லூக்கா 15

Luke 15

காணாமல் போன ஆடு

இயேசு சொல்வதைக் கேட்பதற்காக அநேக வரி வசூலிப்போரும், பாவிகளும் அவரைச் சுற்றிக் கூடியிருந்தார்கள். 1 தீமோ 1:15மத் 9:10-13லூக் 5:29-32மத் 21:28-31எசேக் 18:27ரோம 5:20லூக் 13:30லூக் 7:29 அப்பொழுது பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரும், “இவன் பாவிகளை வரவேற்று, அவர்களுடன் சாப்பிடுகிறான்” என்று முறுமுறுத்தார்கள். மத் 9:11லூக் 19:7லூக் 7:39லூக் 5:30அப் 11:3கலா 2:12லூக் 7:34லூக் 15:29-30

அப்பொழுது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களில் ஒருவனிடம் நூறு ஆடுகள் இருந்து, அவற்றில் ஒன்று காணாமல் போனால், அவன் தனது தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பத்திரமான இடத்தில் விட்டுவிட்டு, காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும், அதைத் தேடிப்போவான் அல்லவா? எசேக் 34:16எசேக் 34:11-12மத் 18:12-14லூக் 19:101 பேது 2:25சங் 119:176எசேக் 34:31ஏசா 53:6 அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, மகிழ்ச்சியுடன் தனது தோளில் போட்டுக்கொண்டு, எபி 12:2ஏசா 40:10-11ஏசா 46:3-4லூக் 19:9மீகா 7:18எபே 2:3-6எசேக் 18:23ஏசா 53:10-11 தன் வீட்டுக்கு வருவான். பின்பு அவன் தன்னுடைய நண்பர்களையும், அயலவர்களையும் கூப்பிட்டு, ‘என்னுடனே மகிழ்ச்சியடையுங்கள்; காணாமல் போன எனது ஆட்டை நான் கண்டுபிடித்து விட்டேன்’ என்று சொல்வான். லூக் 15:10லூக் 15:241 பேது 2:25சங் 119:176அப் 11:23யோவா 15:14யோவா 3:291 பேது 2:10 அவ்விதமாகவே மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப் பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரு பாவியைக் குறித்து பரலோகத்திலே அதிக மகிழ்ச்சி உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். லூக் 15:10லூக் 5:32லூக் 15:32மத் 18:13நீதி 30:12லூக் 18:9-11பிலி 3:6-7லூக் 16:15

காணாமல் போன நாணயம்

“ஒரு பெண்ணிடம், பத்து வெள்ளி நாணயங்கள் இருந்து, அதில் ஒன்று காணாமல் போனால், அவள் அதைக்கண்டுபிடிக்கும் வரைக்கும், ஒரு விளக்கைக் கொளுத்தி, வீட்டைக் கூட்டி, கவனமாய் தேடாமல் இருப்பாளோ? எசேக் 34:12லூக் 19:10யோவா 10:16யோவா 11:52எபே 2:17 அவள் அதைக் கண்டெடுக்கும்போது, தனது சிநேகிதிகளையும், அயலவர்களையும் கூடிவரும்படி கூப்பிட்டு, ‘என்னுடனே மகிழ்ச்சியாயிருங்கள்; காணாமல் போன எனது நாணயத்தை நான் கண்டுபிடித்தேன்’ என்று சொல்வாள் அல்லவா? லூக் 15:6-7 அவ்விதமாகவே மனந்திரும்புகிற ஒரு பாவியைக் குறித்து, இறைவனுடைய தூதரின் முன்னிலையில் பெருமகிழ்ச்சி உண்டாகும்” என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். லூக் 15:7எசேக் 33:112 கொரி 7:10எசேக் 18:23லூக் 13:5எசேக் 18:32மத் 18:14அப் 11:18

காணாமல் போன மகனின் உவமை

இயேசு தொடர்ந்து சொன்னதாவது: “ஒருவனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். மத் 21:23-31 அவர்களில் இளையவன் தனது தகப்பனிடம், ‘அப்பா, சொத்தில் எனக்குரிய பங்கைத் தாரும்’ என்று கேட்டான். எனவே தகப்பன், தனது சொத்தை இரண்டுபேர்களுக்கும் இடையில் பிரித்துக்கொடுத்தான். உபா 21:16-17மாற் 12:44லூக் 15:30சங் 17:14சங் 16:5-6

