படைப்பின் வரலாறு
ஆரம்பத்தில் இறைவன் வானங்களையும் பூமியையும் படைத்தார். யோவா 1:1-3எபி 11:3ஏசா 45:18வெளி 4:11எபி 1:10கொலோ 1:16-17ஏசா 42:5யாத் 20:11 பூமி உருவமற்று வெறுமையாய் இருந்தது. 1 ஆழத்தின் மேற்பரப்பில் இருள் பரவியிருந்தது. இறைவனின் ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். எரே 4:23சங் 104:30ஏசா 45:18சங் 33:6யோபு 26:7ஏசா 40:12-14யோபு 26:14நாகூ 2:10
அதன்பின் இறைவன், “ஒளி உண்டாகட்டும்” என்று சொன்னார்; ஒளி உண்டாயிற்று. 2 கொரி 4:6யோவா 1:5ஏசா 45:7ஏசா 60:191 யோவா 1:5எபே 5:8யோவா 3:19சங் 97:11 ஒளி நல்லது என்று இறைவன் கண்டார், அவர் இருளிலிருந்து ஒளியைப் பிரித்தார். பிரச 2:13பிரச 11:7ஆதி 1:18ஆதி 1:31ஆதி 1:12ஆதி 1:10ஆதி 1:25 இறைவன் ஒளிக்குப் “பகல்” என்றும் இருளுக்கு “இரவு” என்றும் பெயரிட்டார். மாலையும் காலையுமாகி முதலாம் நாள் ஆயிற்று. சங் 74:16ஏசா 45:71 தெச 5:5சங் 104:20ஆதி 8:22ஆதி 1:8எரே 33:20சங் 19:2
அதன்பின் இறைவன், “தண்ணீர்திரளுக்கு இடையில் ஒரு வானவெளி உண்டாகட்டும்; அந்த வானவெளி கீழே இருக்கிற தண்ணீரிலிருந்து வானவெளிக்கு மேலே இருக்கிற தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்று சொன்னார். எரே 51:15யோபு 37:18சங் 33:6யோபு 26:7-8எரே 10:12-13சங் 104:2சங் 148:4சங் 136:5-6 இவ்வாறு இறைவன் இந்த வானவெளியை உண்டாக்கி, கீழேயுள்ள தண்ணீரை, மேலேயுள்ள தண்ணீரிலிருந்து பிரித்தார். அது அப்படியே ஆயிற்று. நீதி 8:28-29சங் 148:4மத் 8:27யோபு 38:8-11ஆதி 1:9யோபு 26:8ஆதி 1:15ஆதி 1:24 இறைவன் வானவெளிக்கு “ஆகாயம்” என்று பெயரிட்டார். அப்பொழுது மாலையும் காலையுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று. ஆதி 1:5ஆதி 1:19ஆதி 1:10ஆதி 1:13ஆதி 1:23ஆதி 1:31ஆதி 5:2
அதன்பின் இறைவன், “ஆகாயத்தின் கீழுள்ள தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, உலர்ந்த தரை தோன்றட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. 2 பேது 3:5யோனா 1:9எரே 5:22சங் 95:5பிரச 1:7நீதி 8:28-29சங் 33:7யோபு 26:10 இறைவன் உலர்ந்த தரைக்கு “நிலம்” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “கடல்” என்றும் பெயரிட்டார். அது நல்லது என்று இறைவன் கண்டார். உபா 32:4சங் 104:31ஆதி 1:4
அதன்பின் இறைவன், “நிலம் தாவர வகைகளை முளைப்பிக்கட்டும்: விதை தரும் பயிர்களையும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் தன்தன் வகைகளின்படியே முளைப்பிக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. எபி 6:7சங் 104:14-17சங் 147:8ஆதி 1:29சங் 65:9-13ஆதி 2:9மத் 6:30யோபு 28:5 நிலம் தாவரங்களை முளைப்பித்தது: விதையை பிறப்பிக்கும் பயிர்களை அவற்றின் வகைகளின்படியும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் மரங்களை அவற்றின் வகைகளின்படியும் முளைப்பித்தது. அது நல்லது என்று இறைவன் கண்டார். மாற் 4:28ஏசா 55:10-11கலா 6:7லூக் 6:44மத் 13:24-26ஏசா 61:112 கொரி 9:10 அப்பொழுது மாலையும் காலையுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
அதன்பின் இறைவன், “வானவெளியில் ஒளிச்சுடர்கள் உண்டாகட்டும், அவை இரவிலிருந்து பகலைப் பிரிக்கட்டும்; அவை பூமியில் பருவகாலங்களையும், நாட்களையும், வருடங்களையும் குறிக்கும் அடையாளங்களாகவும், சங் 104:19-20உபா 4:19சங் 74:16-17எரே 31:35சங் 148:3சங் 136:7-9ஆமோ 5:8சங் 148:6 அவை பூமிக்கு ஒளி கொடுக்கும்படி, வானவெளியில் ஒளிச்சுடர்களாய் இருக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. பகலை ஆளுவதற்குப் பெரிய சுடரும், இரவை ஆளுவதற்குச் சிறிய சுடருமாக, இறைவன் இரு பெரும் ஒளிச்சுடர்களை உண்டாக்கினார். அவர் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். சங் 136:7-9உபா 4:19சங் 8:3ஏசா 40:26சங் 148:5சங் 74:16யோபு 38:7சங் 148:3 இறைவன் அவற்றைப் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதற்காக வானவெளியில் வைத்தார். சங் 8:3சங் 8:1யோபு 38:12அப் 13:47ஆதி 9:13 பகலையும் இரவையும் ஆளுவதற்காகவும், இருளிலிருந்து ஒளியைப் பிரிப்பதற்காகவும் அவற்றை வைத்தார். அது நல்லது என்று இறைவன் கண்டார். எரே 31:35சங் 19:6 அப்பொழுது மாலையும் காலையுமாகி, நான்காம் நாள் ஆயிற்று.
