சங்கீதங்கள் 127

Psalms 127
சங்கீதம் 127

சீயோன் மலை ஏறும்போது பாடும் சாலொமோனின் பாடல்.

யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால், நீதி 16:91 கொரி 3:7நீதி 21:30-311 கொரி 3:9-15சங் 33:16-18சங் 121:3-5சங் 124:11 நாளாக 28:10

அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்;

யெகோவா நகரத்தின்மேல் கண்காணிப்பாய் இருக்கவில்லையென்றால்,

காவலர் அதைக் காவல் செய்வதும் வீண்.

நீங்கள் சாப்பிடும் உணவுக்காக அதிகாலையில் எழுந்து, பிரச 5:12சங் 4:8யோபு 11:18சங் 3:5பிரச 2:20-23எரே 31:26பிரச 1:14எசேக் 34:25

நித்திரையின்றி நீண்டநேரம் உழைப்பதும் வீண்;

ஏனெனில் அவர் தாம் நேசிக்கிறவர்களுக்கு

அவர்கள் தூங்கும்போதும்கூட தேவையைத் தருகிறார்.

பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் உரிமைச்சொத்து; சங் 128:3-4உபா 28:41 சாமு 1:27ஆதி 48:4ஆதி 33:5ஏசா 8:18ஆதி 1:281 சாமு 1:19-20

பிள்ளைகள் அவரிடமிருந்து கிடைக்கும் வெகுமதியே.

ஒருவன் தன் வாலிபப் பருவத்தில் பெற்றெடுக்கும் பிள்ளைகள் நீதி 17:6நீதி 31:28எரே 50:9சங் 120:4

போர்வீரனின் கைகளில் இருக்கும் அம்புகளைப்போல் இருக்கிறார்கள்.

இவ்வித அம்புகளால் தன் அம்புக்கூட்டை நிரப்பிய நீதி 27:11யோபு 42:12-16ஆதி 50:23யோபு 5:4சங் 18:47யோபு 1:2

மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்;

நீதிமன்றத்தில் தங்கள் பகைவரோடு வாதாடும்போது,

அவர்கள் வெட்கப்படமாட்டார்கள்.