ஆசாபின் சங்கீதம்.
வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவா பேசுகிறார், சங் 113:3யோசு 22:22மத் 25:32ஆமோ 3:8எரே 32:18-191 நாளாக 16:37ஏசா 1:2நெகே 9:6
அவர் சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து,
அது மறையும் இடம் வரையுமுள்ள முழு உலகத்தையும் அழைக்கிறார்.
பூரண அழகுள்ள சீயோனிலிருந்து வெளி 21:23சங் 48:2சங் 80:1வெளி 1:16உபா 33:2ஆப 3:3-4ஓசி 5:15ஆப 2:20
இறைவன் பிரகாசிக்கிறார்.
நம்முடைய இறைவன் வருகிறார், தானி 7:10எண் 16:35லேவி 10:2மத் 3:12மல்கி 4:1சங் 97:3-51 இராஜா 19:11-122 தெச 1:8-9
அவர் மவுனமாய் இருக்கமாட்டார்;
அவருக்கு முன்னாக நெருப்பு சுட்டெரித்துச் செல்கிறது;
அவரைச் சுற்றிப் புயல் சீற்றத்துடன் வீசுகிறது.
அவர் தமது மக்களை நியாயந்தீர்க்கும்படியாக, உபா 31:28உபா 32:1ஏசா 1:2உபா 30:19உபா 4:26மீகா 6:1-2ஏசா 11:3-4யோவா 5:22-23
மேலேயுள்ள வானங்களையும் பூமியையும் அழைத்துச் சொல்கிறார்:
“பலியினால் என்னுடன் உடன்படிக்கை செய்த, எபி 13:20யாத் 24:3-8மத் 26:28எபி 12:24உபா 33:2-3எபி 9:10-23மத் 24:31சங் 30:4
பரிசுத்தவான்களை ஒன்றுகூட்டுங்கள்.”
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கின்றன; சங் 97:6சங் 75:7சங் 89:5வெளி 19:2சங் 9:16ரோம 14:9-122 கொரி 5:10ஆதி 18:25
அவர் நியாதிபதியாகிய இறைவன்.
“என் மக்களே, கேளுங்கள், நான் பேசுவேன்; சங் 81:8யாத் 20:2யாத் 19:5-6எரே 2:9எரே 2:4-5சங் 49:1சங் 81:10-121 சாமு 12:22-25
இஸ்ரயேலே, நான் உனக்கு விரோதமாகச் சாட்சி கூறுவேன்:
நான் இறைவன், நானே உங்கள் இறைவன்.
எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கும் உங்கள் பலிகளுக்காகவோ, எபி 10:4-10ஓசி 6:6ஏசா 1:11-31சங் 40:6-8சங் 51:16எரே 7:21-23
அல்லது உங்கள் தகன காணிக்கைகளுக்காகவோ நான் உங்களைக் கண்டிக்கவில்லை.
உங்கள் வீட்டிலிலுள்ள காளைகளோ, மீகா 6:6-8அப் 17:25எபி 10:4-6ஏசா 43:23-24சங் 69:31
உங்கள் தொழுவத்திலுள்ள வெள்ளாடுகளோ எனக்கு வேண்டியதில்லை.
ஏனெனில் காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் எரே 27:5-6சங் 104:14சங் 8:6-8தானி 2:38சங் 104:24-251 நாளாக 29:14-16ஆதி 1:24-25ஆதி 2:19
ஆயிரக்கணக்கான குன்றுகளிலுள்ள ஆடுமாடுகளும் என்னுடையவைகள்.
மலைகளிலுள்ள ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்; மத் 6:26ஆதி 1:20-22யோபு 39:26-30லூக் 12:24எசேக் 14:15-16ஏசா 56:9யோபு 39:13-18மத் 10:29-31
வயல்வெளிகளிலுள்ள உயிரினங்களும் என்னுடையவைகள்.
நான் பசியாயிருந்தால் உங்களிடம் சொல்லமாட்டேன்; யாத் 19:5உபா 10:14சங் 24:1-21 கொரி 10:26-28யோபு 41:11சங் 115:15-16ஆதி 1:28-30ஆதி 8:17
ஏனெனில் உலகமும் அதிலுள்ள யாவும் என்னுடையவைகள்.
