யோவா 1:82 தீமோ 1:12யோவா 13:35 நம்முடைய இருதயங்களே நம்மைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தாலும், இறைவன் நமது இருதயங்களைப் பார்க்கிலும், பெரியவராயிருக்கிறார் என்றும், அவர் எல்லாவற்றையும் அறிவார் என்றும், நம்மை ஆறுதல்படுத்திக்கொள்வோம். சங் 139:1-4எரே 17:10எபி 4:131 கொரி 4:41 யோவா 4:4எரே 23:24யோவா 10:29-30சங் 44:20-21 அன்பான நண்பரே, நம்முடைய இருதயங்கள் நம்மைக் குற்றவாளிகளாய் தீர்க்காதிருந்தாலும், இறைவனுக்கு முன்பாக நிற்க தைரியங்கொண்டிருக்க முடியும். 1 யோவா 2:28எபி 4:162 கொரி 1:12சங் 101:2சங் 7:3-51 யோவா 5:141 யோவா 4:17எபி 10:22 மேலும் நாம் இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறதினாலும், அவருக்கு பிரியமானவைகளைச் செய்கிறதினாலும், நாம் கேட்கிற எதையும் அவரிடத்தில் இருந்து கேட்டுப் பெற்றுக்கொள்வோம். யோவா 15:7யோவா 9:311 யோவா 5:14மத் 21:22மாற் 11:24யோவா 16:23-24சங் 34:4யோவா 14:13 இறைவனுடைய கட்டளை இதுவே: தமது மகனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் விசுவாசமாய் இருக்கவேண்டும் என்பதும், அவர் கட்டளையின்படி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதுமே. யோவா 6:29யோவா 13:341 பேது 1:22யோவா 15:121 பேது 4:81 யோவா 3:111 யோவா 4:211 தெச 4:9 இறைவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்கள் அவரில் வாழ்கிறார்கள். அவரும் அவர்களில் வாழ்கிறார். இவ்விதத்திலேயே இறைவன் நமக்குள் வாழ்கிறார் என்பதை அறிந்திருக்கிறோம்: அவர் நமக்குத்தந்த பரிசுத்த ஆவியானவராலே அதை அறிந்திருக்கிறோம். 1 கொரி 3:161 யோவா 4:15-161 யோவா 4:12-131 கொரி 6:192 தீமோ 1:141 யோவா 2:6யோவா 14:21-23ரோம 8:9-17