நீதிமொழிகள் 21

Proverbs 21

அரசனுடைய இருதயம் யெகோவாவின் கரத்தில் நீரோடைகளைப் போலிருக்கின்றது; நீதி 16:9எஸ்றா 6:22நீதி 20:24அப் 7:10நீதி 16:1எஸ்றா 7:27-28தானி 4:35சங் 106:46

அவர் அதைத் தாம் விரும்பியவர்களிடம் நடத்துகிறார்.

மனிதனுடைய வழியெல்லாம் அவனுக்குச் சரியானதாகவே தோன்றும், நீதி 16:2லூக் 16:15நீதி 16:25எரே 17:10நீதி 30:121 சாமு 16:7நீதி 24:12யாக் 1:22

ஆனால் யெகோவா இருதயத்தின் சிந்தனைகளை சோதித்து அறிகிறார்.

பலி செலுத்துவதைப் பார்க்கிலும், 1 சாமு 15:22ஓசி 6:6மீகா 6:6-8நீதி 15:8மாற் 12:33ஏசா 1:11-17எரே 7:21-23சங் 50:8

நியாயத்தையும் நீதியையும் செய்வதே யெகோவாவுக்கு விருப்பம்.

கொடியவர்களின் உழாத நிலம் என்பது, 1 பேது 5:5நீதி 6:17ஏசா 2:17லூக் 18:14நீதி 8:13நீதி 15:8நீதி 21:27ஏசா 3:16

அவர்களின் பாவத்தை உண்டாக்கும் அகந்தையான பார்வையும் பெருமையான இருதயமுமே.

அவசரச்செயல் வறுமையைக் கொடுப்பது நிச்சயம், நீதி 10:4நீதி 13:41 தெச 4:11-12எபே 4:28நீதி 27:23-27நீதி 14:29நீதி 28:22நீதி 20:21

அதுபோலவே கடின உழைப்புள்ளவர்களின் திட்டங்கள் இலாபத்தைக் கொடுப்பதும் நிச்சயம்.

பொய் சொல்லி சம்பாதிக்கும் செல்வம், நீதி 13:11நீதி 10:2எரே 17:11நீதி 20:21நீதி 8:361 தீமோ 6:9-102 பேது 2:3நீதி 20:14

பறந்து செல்லும் நீராவியாயும் மரணக் கண்ணியாயும் இருக்கும்.

கொடியவர்கள் நியாயஞ்செய்ய மறுப்பதால், நீதி 21:21எபே 5:6மீகா 3:9-12நீதி 22:22-23சங் 7:16சகரி 5:3-4எசேக் 18:18எசேக் 22:13-14

அவர்களின் வன்முறை அவர்களையே வாரிச்செல்லும்.

குற்றவாளிகளின் வழி கோணலானது, 1 கொரி 3:31 யோவா 2:291 யோவா 3:3தானி 12:10நீதி 2:15சங் 14:2-31 பேது 1:22-23அப் 15:9

ஆனால் குற்றமற்றவர்களின் நடத்தையோ நேர்மையானது.

சண்டைக்கார மனைவியுடன் வீட்டில் ஒன்றாய் வாழ்வதைவிட, நீதி 19:13நீதி 21:19நீதி 25:24நீதி 27:15-16நீதி 12:4நீதி 17:1நீதி 15:17

கூரையின் மூலையில் தனித்து வாழ்வது சிறந்தது.

கொடியவர்கள் தீமையை விரும்புகிறார்கள்; 1 யோவா 2:16மீகா 3:2-3நீதி 3:291 கொரி 10:6ஏசா 32:6-8மாற் 7:21-22சங் 36:41 சாமு 25:8-11

தமக்கு அடுத்திருப்போரை இரக்கத்தோடு பார்க்கமாட்டார்கள்.

ஏளனம் செய்பவர்கள் தண்டிக்கப்படும்போது, அறிவற்றவர்கள் ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்; நீதி 19:25நீதி 18:15அப் 5:5நீதி 9:9உபா 21:21நீதி 18:11 கொரி 10:6-11உபா 13:11

ஞானமுள்ளவர்களுக்குப் போதிக்கும்போது, அவர்கள் அறிவைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

நீதிபரரான இறைவன் கொடியவர்களின் வீட்டைக் கவனித்துப் பார்த்து, நீதி 14:11சங் 107:43சங் 37:35-362 பேது 3:6-7நீதி 14:321 கொரி 10:52 பேது 2:4-9ஆமோ 4:11

கொடியவர்களை தண்டிக்கிறார்.

ஏழைகளின் அழுகைக்குச் செவிகொடுக்காதவர்களுக்கு மத் 6:14நீதி 1:28நீதி 28:27யாக் 2:13-16எரே 34:16-17மத் 18:30-35மத் 7:2ஏசா 1:15-17

தாங்கள் அழும்பொழுது பதில் கிடைக்காது.

இரகசியமாய் கொடுக்கும் அன்பளிப்பு கோபத்தைத் தணிக்கும்; நீதி 19:6நீதி 18:161 சாமு 25:35மத் 6:3-4நீதி 17:8ஆதி 32:20ஆதி 43:11நீதி 17:23

அங்கியில் மறைத்துக் கொடுக்கும் இலஞ்சம் கடுஞ்சீற்றத்தைக் குறைக்கும்.

நீதி செய்யப்படும்போது, அது நீதிமான்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, நீதி 10:29மத் 7:23பிரச 3:12ஏசா 64:5யோபு 29:12-17மத் 13:41-42சங் 40:8யோவா 4:34

ஆனால் தீயவர்களுக்கு பயமுண்டாக்கும்.