அதன்பின் இறைவன், “தண்ணீரில் நீந்தும் உயிரினங்கள் பெருகட்டும், பூமிக்கு மேலாக வானவெளியெங்கும் பறவைகள் பறக்கட்டும்” என்று சொன்னார். சங் 104:24-25ஆதி 2:191 இராஜா 4:33சங் 148:10ஆதி 1:30ஆதி 1:22ஆதி 1:7ஆதி 8:17 இவ்வாறு இறைவன் பெரிய கடல் விலங்குகளையும், நீரில் நீந்தி வாழும் எல்லா உயிரினங்களையும் அவற்றின் வகைகளின்படியும், சிறகுள்ள எல்லா பறவைகளையும் அதினதின் வகைகளின்படியும் படைத்தார். அது நல்லது என்று இறைவன் கண்டார். சங் 104:24-26ஆதி 1:25ஆதி 8:19ஆதி 8:17யாத் 1:7யாத் 8:3ஆதி 6:20ஆதி 7:14 இறைவன் அவற்றை ஆசீர்வதித்து, “பலுகி எண்ணிக்கையில் பெருகி, கடல்நீரை நிரப்புங்கள், பூமியில் பறவைகளும் பெருகட்டும்” என்று சொன்னார். ஆதி 8:17யோபு 40:15ஆதி 1:28சங் 107:38ஆதி 35:11ஆதி 9:1யோபு 42:12ஆதி 30:30 அப்பொழுது மாலையும் காலையுமாகி, ஐந்தாம் நாள் ஆயிற்று.
அதன்பின் இறைவன், “நிலம் உயிரினங்களை அவற்றின் வகைகளின்படி உண்டாக்கட்டும்: வளர்ப்பு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் அதினதின் வகையின்படி உண்டாக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. சங் 50:9-10ஆதி 6:20ஆதி 8:19யோபு 40:15சங் 148:10ஆதி 7:14யோபு 39:5யோபு 38:39-40 இறைவன் காட்டு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், வளர்ப்பு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், தரையில் ஊரும் உயிரினங்கள் எல்லாவற்றையும் அவற்றின் வகைகளின்படியும் உண்டாக்கினார். அது நல்லது என்று இறைவன் கண்டார். எரே 27:5யோபு 12:8-10ஆதி 2:19-20யோபு 26:13
அதன்பின் இறைவன், “நமது உருவிலும் நமது சாயலின்படியும் மனிதனை உண்டாக்குவோம்; அவர்கள் கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், வளர்ப்பு மிருகங்களையும், எல்லா காட்டு மிருகங்களையும், தரையெங்கும் ஊரும் எல்லா உயிரினங்களையும் ஆளுகை செய்யட்டும்” என்று சொன்னார். கொலோ 3:10எபே 4:24சங் 8:4-8ஆதி 3:22ஆதி 5:1சங் 100:32 கொரி 3:18ஆதி 9:2-4
அப்படியே இறைவன் தமது சாயலில் மனிதனைப் படைத்தார், மத் 19:4எபே 2:10ஆதி 5:1-2மாற் 10:6ஆதி 2:21-25எபே 4:24சங் 139:14ஏசா 43:7
இறைவனின் சாயலிலேயே அவர் அவர்களைப் படைத்தார்.
அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.
அதன்பின் இறைவன் அவர்களை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகி எண்ணிக்கையில் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள். கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், தரையில் நடமாடும் எல்லா உயிரினங்களையும் ஆண்டு நடத்துங்கள்” எனக் கூறினார். ஆதி 9:1ஆதி 9:7லேவி 26:9சங் 128:3-4ஆதி 22:17-18ஆதி 1:22ஆதி 17:20சங் 127:1-5
அதன்பின் இறைவன், “பூமி முழுவதும் மேற்பரப்பிலுள்ள விதை தரும் தாவரங்களையும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் எல்லா மரங்களையும் உங்களுக்குக் கொடுக்கிறேன். அவை உங்களுக்கு உணவாயிருக்கும். ஆதி 9:3சங் 104:14-15சங் 145:15-16சங் 104:27-28அப் 14:17சங் 147:9யோபு 36:31மத் 6:11 பூமியிலுள்ள எல்லா மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், தரையில் நடமாடும் எல்லா உயிரினங்களுக்கும், அதாவது தன்னில் உயிர்மூச்சு உள்ள எல்லா உயிரினங்களுக்கும் நான் பச்சைத் தாவரங்கள் எல்லாவற்றையும் உணவாகக் கொடுக்கிறேன்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. சங் 104:14சங் 145:15-16சங் 147:9யோபு 38:39-41யோபு 40:15யோபு 40:20ஆதி 9:3யோபு 39:4
இறைவன் தாம் உண்டாக்கிய எல்லாவற்றையும் பார்த்தார், அது மிக நன்றாயிருந்தது. அப்பொழுது மாலையும் காலையுமாகி, ஆறாம் நாள் ஆயிற்று. 1 தீமோ 4:4சங் 104:24சங் 19:1-2யாத் 20:11சங் 104:31புலம் 3:38ஆதி 2:2யோபு 38:7