“சில நாட்களுக்குள்ளாகவே, இளையமகன் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரமாயுள்ள ஒரு நாட்டிற்குப் போனான். அவன் அங்கே, துன்மார்க்கமான வாழ்க்கையை வாழ்ந்து, தனது செல்வத்தையெல்லாம் வீணாக செலவுசெய்து அழித்துப்போட்டான். எரே 2:5நீதி 21:17நீதி 29:3நீதி 23:19-22பிரச 11:9-10லூக் 15:30லூக் 16:1லூக் 16:19 அவன் எல்லாவற்றையும் செலவுசெய்து முடித்தபின், அந்த நாடு முழுவதிலும் ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டது; அதனால், அவனுக்கு வறுமை ஏற்படத் தொடங்கியது. 2 நாளாக 33:11எசேக் 16:27ஆமோ 8:9-12ஓசி 2:9-14 எனவே, அவன் அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவனிடம் போய், கூலிக்கு அமர்ந்தான். அங்கு அவன், பன்றிகளை மேய்க்கும்படி வயலுக்கு அனுப்பப்பட்டான். தீத் 3:32 தீமோ 2:25-26ஏசா 1:52 நாளாக 28:22எபே 2:2-3ஏசா 57:17எரே 31:18-19எரே 5:3 அப்பொழுது அவன், பன்றிகள் தின்கின்ற தவிட்டினாலேயே தனது வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டான். ஆனால், ஒருவரும் அவனுக்கு அதையும் கொடுக்கவில்லை. ரோம 6:19-21ஓசி 12:1ஏசா 44:20ஏசா 55:2ஏசா 57:3யோனா 2:2-8புலம் 4:5சங் 142:4

“அவனது புத்தி தெளிவடைந்தபோது, ‘எனது தகப்பனிடம் இருக்கும் கூலிக்காரர்களில் எத்தனையோ பேர், உணவைத் தாராளமாய்ப் பெற்றுக்கொள்கிறார்கள். நானோ, இங்கே பட்டினியில் சாகிறேன். எசேக் 18:28எபே 2:4-5லூக் 15:18-19எபே 5:14அப் 16:29-30அப் 26:11-19தீத் 3:4-6அப் 2:37 நான் புறப்பட்டு என் தகப்பனிடத்திற்குத் திரும்பிப்போய், அவரிடம்: அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். புலம் 3:401 யோவா 1:8-10லூக் 15:21எரே 50:4-5லூக் 18:13சங் 51:3-5மத் 6:14ஓசி 2:6-7 நான் இனிமேலும் உம்முடைய மகன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவன் அல்ல; என்னை உமது கூலிக்காரர்களில் ஒருவனாக வைத்துக்கொள்ளும் எனச் சொல்வேன்’ என்று சொல்லிக்கொண்டான். யோபு 42:6சங் 84:101 பேது 5:6யாக் 4:8-10ஆதி 32:10யோசு 9:24-25லூக் 5:81 கொரி 15:9 எனவே, அவன் எழுந்து தன் தகப்பனிடத்திற்குப் போனான். சங் 103:10-13சங் 86:5சங் 86:15எபே 2:13உபா 30:2-4ஆதி 46:29ஏசா 49:15ஆதி 33:4

“அவன் வெகுதூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருக்கம் கொண்டான்; தகப்பன் ஓடிப்போய், தனது மகனைக் கைகளால் கட்டிப்பிடித்து முத்தமிட்டான்.

“மகனோ தன் தகப்பனிடம், ‘அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். இனிமேலும், உமது மகன் என்று அழைக்கப்படுவதற்கு நான் தகுதியற்றவன்’ என்றான். சங் 51:4லூக் 15:18-191 கொரி 8:12எரே 3:13ரோம 2:4சங் 143:2எசேக் 16:63

