சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்; சங் 18:6யோனா 2:2சங் 118:5எபி 5:7சங் 50:15சங் 130:1ஏசா 37:3-4லூக் 22:44
அவர் எனக்குப் பதிலளிக்கிறார்.
யெகோவாவே, சங் 140:1-3நீதி 12:22சங் 109:1-2சங் 52:2-4மத் 26:59-62சங் 35:11
பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும்,
வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும்.
வஞ்சக நாவே, யோபு 27:8மத் 16:26ரோம 6:21
இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன?
அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?
போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும், யாக் 3:5-8நீதி 18:21நீதி 19:9நீதி 12:22நீதி 16:27நீதி 19:5சங் 45:5உபா 32:23-24
சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார்.
ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே ஆதி 10:2எசேக் 27:13ஆதி 25:13உன்னத 1:52 பேது 2:7-8எசேக் 27:21எசேக் 38:2-3எசேக் 39:1
வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே;
கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே!
சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில் மத் 10:16சங் 57:4எசேக் 2:6மத் 10:361 சாமு 20:30-33தீத் 3:3
நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.
நான் சமாதானத்தை நாடுகிறேன்; மத் 5:9சங் 109:4சங் 34:14எபி 12:14சங் 35:20ரோம 12:18எபே 2:14-171 சாமு 24:9-11
அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள்.