இம்மானுயேலின் அடையாளம்
உசியாவின் பேரனும், யோதாமின் மகனுமான ஆகாஸ், யூதாவிலே அரசனாய் இருந்தான். அப்பொழுது, சீரிய அரசன் ரேத்சீனும், இஸ்ரயேல் அரசன் ரெமலியாவின் மகன் பெக்காவும் எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்தனர். ஆனால் அதை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. 2இராஜா 15:372இராஜா 16:1ஏசா 1:1ஏசா 7:4-9ஏசா 8:6ஏசா 8:9-10சங் 83:3-52 நாளாக 28:1-6
“எப்பிராயீமியருடன் 1 சீரியா கூட்டணி அமைத்திருக்கிறது” என்ற செய்தி தாவீதின் குடும்பத்தாருக்குச் சொல்லப்பட்டது. காற்றினால் காட்டு மரங்கள் அதிர்வது போல், ஆகாஸ் அரசனின் இருதயமும் மக்களின் இருதயமும் பயத்தால் நடுங்கின. ஏசா 7:13ஏசா 8:12ஏசா 9:9நீதி 28:11 இராஜா 11:321 இராஜா 12:161 இராஜா 13:22 நாளாக 25:10
அப்பொழுது யெகோவா ஏசாயாவிடம், “நீயும் உன் மகன் செயார் யாசுபும் ஆகாஸ் அரசனைச் சந்திக்கப் போங்கள்; வண்ணான் தோட்டத்திற்குப் போகும் தெருவின் பக்கத்திலுள்ள மேற்குளத்தின் கால்வாய் முடிவில் அவனைக் காண்பீர்கள். 2இராஜா 18:17ஏசா 36:2ரோம 9:27ஏசா 6:132இராஜா 20:20யாத் 7:15ஏசா 10:21ஏசா 55:7 அவனிடம் சொல்லவேண்டியதாவது: ‘பயப்படாதே, குழப்பமடையாமல் கவனமாய் இரு. புகையும் கொள்ளிகளாகிய இந்த சீரியருடன் சேர்ந்த ரேத்சீனினதும், ரெமலியாவின் மகன் பெக்காவினதும் கடுங்கோபத்தினிமித்தம் மனந்தளராதே! ஏனெனில் அவர்கள் இருவரும் வெறும் புகையுங்கொள்ளிகளே. ஏசா 35:4உபா 20:3புலம் 3:26ஏசா 30:15மத் 24:6யாத் 14:13-14சகரி 3:22 நாளாக 20:17 சீரியர், எப்பிராயீமுடனும் ரெமலியாவின் மகனுடனும் சேர்ந்து, உனது அழிவுக்காகச் சதி செய்திருக்கிறார்கள். சங் 83:3-4சகரி 1:15நாகூ 1:11சங் 2:2 அவர்கள், “நாம் யூதாவின்மேல் படையெடுத்து, அதைப்பிடித்து எங்களுக்கிடையில் பங்கிட்டு, தாபயேலின் மகனை அங்கு அரசனாக நியமிப்போம்” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: ஏசா 8:10புலம் 3:37ஏசா 46:10-11சங் 33:11நீதி 21:30அப் 4:25-28ஏசா 37:29சங் 2:4-6
“ ‘அது அப்படி நடக்கப்போவதுமில்லை,
அது நிறைவேறப்போவதுமில்லை.
ஏனெனில், தமஸ்கு சீரியாவின் தலைநகராயிருக்கிறது; ஏசா 17:1-3ஆதி 14:152இராஜா 17:5-232 சாமு 8:6எஸ்றா 4:2ஓசி 1:6-10ஏசா 8:4
ரேத்சீன் மட்டுமே தமஸ்குவில் அரசனாயிருக்கிறான்.
இன்னும் அறுபத்தைந்து வருடங்களில்
எப்பிராயீம் ஒரு மக்கள் கூட்டமாயிராதபடி சிதறடிக்கப்படும்.
சமாரியா எப்பிராயீமுக்குத் தலைநகராய் இருக்கிறது, எபி 11:6ரோம 11:202 நாளாக 20:201 யோவா 5:10அப் 27:25ஏசா 30:12-14ஏசா 8:6-81 இராஜா 16:24-29
ரெமலியாவின் மகன் மட்டுமே சமாரியாவில் தலைவனாயிருக்கிறான்.
