அல்லேலூயா, சங் 149:1சங் 134:2சங் 116:18-19சங் 29:9தானி 12:3எசேக் 10:1சங் 102:19சங் 118:19-20
இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்;
அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள்.
அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; உபா 3:24எரே 32:17-19சங் 145:3சங் 145:5-6வெளி 15:3-4சங் 96:4சங் 145:12
இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; சங் 33:2சங் 149:3சங் 81:2-3சங் 98:5-6சங் 92:31 நாளாக 15:241 நாளாக 15:281 நாளாக 16:42
யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள்.
தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்; ஏசா 38:20சங் 149:3யாத் 15:20சங் 144:9யோபு 30:31சங் 92:3யோபு 21:12சங் 33:2
கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள்.
கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்; 1 நாளாக 15:161 நாளாக 25:11 நாளாக 15:191 நாளாக 15:281 நாளாக 25:61 நாளாக 16:52 சாமு 6:51 நாளாக 13:8
அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள்.
சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக. சங் 145:21வெளி 5:13சங் 103:22சங் 145:10சங் 148:7-11
அல்லேலூயா.