ஓசியா 12

Hosea 12

எப்பிராயீம் காற்றை மேய்கிறான், ஓசி 11:12எசேக் 17:10ஓசி 5:13ஓசி 8:7எரே 22:222இராஜா 15:192இராஜா 17:4-6ஏசா 30:6-7

நாள்முழுவதும் கொண்டற்காற்றைப் பின்தொடர்ந்து செல்கிறான்.

பொய்களையும், வன்செயல்களையும் பெருகப்பண்ணுகிறான்.

அவன் அசீரியாவோடு ஒப்பந்தம் செய்கிறான்;

எகிப்திற்கு ஒலிவ எண்ணெய் அனுப்புகிறான்.

யூதாவுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு யெகோவாவிடம் இருக்கிறது. மீகா 6:2ஓசி 4:1ஏசா 10:6ஓசி 2:13ஓசி 8:13ஏசா 10:12ஏசா 3:11ஏசா 8:7-8

யாக்கோபின் மக்களை அவர்களுடைய வழிகளுக்குத்தக்கதாக அவர் தண்டிப்பார்;

அவர்களுடைய செயல்களுக்கேற்றபடி அவர்களுக்குப் பிரதிபலன் செய்வார்.

யாக்கோபு தாயின் கர்ப்பத்திலேயே, ஆதி 25:26ஆதி 32:24-28யாக் 5:16-18ரோம 9:11

தனது சகோதரனின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டான்;

மனிதனானபோது இறைவனோடு போராடினான்.

அவன் தூதனுடனும் போராடி வெற்றிகொண்டான்; ஆதி 35:151 தெச 4:17மல்கி 3:1அப் 7:30-35யாத் 3:2-5ஆதி 32:29ஆதி 35:9-10ஆதி 48:15

அவன் அவருடைய தயவுக்காக அழுது மன்றாடினான்.

இறைவன் அவனைப் பெத்தேலில் கண்டு,

அங்கே நம்முடன் பேசினார்.

சேனைகளின் இறைவனாகிய யெகோவா அவரே; யாத் 3:15ஏசா 42:8சங் 135:13ஆதி 28:16ஆதி 32:30

யெகோவா என்பது அவரது புகழ்வாய்ந்த பெயர்.

யாக்கோபின் மக்களே, நீங்கள் எல்லோரும் இறைவனிடம் திரும்பிவாருங்கள். மீகா 6:8ஓசி 14:1புலம் 3:25-26மீகா 7:7அப் 2:38ஓசி 6:1-3யாக் 2:13சகரி 7:9

அன்பையும் நீதியையும் கடைபிடியுங்கள்;

எப்பொழுதும் உங்கள் இறைவனுக்காகக் காத்திருங்கள்.

ஆனால் இப்பொழுது நீங்கள் கள்ளத்தராசுகளைப் பயன்படுத்துகிற ஆமோ 8:5-6மீகா 6:10-11நீதி 11:11 சாமு 12:31 தீமோ 6:9-10ஆமோ 2:7ஆமோ 3:9ஆமோ 4:1

வியாபாரிபோல் இருக்கிறீர்கள்;

அவன் ஏமாற்றுவதையே விரும்புகிறான்.

அத்துடன் எப்பிராயீமோ, வெளி 3:17சங் 62:101 தீமோ 6:5உபா 8:17ஏசா 10:13-14யோபு 31:24-25நீதி 30:12நீதி 30:20

“நான் மிகவும் பணக்காரன்; நான் செல்வந்தனாகிவிட்டேன்.

என் செல்வத்தினிமித்தம் அவர்கள் என்னில்

அநியாயத்தையோ, பாவத்தையோ கண்டுபிடிக்க முடியாது என்று பெருமைப்படுகிறான்.”

“உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த ஓசி 13:4லேவி 23:40-432 சாமு 7:2நெகே 8:15-17சங் 81:10சகரி 14:16-19யாத் 20:2எஸ்றா 3:4

உங்கள் இறைவனாகிய யெகோவா நானே.

நான் உங்களது நியமிக்கப்பட்ட பண்டிகையின் நாட்களில் இருப்பதுபோல,

நான் திரும்பவும் உங்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணுவேன்.

அத்துடன் நான் இறைவாக்கினருடன் பேசி, 2இராஜா 17:13எசேக் 20:49ஏசா 20:2-5எரே 19:1எரே 7:25யோவே 2:281 இராஜா 13:11 இராஜா 14:7-16

அவர்களுக்கு அநேக தரிசனங்களைக் கொடுத்தேன்;

அவர்களைக்கொண்டு உவமைகளினால் பேசினேன்.”

கீலேயாத் கொடுமையானதா? ஓசி 4:15ஓசி 6:8ஓசி 8:11ஓசி 9:15ஓசி 10:11 இராஜா 17:12இராஜா 17:9-11ஆமோ 4:4

அதன் மக்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்;

கில்காலில் காளைகளைப் பலியிடுகிறார்களா?

அவர்களுடைய பலிபீடங்கள் உழுத வயலிலுள்ள

கற்குவியலைப்போல் ஆகும்.

யாக்கோபு ஆராமுக்கு ஓடிப்போனான்; ஆதி 29:18-28ஆதி 31:41ஆதி 27:43ஆதி 28:1-22உபா 26:5ஆதி 32:27-28

இஸ்ரயேல் தனக்கு மனைவியைப் பெறுவதற்காக வேலைசெய்தான்;

அவளுக்கான பணத்தைக் கொடுப்பதற்கு செம்மறியாடுகளை மேய்த்தான்.

யெகோவா இறைவாக்கினன் ஒருவனை அனுப்பி, அப் 3:22-23யாத் 12:50-51சங் 77:20அப் 7:35-37ஏசா 63:11-14யாத் 13:3ஆமோ 2:11-12மீகா 6:4

இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்;

இறைவாக்கினன் மூலம் இஸ்ரயேலரை பராமரித்தார்.

ஆயினும் எப்பிராயீம் யெகோவாவுக்குக் கசப்பாகக் கோபமூட்டியிருக்கிறான்; எசேக் 18:13தானி 11:182இராஜா 17:7-181 இராஜா 2:33-341 சாமு 2:302 சாமு 1:16உபா 28:37எசேக் 23:2-10

எனவே அவனுடைய யெகோவா, அவனுடைய இரத்தப்பழியை அவன் மேலேயே சுமத்துவார்.

அவன் காட்டிய அவமதிப்புக்குத்தக்கதாய் அவனுக்குப் பதில் செய்வார்.