நீங்களோ உங்கள் நம்பிக்கையில் உறுதியாயிராவிட்டால்,
நிலையற்றுப் போவீர்கள்.’ ”
மீண்டும் யெகோவா ஆகாஸிடம் பேசி, ஏசா 8:5ஓசி 13:2ஏசா 1:13ஏசா 1:5ஏசா 10:20 “இறைவனாகிய உன் யெகோவாவிடம் கடலின் ஆழத்திலிருந்தோ, உன்னதத்தின் உயரத்திலிருந்தோ அடையாளம் ஒன்றைக் கேள்” என்றார். ஏசா 37:30ஏசா 38:7-82இராஜா 19:292இராஜா 20:8-11ஏசா 38:22நியாயாதி 6:36-40எரே 19:10மத் 12:38-40
ஆனால் ஆகாஸோ, “நான் கேட்கமாட்டேன், யெகோவாவை நான் பரீட்சை செய்யமாட்டேன்” என்றான். 1 கொரி 10:92 நாளாக 28:222இராஜா 16:15அப் 5:9உபா 6:16எசேக் 33:31மல்கி 3:15
அப்பொழுது ஏசாயா, “தாவீதின் குடும்பத்தாரே, இப்பொழுது கேளுங்கள்! மனிதனின் பொறுமையைச் சோதித்தது போதாதோ? என் இறைவனின் பொறுமையையும் சோதிக்கப் போகிறீர்களோ? ஏசா 43:24மல்கி 2:17எபி 3:10எரே 6:11ஆமோ 3:13எசேக் 16:47எசேக் 34:18ஏசா 63:10 ஆகவே யெகோவா தாமே உங்களுக்கு வருங்காலத்தின் அடையாளம் ஒன்றைக் கொடுப்பார்: ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெறுவாள். அவரை இம்மானுயேல் என அழைப்பார்கள். மத் 1:23ஏசா 9:6லூக் 1:31யோவா 1:1-2யோவா 1:14லூக் 1:351 தீமோ 3:16ஏசா 8:8 தீயதைத் தவிர்த்து நல்லதைத் தெரிந்துகொள்ள அறிவு வரும்போது, அவர் தேனும் தயிரும் சாப்பிடுவார். ஏசா 7:22ஆமோ 5:15மத் 3:4பிலி 1:9-10லூக் 1:35சங் 51:5ரோம 12:9லூக் 2:40 அந்தப் பிள்ளைக்கு தீயதை விலக்கி, நல்லதைத் தெரிவுசெய்வதற்கு போதிய அறிவு வருமுன்னே, நீ பயப்படுகிற அந்த இரண்டு அரசர்களின் நாடு பாழாக்கிவிடப்படும். ஏசா 8:4உபா 1:392இராஜா 15:29-302இராஜா 16:9ஆமோ 1:3-5ஓசி 5:9ஏசா 17:1-3ஏசா 9:11 எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள் முதல் இதுவரை, நீங்கள் காணாத கொடிய காலத்தை, யெகோவா உங்கள்மேலும், உங்கள் மக்கள்மேலும், உங்கள் தகப்பனின் குடும்பத்தார்மேலும் வரப்பண்ணுவார்; அவர் அசீரிய அரசனை உனக்கெதிராக வரப்பண்ணுவார்.” ஏசா 10:5-6ஏசா 8:7-81 இராஜா 12:16-192 நாளாக 10:16-192 நாளாக 28:19-212 நாளாக 32:1-332 நாளாக 33:112 நாளாக 36:6-20
அசீரியா, யெகோவாவின் கருவி
அந்த நாளிலே யெகோவா அதிக தூரத்திலுள்ள எகிப்திய நீரோடைகளிலிருந்து ஈக்களையும், அசீரிய நாட்டிலிருந்து தேனீக்களையும் கூவி அழைப்பார். ஏசா 5:26உபா 1:44உபா 7:20ஏசா 31:1யோசு 24:122இராஜா 23:33-34யாத் 8:21யாத் 8:24 அவை செங்குத்தான பள்ளத்தாக்குகளிலும், பாறை வெடிப்புகளிலும், முட்புதர்களிலும், நீர்த்தேக்கங்களிலும் வந்து தங்கும். ஏசா 2:19எரே 16:162 நாளாக 33:11ஏசா 2:21மீகா 7:17 அந்த நாளிலே, யெகோவா, ஐபிராத்து நதிக்கு அக்கரையிலிருக்கும் சவரக்கத்தியான அசீரிய அரசனை கூலிக்கு அமர்த்துவார். அவனைக் கொண்டு அவர் உங்கள் தலையை மொட்டையடித்து, கால்களில் உள்ள மயிரையும் சவரம்செய்து, உங்கள் தாடியையுங்கூட சிரைத்துப் போடுவார். ஏசா 8:7எசேக் 29:18எசேக் 5:1-4ஏசா 10:152 நாளாக 28:20-212இராஜா 16:7-82இராஜா 18:13-16எசேக் 29:20 அந்த நாளிலே ஒரு மனிதன் ஒரு இளம் பசுவையும், இரு வெள்ளாடுகளையும் மட்டுமே உயிருடன் வைத்திருக்கக் கூடியதாயிருக்கும். ஏசா 5:17எரே 39:10ஏசா 17:2ஏசா 37:30ஏசா 7:25 ஆனால் அவையோ மிகுதியாய் பால் கொடுக்கும். அதனால் அவன் உண்பதற்குத் தயிர் இருக்கும். அந்த நாட்டில் மீதமிருக்கின்ற கொஞ்ச மக்கள் தயிரையும் தேனையும் சாப்பிட்டே வாழ்வார்கள். ஏசா 7:152 சாமு 17:29மத் 3:4 அந்த நாளிலே ஆயிரம் வெள்ளிக்காசு 2 மதிப்புள்ள, ஆயிரம் திராட்சைக்கொடிகள் வளர்ந்த ஒவ்வொரு இடத்திலும், முட்செடிகளும் நெருஞ்சில் செடிகளுமே வளரும். ஏசா 5:6மத் 21:33உன்னத 8:11-12எபி 6:8ஏசா 32:12-14எரே 4:26 நாடு முழுவதும் முட்செடிகளாலும், நெருஞ்சில் செடிகளாலும் நிறைந்திருப்பதனால் மனிதர் அங்கு அம்பு வில்லுடனேயே போவார்கள். ஆதி 27:3 முன்பு ஒருகாலத்தில் மண்வெட்டியால் கொத்திப் பண்படுத்தப்பட்ட குன்றுகளில் முட்செடிக்கும் நெருஞ்சிலுக்கும் பயந்து, நீங்கள் இனியொருபோதும் அங்கு போகமாட்டீர்கள். அவை மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், செம்மறியாடுகள் நடமாடுவதற்குமான இடங்களாகிவிடும். ஏசா 13:20-22ஏசா 17:2ஏசா 5:17ஏசா 7:21-22செப்ப 2:6