நீதிமொழிகள் 25

Proverbs 25

மேலும் சாலொமோனின் நீதிமொழிகள்

யூதாவின் அரசனான எசேக்கியாவின் மனிதர்கள் தொகுத்த சாலொமோனின் நீதிமொழிகள்: நீதி 1:11 இராஜா 4:32மீகா 1:1பிரச 12:9ஓசி 1:1ஏசா 1:1ஏசா 36:22ஏசா 37:2

காரியங்களை மறைப்பது இறைவனின் மகிமை; உபா 29:29ரோம 11:33-34யோபு 11:7-8யோபு 38:4யோபு 42:31 இராஜா 4:29-34யோபு 29:161 இராஜா 3:9-28

ஆராய்ந்து அறிவதோ அரசனுக்கு மகிமை.

வானங்கள் உயரமாயும் பூமி ஆழமாயும் இருப்பதுபோல், சங் 103:111 இராஜா 4:29ஏசா 55:91 பேது 1:7ஏசா 7:11ரோம 8:39

அரசர்களின் இருதயங்களும் ஆராய்ந்து அறிய முடியாது.

வெள்ளியிலிருந்து மாசை அகற்று, 2 தீமோ 2:20-21எசேக் 22:18நீதி 17:3ஏசா 1:25-27மல்கி 3:2-31 பேது 1:7

அப்பொழுது ஒரு கொல்லன் அதிலிருந்து ஒரு பாத்திரத்தை உருவாக்க முடியும்;

அரசனின் முன்னிருந்து தீய அதிகாரிகளை அகற்று; நீதி 16:12நீதி 20:8சங் 101:7-8ஏசா 16:5நீதி 20:281 இராஜா 2:331 இராஜா 2:46எஸ்த 7:10

அப்பொழுது நியாயத்தினால் அவனுடைய சிங்காசனம் நிலைநிறுத்தப்படும்.

அரசனின் முன்பாக உன்னை நீயே உயர்த்தாதே, நீதி 27:2நீதி 16:19நீதி 25:27யாத் 3:111 சாமு 15:172 சாமு 7:8-17எரே 1:6-10சங் 131:1

பெரியோர்கள் மத்தியில் இடம்பிடிக்க முயற்சி செய்யாதே;

அரசன் உன்னை பெரியோர்கள் முன்பாக சிறுமைப்படுத்துவதைவிட, லூக் 14:7-111 பேது 5:5லூக் 18:14வெளி 4:1நீதி 16:19

“நீ மேலே, இங்கே வா” என்று உனக்கு சொல்வது மேலானது.

நீ உன் கண்களாலே கண்டதைப் பற்றிச் சொல்ல,

அவசரப்பட்டு நீதிமன்றத்திற்கு ஓடாதே; மத் 5:25நீதி 17:14நீதி 18:6நீதி 14:12நீதி 30:332 சாமு 2:26எரே 5:31லூக் 14:31-32

முடிவில் உன் அயலான் நீ சொல்வது பிழையென்று காட்டி

உன்னை வெட்கப்படுத்தினால் நீ என்ன செய்வாய்?

அயலானோடு உன் வழக்கை வாதிடும்போது, மத் 18:5-17நீதி 11:13நீதி 20:19

நீ இன்னொருவனின் இரகசியத்தை வெளிப்படுத்தாதே;

அப்படிச் செய்தால் அதைக் கேட்கிறவன் உன்னை வெட்கப்படுத்துவான், சங் 119:39

உனக்கு உண்டாகும் கெட்ட பெயரும் உன்னைவிட்டு நீங்காது.

ஏற்ற நேரத்தில் பேசப்படும் சரியான வார்த்தை, நீதி 15:23ஏசா 50:4பிரச 12:10நீதி 24:26

வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட தங்கப்பழங்களைப் போன்றது.

ஞானமுள்ளவனின் கண்டனம் செவிகொடுத்துக் கேட்பவனுக்கு சங் 141:5நீதி 15:31-32நீதி 27:5-6நீதி 9:81 சாமு 25:31-34நீதி 15:5யோபு 42:11நீதி 1:8-9

அது தங்கக் காதணியும் தரமான தங்க நகையும் போல இருக்கிறது.

நம்பகமான தூதுவன் தன்னை அனுப்புகிறவர்களுக்கு நீதி 13:17நீதி 25:25பிலி 2:25-30நீதி 26:6

அறுவடை நாளில் உறைபனிக் குளிர்ச்சிபோல் இருப்பான்;

அவன் தன் எஜமானின் மனதைக் குளிரப்பண்ணுவான்.

தான் கொடுக்காத அன்பளிப்புகளைக் குறித்து பெருமையாகப் பேசுகிற மனிதன், லூக் 14:11நீதி 20:61 இராஜா 22:112 கொரி 11:13-182 பேது 2:15-19யூதா 1:162 கொரி 11:31யூதா 1:12-13

மழையைக் கொண்டுவராத மேகத்தையும் காற்றையும் போலிருக்கிறான்.

