பென்யமீனியனான கூஷின் வார்த்தையின் நிமித்தம் தாவீது யெகோவாவுக்கு பாடிய சிகாயோன் என்னும் சங்கீதம்.
என் இறைவனாகிய யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைகிறேன்; சங் 31:151 பேது 4:19ஆப 3:1எரே 20:11சங் 18:2சங் 35:1-32 சாமு 16:1-23எரே 15:15
என்னைத் துரத்துகின்ற அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றி விடுவியும்.
இல்லாவிட்டால், அவர்கள் சிங்கத்தைப்போல் என்னைக் கிழித்து, சங் 50:222 தீமோ 4:17ஏசா 38:131 பேது 5:8உபா 33:20சங் 35:152 சாமு 14:6ஓசி 13:7-8
என்னைத் தப்புவிக்க ஒருவருமின்றித் துண்டு துண்டாக்கிப் போடுவார்கள்.
என் இறைவனாகிய யெகோவாவே, அவர்கள் கூறுகிறதை நான் செய்திருந்து 1 சாமு 24:111 சாமு 26:18-19சங் 59:32 சாமு 16:7-8யோபு 11:14யோசு 22:221 சாமு 20:81 சாமு 22:13
என் கைகள் குற்றமுடையதாய் இருந்தால்,
என்னுடன் சமாதானமாய் இருக்கிறவனுக்கு நான் தீமை செய்திருந்தால், 1 சாமு 24:17-19சங் 55:20எரே 18:20-21சங் 109:51 சாமு 19:4-51 சாமு 20:11 சாமு 22:141 சாமு 24:10-15
அல்லது காரணமின்றி என் பகைவனைக் கொள்ளையிட்டிருந்தால்,
அப்பொழுது என் எதிரி என்னைப் பின்தொடர்ந்து என்னைப் பிடிக்கட்டும்; மல்கி 4:3எரே 17:13சங் 3:2சங் 44:5சங் 49:12ஆப 3:13ஏசா 10:6ஏசா 63:3
அவன் என்னைத் தரையில் தள்ளி,
உயிர்போக மிதித்து தூசியிலே என்னைக் கிடக்கப்பண்ணட்டும்.
யெகோவாவே, உம்முடைய கோபத்தில் எழும்பும்; சங் 35:23சங் 44:23ஏசா 33:10சங் 3:7ஏசா 37:20ஏசா 51:9சங் 103:6சங் 138:7
என் எதிரிகளினுடைய கடுங்கோபத்திற்கு விரோதமாக எழுந்திடும்.
என் இறைவனே, விழித்தெழும்; நீதியைக் கட்டளையிடும்.
எல்லா நாட்டினரும் உம்மைச் சூழ ஒன்றுசேர்த்து வெளி 16:5-7வெளி 18:20வெளி 19:2ஏசா 57:15சங் 113:5-6சங் 138:6சங் 48:11சங் 58:10-11
நீர் உன்னதத்திலிருந்து அவர்களை ஆளுகை செய்யும்.
யெகோவா மக்களை நியாயந்தீர்க்கட்டும். சங் 96:13ரோம 14:10-122 கொரி 1:12சங் 43:11 தெச 2:10சங் 98:91 கொரி 4:4-5சங் 26:1
யெகோவாவே, என்னுடைய நீதிக்குத் தக்கதாய் என்னை நியாயந்தீரும்;
மகா உன்னதமானவரே, என் உத்தமத்திற்கு ஏற்ப எனக்கு நியாயம் செய்யும்.
சிந்தனைகளையும் இருதயங்களையும் ஆராய்ந்தறிகிற எரே 11:20எரே 17:10எரே 20:121 நாளாக 28:91 சாமு 16:7சங் 10:15சங் 11:5சங் 139:1
நீதியுள்ள இறைவனே,
கொடியவர்களின் வன்செயலை ஒரு முடிவுக்குக் கொண்டுவாரும்;
நீதியுள்ளவர்களைப் பாதுகாப்பாய் இருக்கச் செய்யும்.
மகா உன்னதமான இறைவனே என் கேடயம்; ஆதி 15:1நீதி 28:18சங் 125:4சங் 84:11யோபு 8:6நீதி 11:20நீதி 2:21சங் 112:2
இருதயத்தில் நேர்மையுள்ளவர்களை விடுவிக்கிறார்.
இறைவன் நீதியுள்ள நீதிபதி; நாகூ 1:2நாகூ 1:6சங் 7:8சங் 94:15சங் 140:12-13சங் 50:6
அவர் நாள்தோறும் தமது கடுங்கோபத்தை வெளிப்படுத்தும் இறைவன்.
கொடியவன் மனம் மாறாவிட்டால், அப் 3:19மத் 3:10ஏசா 55:6-7உபா 32:41எசேக் 18:30சங் 85:4எசேக் 21:23எசேக் 21:9-11
இறைவன் தமது வாளைக் கூராக்குவார்;
அவர் தமது வில்லை வளைத்து நாணேற்றுவார்.
அவர் தமது பயங்கர ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்; 2 தெச 1:6ஆப 3:13ஆப 3:11சங் 18:14சங் 45:5சங் 64:7வெளி 16:6வெளி 6:10
எரிகிற அம்புகளையும் ஆயத்தமாக்குகிறார்.
தீமையினால் நிறைந்தவர்களோ யாக் 1:15யோபு 15:35ஏசா 33:11ஏசா 59:4-5யோபு 15:20
பிரச்சனையைக் கர்ப்பந்தரித்து, வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.
மற்றவர்கள் விழும்படி குழியைத் தோண்டுகிறவர்களோ, யோபு 4:8சங் 141:10நீதி 26:27பிரச 10:8-9சங் 35:7-8சங் 10:2சங் 57:6சங் 9:15-16
தாங்களே அதற்குள் விழுகிறார்கள்.
அவர்கள் செய்யும் தீங்கு அவர்கள் மேலேயே திரும்புகிறது; எஸ்த 9:25சங் 37:12-131 இராஜா 2:321 சாமு 24:12-131 சாமு 26:101 சாமு 28:191 சாமு 31:3-4சங் 36:12
அவர்கள் வன்செயல் அவர்கள் தலைமீதே விழுகிறது.
யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்; சங் 9:2சங் 71:15-16சங் 98:2சங் 111:3அப் 7:48தானி 4:34சங் 35:28சங் 51:14
மகா உன்னதமான யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.