“ஆனால் அவனுடைய தகப்பனோ, தனது வேலைக்காரரைப் பார்த்து, ‘விரைவாய் போங்கள், முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து, அதை இவனுக்கு உடுத்துங்கள். இவனுடைய கை விரலிலே மோதிரத்தையும் காலுக்கு பாதரட்சையையும் போடுங்கள். எஸ்த 8:2ஆதி 41:42ஏசா 61:10வெளி 6:11எஸ்த 3:10வெளி 19:8வெளி 7:9சகரி 3:3-5 மிக சிறப்பான விருந்தை உடனே ஆயத்தப்படுத்துங்கள். நாம் விருந்துண்டு கொண்டாடுவோம். மத் 22:2-14ஏசா 25:6சங் 63:5ஆதி 18:7ஏசா 65:13-14நீதி 9:2 ஏனெனில், எனது மகனான இவன் இறந்து போயிருந்தான்; இப்பொழுதோ, மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறான். நான் இவனை இழந்து போயிருந்தேன்; இப்பொழுதோ, எனக்கு இவன் கிடைத்துவிட்டான்,’ என்றான். எனவே, அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள். எபே 2:5எசேக் 34:16லூக் 19:10கொலோ 2:13லூக் 15:4எபே 2:1லூக் 15:32ரோம 6:11

“இவ்வேளையில், மூத்த மகன் வயலில் இருந்தான். அவன் வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டிருக்கையில், ஆடல் பாடலின் சத்தம் அவனுக்குக் கேட்டது. எரே 31:4சங் 150:42 சாமு 6:14பிரச 3:4யாத் 15:20லூக் 15:11-12லூக் 7:32சங் 126:1 எனவே, அவன் வேலைக்காரரில் ஒருவனைக் கூப்பிட்டு, ‘என்ன நடக்கிறது?’ என்று விசாரித்தான். அதற்கு அவன், ‘உம் சகோதரன் வந்திருக்கிறார். அவர் சுகபெலத்துடன் தம்மிடம் மீண்டும் வந்து சேர்ந்ததால், உமது தந்தை மிக சிறப்பான விருந்தை ஆயத்தபடுத்தியிருக்கிறார்’ என்றான். அப் 22:13அப் 9:17லூக் 15:30பிலே 1:16

“அப்பொழுது அந்த மூத்த சகோதரனோ கோபமடைந்து, உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தான். எனவே அவனது தந்தை வெளியே போய், அவனை உள்ளே வரும்படி கெஞ்சிக்கேட்டான். 1 சாமு 18:8ஆதி 4:5-7யோனா 4:9லூக் 15:2ஏசா 65:5யோனா 4:1-4லூக் 13:34லூக் 7:39 அவனோ தன் தந்தையிடம், ‘இதோ, இத்தனை வருடங்களாக நான் உங்களுக்கு அடிமையாய் வேலைசெய்துகொண்டு வருகிறேன், நான் ஒருபோதும் உங்கள் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல் போனதில்லை. அப்படியிருந்தும், நான் எனது நண்பர்களுடன் கொண்டாடும்படி, நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைகூட கொடுக்கவில்லை. லூக் 15:7லூக் 18:11-12மல்கி 3:14சகரி 7:31 யோவா 1:8-101 சாமு 15:13-14ஏசா 65:5லூக் 17:10 ஆனால் வேசிகளோடு உங்கள் சொத்தை வீணடித்த இந்த உங்கள் மகன் வீட்டிற்கு வந்த உடனே, இவனுக்காக நீங்கள் மிக சிறப்பான 1 விருந்தை ஆயத்தப்படுத்தி இருக்கிறீர்கள்’ என்றான். லூக் 15:12-13நீதி 29:3லூக் 15:32லூக் 18:11யாத் 32:11யாத் 32:7லூக் 15:22-23

“அப்பொழுது தந்தை, ‘என் மகனே! நீ எப்பொழுதும் என்னுடனே தான் இருக்கிறாய். எனக்குரியவை எல்லாம் உனக்குரியவைகளே. மாற் 7:27-28ரோம 11:1ரோம 9:4மத் 20:13-16லூக் 19:22-23ரோம 11:35 ஆனால் உம் சகோதரனான இவன் இறந்து போயிருந்தான்; இப்பொழுது மீண்டும் உயிர்பெற்றிருக்கிறான். காணாமல் போயிருந்தான்; மீண்டும் நமக்குக் கிடைத்திருக்கிறான். அதனால், நாம் சந்தோஷத்தோடே கொண்டாடுவது முறையானதே’ என்றான்.” எபே 2:1-10லூக் 15:24ஏசா 35:10ரோம 3:4சங் 51:8யோனா 4:10-11ரோம 15:9-13ஓசி 14:9