சங்கீதங்கள் 148

Psalms 148
சங்கீதம் 148

யெகோவாவைத் துதியுங்கள். சங் 69:34சங் 89:5வெளி 19:1-6லூக் 2:13-14ஏசா 49:13மத் 21:9சங் 146:1

வானங்களிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள்;

மேலே உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.

அவருடைய தூதர்களே, எல்லோரும் அவரைத் துதியுங்கள்; சங் 103:20-21ஏசா 6:2-4எசேக் 3:12ஆதி 2:1யோபு 38:7வெளி 5:11-13

அவருடைய பரலோக சேனைகளே, எல்லோரும் அவரைத் துதியுங்கள்.

சூரியனே, சந்திரனே, அவரைத் துதியுங்கள்; சங் 19:1-6சங் 136:7-9சங் 8:1-3ஆதி 1:14-16உபா 4:19ஆதி 8:22சங் 89:36-37எரே 33:20

பிரகாசிக்கிற நட்சத்திரங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்.

மிக உயர்ந்த வானங்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; 1 இராஜா 8:27ஆதி 1:7உபா 10:14நெகே 9:62 கொரி 12:2ஆதி 7:11சங் 104:3சங் 113:6

ஆகாயங்களுக்கு மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.

அவர் கட்டளையிட அவை படைக்கப்பட்டதால் வெளி 4:11ஆதி 1:6சங் 33:6-9ஆதி 1:1-2எரே 10:11-13ஆமோ 9:6சங் 95:5

அவைகள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும்.

யெகோவா அவைகளை எப்பொழுதும் என்றென்றைக்கும் நிலைப்படுத்தினார்; எரே 33:25எரே 31:35-36யோபு 38:33சங் 89:37சங் 119:90-91யோபு 38:10-11ஏசா 54:9நீதி 8:27-29

அழிந்துபோகாத ஒரு விதிமுறையை ஏற்படுத்தியிருக்கிறார்.

பூமியிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள், ஆதி 1:21சங் 74:13-14ஏசா 43:20யோபு 41:1-34சங் 104:25-26ஏசா 27:1ஏசா 51:9-10

பெரிய கடல் உயிரினங்களே, கடலின் ஆழங்களே,

நெருப்பே, பனிக்கட்டி மழையே, உறைபனியே, மேகங்களே, சங் 147:15-18வெளி 16:21வெளி 16:8-9ஆமோ 7:4யாத் 10:13யாத் 10:19யாத் 14:21யாத் 9:23-25

அவருடைய கட்டளையை நிறைவேற்றும் புயல்காற்றே,

மலைகளே, குன்றுகளே, ஏசா 44:23ஏசா 49:13ஏசா 55:12-13சங் 97:4-5சங் 98:7-9எசேக் 36:1-15ஏசா 42:11ஏசா 64:1

பழமரங்களே, அனைத்து கேதுரு மரங்களே,

உயிரினங்களே, அனைத்து கால்நடைகளே, ஆதி 1:20-25சங் 150:6சங் 103:22எசேக் 17:23ஆதி 7:14சங் 50:10-11

சிறிய உயிரினங்களே, பறக்கும் பறவைகளே,

பூமியின் அரசர்களே, சகல நாடுகளே, ஏசா 60:3சங் 102:15வெளி 21:24ஏசா 49:23நீதி 8:15-16சங் 138:4-5சங் 2:10-12சங் 22:27-29

இளவரசர்களே, பூமியிலுள்ள சகல ஆளுநர்களே,

இளைஞர்களே, இளம்பெண்களே, எரே 31:13தீத் 2:4-6மத் 21:15-16சங் 68:25லூக் 19:37சங் 8:2சகரி 9:17

முதியவர்களே, பிள்ளைகளே அவரைத் துதியுங்கள்.

அவர்கள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும்; சங் 113:4சங் 8:1சங் 8:9ஏசா 12:4சங் 99:3-41 பேது 3:22ஏசா 33:5ஏசா 6:3

ஏனெனில் அவருடைய பெயர் மட்டுமே புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறது;

அவருடைய சிறப்பு பூமிக்கும், வானங்களுக்கும் மேலாக இருக்கிறது.

அவர் தம் உண்மையுள்ள பணியாளர்களாகிய, சங் 75:10உபா 4:7எபே 2:171 சாமு 2:1சங் 112:91 பேது 2:9உபா 10:21வெளி 5:8-14

இருதயத்திற்கு உகந்த இஸ்ரயேல் மக்கள் துதிக்கும்படி,

அவர் தம்முடைய மக்களுக்கென ஒரு வல்லமையுள்ள அரசனை உயர்த்தியிருக்கிறார்;

அதற்காக அவரை எல்லா பரிசுத்தவான்களும் இஸ்ரயேலரும் துதிக்கிறார்கள்.

யெகோவாவைத் துதியுங்கள்.