நான் காளைகளின் இறைச்சியை உண்டு,
ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தைக் குடிப்பேனோ?
“நீங்கள் இறைவனாகிய எனக்கு உங்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிடுங்கள்; எபி 13:15சங் 56:12உபா 23:21சங் 107:21-22சங் 116:12-141 பேது 2:5ஓசி 14:2சங் 76:11
மகா உன்னதமான இறைவனாகிய எனக்கு உங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுங்கள்.
துன்ப நாளில் என்னை நோக்கி மன்றாடிக் கூப்பிடுங்கள், சங் 107:28சங் 91:15சங் 34:3-4சங் 107:19சகரி 13:9யாக் 5:13சங் 81:7சங் 107:6-13
நான் உங்களை விடுவிப்பேன்; நீங்கள் என்னை மகிமைப்படுத்துவீர்கள்.”
கொடியவர்களுக்கு இறைவன் சொல்கிறதாவது: ஏசா 29:13சங் 25:14சங் 78:36-38ஏசா 55:6-7ரோம 2:17-24எபி 8:9ஏசா 48:1-22 பேது 2:15
“என் சட்டங்களைக் கூறுவதற்கும்,
என் உடன்படிக்கையை உங்கள் உதடுகளினால் உச்சரிப்பதற்கும்
உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
என்னுடைய அறிவுறுத்தலை வெறுத்து, நெகே 9:262 தீமோ 4:3-4நீதி 12:1நீதி 1:28-291 இராஜா 14:92 தெச 2:10-12எரே 8:9நீதி 1:7
என் வார்த்தைகளை உங்களுக்குப் பின்னாக எறிந்துவிடுகிறீர்கள்.
நீங்கள் திருடனைக் காணும்போது அவனோடு சேர்ந்துகொள்கிறீர்கள்; ரோம 1:321 தீமோ 5:22எபி 13:4எபே 5:11-13ஏசா 5:23எரே 5:8-9யோபு 31:9-11லேவி 20:10
விபசாரக்காரருடனும் நீங்கள் பங்குகொள்கிறீர்கள்.
நீங்கள் உங்கள் வாயைத் தீமைக்காக பயன்படுத்துகிறீர்கள்; சங் 10:7எரே 9:5சங் 52:2-4வெளி 21:8ஏசா 59:3-4யாக் 3:5-9சங் 5:9சங் 55:21
உங்கள் நாவை வஞ்சகத்தைப் பேசப் பயன்படுத்துகிறீர்கள்.
நீங்கள் உங்கள் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசுகிறீர்கள்; மத் 10:21லேவி 19:16நீதி 10:18மத் 5:11சங் 31:18வெளி 12:101 தீமோ 3:11லூக் 22:65
இடைவிடாமல் உங்கள் சகோதரனையே தூற்றுகிறீர்கள்.
இவற்றை நீங்கள் செய்தபோது நான் மவுனமாய் இருந்தேன்; ரோம 2:4-5நீதி 29:1பிரச 12:14ஏசா 57:11சங் 94:7-11பிரச 8:11-12சங் 90:8ஏசா 42:14
நானும் உங்களைப்போலவே இருப்பேன் என்று நினைத்தீர்கள்.
ஆனால் நான் உங்களைக் கடிந்துகொண்டு,
உங்கள் கண்களுக்கு முன்பாகவே உங்களைக் குற்றஞ்சாட்டுவேன்.
“இறைவனை மறக்கிறவர்களே, இதைக் கவனியுங்கள்; யோபு 8:13ஓசி 4:6சங் 9:17சங் 7:2உபா 32:18ஓசி 13:8எரே 2:32சங் 10:4
இல்லாவிட்டால் நான் உங்களை முற்றிலும் தண்டித்துப் போடுவேன்;
ஒருவரும் உங்களைத் தப்புவிக்கமாட்டார்கள்.
நன்றி பலியைச் செலுத்துகிறவன் என்னைக் கனம்பண்ணுகிறான்; சங் 91:16யாக் 3:13சங் 24:4-5சங் 86:12சங் 50:14-15ரோம 12:1சங் 25:14ஏசா 12:2
இறைவனாகிய என் இரட்சிப்பை நான் குற்றமற்றவனுக்குக் காண்பிப்பேன்.”