விவேகத்தின் பாதையைவிட்டு விலகிச்செல்பவர்கள், எபி 10:38சங் 125:51 யோவா 2:19எபி 10:26-27சங் 49:14செப்ப 1:6எபே 2:1எபி 6:4-6

முடிவில் இறந்தவர்களின் கூட்டத்தில் சேருவார்கள்.

சிற்றின்பத்தை தேடுகிறவர்கள் ஏழையாவார்கள்; நீதி 23:211 தீமோ 5:62 தீமோ 3:4நீதி 5:10-11நீதி 21:20லூக் 15:13-16லூக் 16:24-25

திராட்சைரசத்தையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறவர்கள் ஒருபோதும் செல்வந்தராவதில்லை.

கொடியவர்கள் நீதிமான்களையும், நீதி 11:8ஏசா 43:3-4ஏசா 53:4-51 பேது 3:18ஏசா 55:8-9

துரோகிகள் நேர்மையுள்ளவர்களையும் மீட்கும் பணயப் பொருளாவார்கள்.

சண்டைக்காரியும் கோபக்காரியுமான மனைவியுடன் வாழ்வதைவிட, நீதி 21:9சங் 55:6-7சங் 120:5-6எரே 9:2

பாலைவனத்தில் வாழ்வது சிறந்தது.

சிறந்த உணவும் எண்ணெயும் ஞானமுள்ளோர் வீட்டில் இருக்கும்; மத் 25:3-4பிரச 5:19சங் 112:3பிரச 7:11நீதி 15:6லூக் 15:14நீதி 10:22சங் 23:5

மூடர்களோ எல்லாவற்றையும் தின்று குடித்து அழித்துவிடுவார்கள்.

நீதியாகவும் அன்பாகவும் இருக்க விரும்புகிறவர்கள், மத் 5:61 கொரி 15:58நீதி 22:41 தீமோ 6:11எபி 12:14நீதி 15:92 தீமோ 2:22ஏசா 51:1

வாழ்வையும் செழிப்பையும், மதிப்பையும் பெறுவார்கள்.

ஞானமுள்ளவர்கள் பலவான்களின் பட்டணத்தைத் தாக்கி, பிரச 7:19நீதி 24:5பிரச 9:13-182 சாமு 20:16-222 சாமு 5:6-9

அவர்கள் நம்பியிருக்கும் கோட்டையையும் இடித்துப் போடுவார்கள்.

தங்கள் வாயையும் நாவையும் காத்துக்கொள்கிறவர்கள் நீதி 13:3நீதி 18:21நீதி 17:27-28யாக் 1:26நீதி 12:13நீதி 10:19யாக் 3:2-13

பேரழிவிலிருந்து தங்களைக் காத்துக்கொள்கிறார்கள்.

அகந்தையும் இறுமாப்பும் உள்ளவர்களுக்கு, “ஏளனக்காரர்கள்” என்று பெயர், சங் 1:1பிரச 7:8-9மத் 2:16நீதி 1:22நீதி 18:12நீதி 19:29எஸ்த 3:5-6ஏசா 16:6

அவர்கள் எல்லையற்ற ஆணவத்துடன் நடந்துகொள்கிறார்கள்.

சோம்பேறியின் கைகள் வேலைசெய்ய மறுப்பதால், நீதி 13:4மத் 25:26நீதி 12:24நீதி 19:24நீதி 12:27நீதி 15:19நீதி 26:16நீதி 24:30-34

அவர்களின் ஆசையினால் அவர்கள் அழிவார்கள்.

அவர்களுடைய பேராசை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது; சங் 37:26அப் 20:33-35சங் 112:9எபே 4:281 தெச 2:5-92 கொரி 8:7-9லூக் 6:30-36மத் 5:42

ஆனால் நீதிமான்களோ, தாராளமாய்க் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.

கொடியவர்கள் செலுத்தும் பலி அருவருப்பானது; ஏசா 66:3மத் 23:13நீதி 15:8எரே 6:201 சாமு 15:21-23ஆமோ 5:21-22ஏசா 1:11-161 சாமு 13:12-13

அது தீயநோக்கத்துடன் செலுத்தப்படுமானால், அது இன்னும் எவ்வளவு அதிக அருவருப்பாயிருக்கும்!

பொய்ச்சாட்சி கூறுபவர்கள் அழிந்துபோவார்கள்; 2 கொரி 4:13நீதி 19:5நீதி 19:9உபா 19:16-19நீதி 25:182 கொரி 1:17-20அப் 12:15யாத் 23:1

ஆனால் கவனமாய்க் கேட்பவர்கள் வெற்றிகரமாக சாட்சியளிப்பார்.

கொடியவர்கள் தங்களைத் துணிச்சல்காரர்களாய் காண்பிக்கிறார்கள்; 1 தெச 3:11ஆகா 1:7நீதி 11:5எசேக் 18:28ஆகா 2:18-19எரே 44:16-17எரே 5:3எரே 8:12

ஆனால் நேர்மையுள்ளவர்கள் தங்கள் வழிகளைச் சிந்தித்துப் பார்க்கிறார்கள்.

யெகோவாவுக்கு எதிராக வெற்றியளிக்கக்கூடிய அப் 5:39நீதி 19:21எரே 9:23ஏசா 14:271 கொரி 3:19-20ஏசா 8:9-10அப் 4:27-28ஏசா 46:10-11

ஞானமோ, நுண்ணறிவோ, திட்டமோ எதுவும் இல்லை.

போரின் நாளுக்காக குதிரை ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது, சங் 20:7ஏசா 31:1சங் 33:17-18சங் 147:10சங் 3:3சங் 68:20பிரச 9:11சங் 3:8

ஆனால் வெற்றியோ யெகோவாவினுடையது.