பொறுமையினால் ஆளுநரையும் இணங்கச் செய்யலாம், பிரச 10:4நீதி 15:1நீதி 16:141 சாமு 25:141 சாமு 25:24-44ஆதி 32:4-21

சாந்தமான நாவு எலும்பையும் நொறுக்கும்.

நீ தேனைப் பெற்றால் அதை அளவாய்ச் சாப்பிடு; நீதி 25:27எபே 5:18நீதி 24:13-14ஏசா 7:151 சாமு 14:25-27லூக் 21:34நியாயாதி 14:8-9ஏசா 7:22

அளவுக்கு மிஞ்சிச் சாப்பிட்டால் வாந்தியெடுப்பாய்.

நீ உன் அயலாருடைய வீட்டிற்கு அடிக்கடி போகாதே; ஆதி 19:2-3நியாயாதி 19:18-21ரோம 15:24

அளவுக்கு மிஞ்சிப்போனால் அவர்கள் உன்னை வெறுப்பார்கள்.

தன் அயலானுக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்கிறவன் தண்டாயுதத்தைப் போலவும், சங் 57:4நீதி 12:18யாக் 3:6எரே 9:8எரே 9:3நீதி 24:28சங் 120:3-4சங் 140:3

வாளைப்போலவும், கூரான அம்பைப்போலவும் இருக்கிறான்.

துன்ப காலத்தில் உண்மையற்ற நபரில் நம்பிக்கை வைப்பது, ஏசா 36:6எசேக் 29:6-7யோபு 6:14-202 நாளாக 28:20-212 தீமோ 4:16ஏசா 30:1-3

வலிக்கும் பல்லைப்போலவும் சுளுக்கிய காலைப்போலவும் இருக்கும்.

இருதயத்தில் துயரமுள்ளவனுக்கு மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடுவது, ரோம 12:15பிரச 3:4யாக் 2:15-16உபா 24:12-17ஏசா 58:7நீதி 10:26தானி 6:18யாக் 5:15

குளிர்க்காலத்தில் அவனுடைய உடையை எடுத்து விடுவது போலவும்,

காயத்தில் புளித்த காடியை வார்ப்பது போலவும் இருக்கும்.

உனது பகைவன் பசியாயிருந்தால், அவனுக்குச் சாப்பிடுவதற்கு உணவு கொடு; ரோம 12:20-21மத் 5:44யாத் 23:4-5நீதி 24:17லூக் 10:33-362 நாளாக 28:152இராஜா 6:22

அவன் தாகமாயிருந்தால், குடிப்பதற்குத் தண்ணீர் கொடு.

அப்படிச் செய்வதினால் நீ அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பாய்; 2 சாமு 16:12மத் 10:131 கொரி 15:18

யெகோவா கட்டாயமாய் உனக்கு வெகுமதி அளிப்பார்.

வாடைக்காற்று நிச்சயமாகவே மழையைக் கொண்டுவருவதுபோல, 2 கொரி 12:20யோபு 37:22நீதி 26:20சங் 15:3ரோம 1:30சங் 101:5

வஞ்சகநாவு கோபமுகத்தைக் கொண்டுவரும்.

சண்டைக்கார மனைவியுடன் வீட்டில் ஒன்றாய் வாழ்வதைவிட, நீதி 21:19நீதி 21:9நீதி 27:15-16நீதி 19:13

கூரையின் மூலையில் தனித்து வாழ்வது சிறந்தது.

தூரதேசத்திலிருந்து வருகிற நற்செய்தி, நீதி 15:30ரோம 10:15சங் 63:1யாத் 17:2-3ஆதி 21:16-19லூக் 2:10-11நாகூ 1:15வெளி 21:6

களைத்த ஆத்துமாவுக்குக் கிடைத்த குளிர்ந்த தண்ணீர்போல் இருக்கும்.

கொடியவனுக்கு முன்னால் தளர்வடையும் நீதிமான், எசேக் 34:18-191 சாமு 22:14-181 தெச 2:152 நாளாக 24:21-22அப் 7:52எசேக் 32:2ஆதி 4:8மத் 23:34-37

சேறு நிறைந்த நீரூற்றைப் போலவும் அசுத்தமடைந்த கிணற்றைப் போலவும் இருக்கிறான்.

தேனை அளவுக்கதிகமாய் உண்பது நல்லதல்ல, யோவா 5:44நீதி 27:2பிலி 2:32 கொரி 12:12 கொரி 12:11நீதி 25:16

தற்புகழைத் தேடுவதும் மதிப்பிற்குரியதல்ல.

தன்னடக்கம் இல்லாத மனிதன் நீதி 16:32நீதி 22:242 நாளாக 32:5நெகே 1:31 சாமு 20:301 சாமு 25:17

மதிலிடிந்த பட்டணத்தைப் போலிருக்கிறான்.