தாகமுள்ளோருக்கு அழைப்பு
“ஓ! தாகமாய் இருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் யோவா 7:37-38வெளி 21:6வெளி 22:17ஏசா 44:3யோவா 4:10-14ஏசா 41:17-18சங் 143:6வெளி 22:1
நீங்கள் நீர்நிலைகளுக்கு வாருங்கள்;
பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்,
வாங்கி உட்கொள்ளுங்கள்.
வாருங்கள், பணமுமின்றி விலையுமின்றி
திராட்சரசமும் பாலும் வாங்குங்கள்.
உணவுக்கு உதவாதவற்றின்மேல் பணத்தை ஏன் செலவிடுகிறீர்கள்? யோவா 6:48-58எரே 2:13சங் 22:26சங் 36:8ரோம 10:2-3எபி 13:9ஏசா 51:7எரே 31:14
திருப்தி அளிக்காதவற்றின்மேல் ஏன் பிரயாசப்படுகிறீர்கள்?
கேளுங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள், நல்லதையே சாப்பிடுங்கள்.
அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுமையான உணவின் நிறைவுகளினால் மகிழும்.
காது கொடுத்துக் கேளுங்கள், என்னிடம் வாருங்கள்; எரே 32:40மத் 11:28நீதி 4:20யோவா 10:27அப் 13:34ஆதி 17:7ஏசா 61:8யோவா 6:37
உங்கள் ஆத்துமா வாழ்வதற்காக நான் சொல்வதைக் கேளுங்கள்.
நான் உங்களுடன் ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்வேன்;
நான் தாவீதுக்கு வாக்களித்த எனது உண்மையான அன்பை உங்களுக்குக் கொடுப்பேன்.
இதோ, நான் அவனை மக்கள் கூட்டங்களுக்கு ஒரு சாட்சியாகவும், வெளி 1:5ஏசா 9:6-7எபி 2:10வெளி 3:141 தீமோ 6:13தானி 9:25எசேக் 34:23-24எரே 30:9
மக்கள் கூட்டங்களுக்குத் தலைவனாகவும், தளபதியாகவும் அவனை வைத்தேன்.
ஆகையால் நிச்சயமாகவே நீங்கள் அறியாத நாடுகளுக்கு அழைப்பாய், ஏசா 60:5ஏசா 60:9சகரி 2:11ஏசா 56:8யோவா 17:1ரோம 15:20ஆதி 49:10ஏசா 55:4
உங்களை அறியாத பிறநாடுகள் உங்களிடம் விரைந்து வருவார்கள்.
ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரும்
இறைவனுமான உங்கள் யெகோவா
உங்களைச் சிறப்பினால் அலங்கரித்துள்ளார்.”
அவரைக் கண்டுகொள்ள வாய்ப்புள்ள வேளையில் யெகோவாவைத் தேடுங்கள்; எரே 29:12-14சங் 145:18ஏசா 45:19சங் 32:6சங் 14:2ஏசா 65:24மத் 7:7-82 கொரி 6:1-2
அவர் அருகிலிருக்கையில் அவரைக் கூப்பிடுங்கள்.
கொடியவன் தன் வழிகளையும், நீதி 28:13யாக் 4:8-10எசேக் 18:21-23ஏசா 44:22லூக் 15:10யோனா 3:10எசேக் 33:14-16ஏசா 43:25
தீயவன் தன் எண்ணங்களையும் கைவிடட்டும்;
அவன் யெகோவாவிடம் திரும்பட்டும், அவர் அவனுக்கு இரக்கம் காட்டுவார்,
எங்கள் இறைவனிடம் திரும்பட்டும், அவர் அவனை தாராளமாக மன்னிப்பார்.
“என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல; சங் 92:5சங் 40:5ஓசி 14:9சங் 25:10எசேக் 18:29தானி 4:37ஏசா 53:6நீதி 21:8
உங்கள் வழிகள் என் வழிகளுமல்ல”
என்று யெகோவா சொல்லுகிறார்.
“பூமியைப் பார்க்கிலும் வானங்கள் உயர்ந்தனவாய் இருக்கின்றது போலவே, சங் 103:11ரோம 11:31-36மத் 11:25சங் 77:19சங் 36:5சங் 89:2
என் வழிகளும் உங்கள் வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவையாய் இருக்கின்றன.
என் எண்ணங்களும் உங்கள் எண்ணங்களிலும் மேலானவை.
மழையும் உறைபனியும் வானத்திலிருந்து கீழே இறங்குகின்றன; 2 கொரி 9:9-11உபா 32:2ஏசா 30:23எசேக் 34:26ஓசி 10:12ஏசா 61:11சங் 65:9-131 சாமு 23:4
அவை பூமிக்கு நீர்ப்பாய்ச்சி,
அதில் முளையை எழும்பப்பண்ணி வளரச் செய்யாமல்
அவை திரும்பிச் செல்வதில்லை.
எனவே அவை விதைப்பவனுக்கு விதையையும்,
உண்பவனுக்கு உணவையும் கொடுக்கின்றன.
என் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தையும் அப்படியே இருக்கிறது: மத் 24:35ஏசா 46:10ரோம 10:17யோவா 6:63ஏசா 45:23லூக் 8:11-161 கொரி 1:181 தெச 2:13
நான் விரும்பியவற்றைச் செய்து,
நான் அதை அனுப்பிய நோக்கத்தை நிறைவேற்றாமல்
அது வெறுமையாய் என்னிடம் திரும்பி வராது.
நீங்கள் பாபிலோனிலிருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறி கலா 5:22ரோம 15:13ஏசா 44:23சங் 105:43சங் 96:11-13சங் 98:7-9வெளி 19:1-6ஏசா 49:13
சமாதானத்துடன் வழிநடத்தப்படுவீர்கள்;
மலைகளும் குன்றுகளும்
உங்கள் முன்பாக ஆர்ப்பரித்துப் பாடும்;
வெளியின் மரங்கள் யாவும்
கைகொட்டும்.
முட்செடிகளுக்குப் பதிலாக தேவதாரு மரங்களும், எபே 3:20-211 பேது 2:9-10ஏசா 41:192 கொரி 5:17ஏசா 61:3எரே 33:9ஏசா 60:131 பேது 4:11
காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச் செடிகளும் முளைக்கும்.
இது யெகோவாவுக்கு புகழ்ச்சியாகவும்,
அழியாத நித்திய
அடையாளமாகவும் இருக்கும்.”